செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மாடுகளை கொல்லலாம், மாட்டுக்கறி சாப்பிடலாம்

 ஒரு சிலர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பதற்காக பல கோணங்களில் பல கதைகளை சொல்கிறார்கள். உங்களுக்கு மாட்டுக்கறி பிடிக்கலைனா சும்மா இருங்க, அத விட்டுட்டு மாட்டுக்கு உயிர் இருக்கு, அத வெட்டுனா அதுக்கு வலிக்கும். நம்மெல்லாம் ஆரறிவு உள்ள மனுசங்க, இப்படியெல்லாம் இன்னொரு மிருகத்தை வதைக்ககூடாது... இன்னும் ஏதோதோ.. சொல்றாங்க முடியலப்பா....:) முக்கால்வாசி இப்படி பேசுறவங்க யாரும் மாடோ, ஆடோ கோழியோ வளர்த்துருக்கவே மாட்டாங்க. மாட்டுச்சாணிய மிதிச்சுட்டா காலை மட்டும் காலுவாமா குளிக்கிற ஆளுகளா இருப்பாங்க...

நாங்கெல்லாம் சாப்பிட்டது, படித்தது, உடுத்தியது எல்லாமே மாடும், ஆடும், கோழியும் வளர்த்துதான். மாட்டு பாலை விற்றுத்தான் பள்ளி சென்றோம், மாட்டுச்சாணிய விற்றுத்தான் உடைகள் வாங்கினோம். கோழியை கறிக்கு விற்றுத்தான் புத்தகம் வாங்கினோம். மாடு பால் சும்மா கொடுக்குமா? அதுக்கு பச்சை புல் போடனும், நமக்கு அரிசி சோறு இல்லாட்டினாலும் அதுகளுக்கு நெல் தவிடு போடனும். நம்ம வீட்டை பெருக்குறோமோ இல்லையோ அதுக வீட்டை நாளொன்றுக்கு இரண்டு தடவை சாணியள்ளி சுத்தமா வைக்கணும். எத்தன பேரு மாட்டுக்கு புல் அறுக்க போயி பாம்பு கடி வாங்கியிருக்கோம் தெரியுமோ? நமக்கு உடம்பு சரியில்லைனாலும் சும்மா பொத்தி படுத்துகிட்டு, மாடுகளுக்கு உடம்பு சரியில்லையானா மருத்துவர அழைத்து மருத்துவம் பார்த்து.. மாடு கன்னுக்குட்டி போடும் பொது இரவு முழுதும் கண்முழித்து, ஒரு மாடு நோய்வாய்பட்டு இறந்துச்சுனா கிராமமே துக்கம் விசாரித்து... மாடு, ஆடு கோழி வளர்க்கும் இடம் எவ்வளவு நாற்றம் வரும் தெரியுமா உங்களுக்கு? அய்யா... சொல்ல முடியல.. இவ்வளவு வேலை பார்ப்பது எதற்காக அதுகளுக்கு நாங்க சோறு போடுறோம், அது மூலம் வரும் வருவாயை வச்சு நாங்க சாப்பிடுறோம். அதுக மூலம் வருமானம் வரலைனா மாத்திட்டு வேற மாடோ, ஆடோ வாங்கி எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம்.. இங்க எங்கய்யா தொலைஞ்சுபோச்சு மனிதாபிமானம்? மிருகமானாம்? எங்களின் இறந்த மாட்டின் கறிய சாப்பிடும் தோழர்களை எங்கள் வீட்டுக்குள் விடமாட்டார்கள், தண்ணி தரமாட்டார்கள்... இதுல எங்கய்யா இருக்கு உங்க மனிதாபிமான??? உடனே அதுலாம் தப்புதான்... ஆனாலும் மாட்டுக்கறி சாப்பிடுவது பாவம், மாட்டை கறிக்கு விற்க கூடாது என்று சொல்லத்தொன்றினால், உடனே உங்க கைகாசு போட்டு அந்த மாடுகளை வாங்கி "மாடுகளின் முதியோர் இல்லம்" நடத்துங்கள். அதன் மூலம் மாட்டுக்கறி கிடைக்காமா எங்களை போன்றவர்கள் எல்லாம் திருந்தட்டும்.... :)

உங்க கண்ணுகளுக்கு மாட்டுக்கு உயிர் இருப்பது தெரியும்போது ஏன் நெல், பருத்தி போன்ற தாவரங்களுக்கு உயிர் இருப்பது தெரியமாட்டேங்கிறது? உலகில் உயிர் வாழ நீர் அவசியம்.. நீரை குடிக்கும் அனைத்துக்கும் உயிர் இருக்குமல்லவா? அப்புறம் நீங்க எல்லாம் ஏன் தாவரங்களை உண்கிறீர்கள்? உடனே சொல்வார்கள் தாவரங்களை அப்படியே சாப்பிடுவதில்லை அதில் வரும்/விழும் பழங்களையோ.. காய்களையும் தான் உண்ணுவோம் என்று. உங்களுக்கு உடை எப்படி வருகின்றது? பருத்தியில் இருந்து தானே.. சோறு நெல்லில் இருந்தது தானே...? அரிசி என்ன நெல் தாவரம் விளைவிக்கும் பழமா? நெல் பயிரை அரிவாளால் அறுத்து... அதன் கதிரை கல்லில் போட்டு அடி அடி என்று அடித்து, அப்புறம் செல்லை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ ஆலையில் போட்டு அரைத்து, அப்புறம் அதனை நீரில் வேகவைத்து தானே உண்கிறீர்கள்.. எது எவ்வவு கொடுமை?  பருத்தி செடியின் பூக்கும் திறன் குறைந்த பிறகும் கூட அதற்கு தண்ணீர் விட்டு வளர்த்தா வருகிறீர்கள்? அதனை உயிருடன் புடிங்கி (ஐயோ கொல்றாங்கன்னு பருத்தி செடி கத்துறது கேட்கலையோ?) போட்டுட்டு அடுத்த பயிரை விதைப்பதில்லை? அது மாதிரிதான் ஆடும், மாடும், கோழியும். ஒரு மாட்டால்  பயனில்லை என்றால் அதனை விற்று விட்டு அடுத்த மாடு வாங்குவது. விற்கும் பொழுது அந்த மாடு எதற்கு பயன்படுமோ அதற்குதான் பயன்டுத்துவார்கள், காசு போட்டு வாங்கி வெறும் சாணியா அள்ளுவார்கள்?

உங்களுக்கு பிடிக்கலேன்னா, உடம்புக்கு சேரலைனா சும்மா இருங்க, அதவிட்டுட்டு மாட்டுக்கு அது இருக்கு, இது இருக்கு, அதுக்கு வலிக்கும். அது பால் தரதால அது தாயை போன்றது என்று கற்பனையில் உளராம... சுகமா, மகிழ்ழ்ச்சியா வாழுங்க...... அடுத்த மனிதனை மதித்து.....


8 கருத்துகள்:

  1. சரியான தெளிவான வாதம்.

    அதிலும் மாடு குறிப்பாக பசு மாடு மட்டும்தான் இவர்களது கருணை பார்வைக்குள் வரும். மற்ற விலங்குகளை கொன்று உண்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. ஏன் சக மனிதர்களின் அல்லல பற்றிக் கூட இவர்களுக்கு கவலை இல்லை. எல்லாம் மதம் சார்ந்த அரசியல்தான் இதற்கு காரணம்.

    உங்களின் "மாடுகளின் முதியோர் இல்லம்" சரியான தீர்வு.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பாயிண்ட். சில கருத்துகளை நான் பேசுவதற்காக எடுத்துகொள்கிறேன் பாஸ்.

    ரா. ராஜேஷ்

    பதிலளிநீக்கு
  3. How about some ‘cow’ards using leather belts, leather shoes, leather sofa still talking against cow meat eating....

    பதிலளிநீக்கு
  4. கொன்றால் பாவம் ! தின்றால் போச்சு !!!

    பதிலளிநீக்கு
  5. மனிதர்களை மட்டும் ஏன் விட்டுவிடீர்கள் கொன்று தின்னுங்கள்.
    கொன்றால் பாவம் ! தின்றால் போச்சு !!!

    பதிலளிநீக்கு