அது ஒரு வழக்கமான சென்னை காலை பொழுது, அவன் தான் வாங்கிய புங்க மரக்கன்றுகளை மரங்களே இல்லாத தன்னுடைய தெருவில் நட தன்னுடைய இரண்டு வயது மகனுடன் சென்றான். மொத்தம் ஐந்து மரக்கன்றுகள் தன் வீட்டிற்கு எதிரிலும் பக்கத்திலும் மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்கள் அப்பனும் மகனும்.
தந்தை கம்பியை கொண்டு குழி தோண்ட அந்த இரண்டு வயது குழந்தை மண்ணை அள்ளி வெளியில் போடும். அப்படியே நன்கு கன்றுகளை நட்ட பிறகு அருகில் இருந்த வீட்டின் பக்கத்தில் கடைசி மரக்கன்றை நட மகனும் அப்பனும் குழி தோண்டினார்கள். அங்கு ஒரு அடி தோண்டியதுமே தண்ணீர் வந்துவிட்டது. அதனை கண்ட குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி அதை அள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த அப்பன் மணல் அள்ளி அந்த குழியில் போட்டுக் கொண்டிருந்தபோது அந்த பக்கத்து விட்டுக்காரர் வந்து மரத்தை பற்றி விசாரித்துக் கொண்டார்.
அந்த வழியே வந்த இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் அவனை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் ஒரு எகத்தாளமான பார்வையுடன். சார் நீங்க ஐ.டி.ல தானே வேலை செய்யுறீங்க? அவர் கேள்வியின் பொருள் மரம் நடுவது, மண் அள்ளுவது ஐ.டி./ வெள்ளை காலர் வேலை செய்பவர்கள் வேலை இல்லை. அது ஒரு கீழ்த்தரமான வேலை.
அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் அந்த தந்தை ஒன்றும் அறியாத தன் குழந்தை போல் புரியாமல்.
அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் அந்த தந்தை ஒன்றும் அறியாத தன் குழந்தை போல் புரியாமல்.
வணக்கம் ஜீவா பரமசாமி.
பதிலளிநீக்குஉங்கள் ஆக்கம் முடிவடைந்து விட்டதா இல்லையா என தெரியவில்லை.
மற்றபடி என்ன சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. ஒரு வேளை, கதையில் கடைசியாக வரும் நபர் மரம் நடும் புண்ணியமான செயலை கண்டுகொள்ளாமல் பணம் தரும் வேலையை பற்றி பேசுவதை ஏளனம் செய்கிறீர்களோ? புரியவில்லை.
நன்றி மாசிலா. இது என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி. கதையாக எழுதலாம் என்று தான் நினைத்தேன். எப்படி வந்துள்ளது என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஐந்தாறு வருட பதிவுலக அனுபவம் உள்ளவரிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம் ஜீவா...
பதிலளிநீக்குநன்றி Philosophy Prabhakaran.
பதிலளிநீக்குமுயற்சி செய்து பார்க்கிறேன் வருமா என்று.