வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மண்ணும் மனமும்



மண்ணும் மனமும் ஒன்னு
மண் குளிர்ந்தால்
மரம் துளிர்க்கும்
மலர் மலரும்
வீசும் காற்று இதமாகும்.


மனம் குளிர்ந்தால்
இதழ் மலரும்
சொல் இனிக்கும்
சுற்றம் விரியும்
சமூகம் செழிக்கும்.

மண் காய்ந்தால்
நிலம் வெடிக்கும்
மரம் மரக்கும்
மலர் மரிக்கும்
வீசும் காற்று சுடும்.

மனம் காய்ந்தால்
இதழ் சுருங்கும்
சொல் கடுக்கும்
சுற்றம் பிரியும்
சமூகம் சுருங்கும்.

மண் குளிர மேமழை.
மனம் குளிர மகிழ்ச்சி.

மண் மனம்
மனம் மண்
இரண்டும் குளிர்ந்தால்
இந்த உலகம் செழிக்கும்

மண்ணும் மனமும்
குளிரட்டும்
மண்ணுலகம் செழிக்கட்டும்.

நன்றி,
ஜிவா.