வியாழன், 24 ஜனவரி, 2013

ஜார்ஜ் கார்லின்(George Carlin) நகைச்சுவை சிந்தனையாளர்

ஜார்ஜ் கார்லின்(George Carlin) அமெரிக்காவில் பிரபலமான மேடை காமெடியன், சமூக விமர்சகர், எழுத்தாளர். மதம், கடவுள், அரசியல், போர் என எல்லா சமூக விடயங்களையும் தனது நகைச்சுவையான பேச்சினால் மக்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். எழு கேட்ட 
வார்த்தைகள்("Seven Dirty Words") என்ற பேச்சின் மூலம் மிகப் பிரபலமானார். 

Inline image 1

youtube-ல் George Carlin இவருடைய பேச்சுக்கள் நிறைய இருக்கிறது.

கடவுள் பற்றி:
"Religion has convinced people that there’s an invisible man…living in the sky, who watches everything you do every minute of every day. And the invisible man has a list of ten specific things he doesn’t want you to do. And if you do any of these things, he will send you to a special place, of burning and fire and smoke and torture and anguish for you to live forever, and suffer and burn and scream until the end of time. But he loves you. He loves you and he needs money. "
 

அமெரிக்காவின் இராக் போர் பற்றி:
நேரத்தைப் பற்றி:
அவரின் கடைசி மேடைப் பேச்சு (It's Bad For Ya!)

 அவருடைய நகைச்சுவைக்காக ஐந்து முறை கிராம்மி விருதை வாங்கியுள்ளார். மேலும் சில நூல்களை எழுதியுள்ளார்.

குறிப்பு:  இவரின் பேச்சில் நிறைய F*** வார்த்தை இருக்கும், ஆனால் உணமைகளை சொல்லியிருப்பார்.


புதன், 23 ஜனவரி, 2013

கிறிஸ்டோபர் எரிக் ஹிச்சன்ஸ் (1949-2011)

கிறிஸ்டோபர் எரிக் ஹிச்சன்ஸ் ஒரு எழுத்தாளர், பேச்சாளர். எனக்கு அவரின் பேச்சுக்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் அறிமுகமானது. பல மேடைகளில் ஆன்மீகவாதிகளுடன் விவாதம் செய்திருக்கிறார்.
கடவுள் மற்றும் அதன் சார்ந்த தத்துவங்களை அறிவியலின் துணை கொண்டு பல இடங்களில் பொய் என்று விவாதித்து நிரூபித்தியுள்ளார்.

கிறிஸ்டோபர் எரிக் ஹிச்சன்ஸ் 2011 டிசம்பர்  மாதம் 15ந்தேதி இறந்துவிட்டார். என்னை கவர்ந்த பேச்சாளர்களில், சிந்தனையாளர்களில் இவரும் ஒருவர்.

அவரின் பிரபலமான நூல் :http://en.wikipedia.org/wiki/God_Is_Not_Great

The God Debate: Hitchens vs. D'Souza (கடவுள் விவாதம் )

செவ்வாய், 22 ஜனவரி, 2013

சூரிய மின்சாரத்தில் ஒளிரும் விளக்குகள்

வெளியூரில் இருந்த பிறகு நம்ம ஊருக்கு திரும்பபோகிறேன். ஊரில் மின்சாரம் பற்றாக்குறையினால் மக்கள் படும் அவதியை கண்டு ஏன் சூரிய மின்சாரத்தில் ஒளிரும் விளக்குகளை பயன்படுத்த கூடாது என்று தேடியதில் ஒரு சிலவற்றை தேர்வு செய்து நான் வாங்கியுள்ளேன்.
இந்த விளக்குகளை என் கிராமத்தில் உள்ள வீட்டில் பயன்படுத்தி பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன். இந்த விளக்குகளை இங்கே பகிர்ந்தால் பலர் பயன்படுவார்கள் என்ற நோக்கில் பகிர்கிறேன்.

1. கண்ணாடி கூட்டு விளக்கு (lantern)
Inline image 1
மிகவும் லேசானது, விளக்குக்கு மின்சாரத்தை ஏற்ற சூரிய ஒழி படும் இடத்தில் வைத்தால் போதும்.

2. சூரிய கொட்டகை விளக்கு (Solar-Panel Shed Light)
Inline image 2
இந்த விளக்கு ஒரு அறைக்கு தேவையான வெளிச்சம் தரும். solar panel-ஐ வீட்டிற்கு வெளியில் வைத்து விளக்கை வீட்டிற்குள் வைக்கலாம். பகல் இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விளக்கின் அருகில் அமர்ந்து படிக்கும் அளவிற்கு வெளிச்சம் இருக்கும்.

3. தள விளக்கு (Deck Light )
இந்த விளக்கு மாடிப்படிகள், கிராமத்து மோட்டார் வைக்கும் அறை, கோழி தூங்கும் இடம் போன்ற இடங்களில்  வைக்கலாம். சூரியன் மறைந்ததும் தானாக எரியும், சூரியன் வந்ததும் அமரும்.
Inline image 3

4. waka waka சூரிய விளக்கு
இது மிகச்சிறந்த படிக்கும் விளக்கு. மிகவும் இலேசானது, அதனால் குழந்தைகள் எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு மின்சாரத்தை ஏற்ற சூரிய ஒளியில் வைக்க வேண்டும். கொஞ்சம் வேலை அதிகம். ஆனால் மிகவும் பயனுள்ளது.
Inline image 4
5. இரவு மாலை விளக்குகள்
இது வீடு அல்லது தோட்டத்தை அழகு படுத்த உதவும். இது நிறைய ரகங்கள் உள்ளன. இது சூரியன் மறைந்ததும் தானாக எரியும், சூரியன் வந்த பிறகு அணையும்.

Inline image 5
மேல் சொன்ன அனைத்து விளக்குகளும் ரிச்சார்ஜபிள் AA battery கொண்டவை(waka waka தவிர ). அதனால் நாம் எளிதாக batteryஐ மாற்றிக்கொள்ளலாம்.


6. Torge Light

இதை சார்ஜ் ஏற்ற சூரிய ஒழி படும் இடத்தில் வைத்தால் போதும். இதில் இரண்டு விதமான விளக்குகள் உள்ளன, முன் பக்கத்தில் உள்ள பிளாஷ் விளக்கு, பக்கவாட்டில் ஒரு படிக்கும் விளக்கு இருக்கும்.

7.CellPhone Charger with Solar Panel



இது ஒரு சின்ன solar panel மற்றும் rechargeble பெட்டி இருக்கும். அந்த சின்ன பேட்டியில் USB மூலமாக கைபேசிகளை சார்ஜ் ஏற்றலாம்.இதனை rechargeble பாட்டரிகளை சார்ஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.


நான் தேடிய வரை இந்தியாவில் சூரிய விளக்குகளை காணமுடியவில்லை, சூரிய விளக்குகள் மற்றும் charger இந்தியாவில் கிடைத்தால் அதனை பற்றிய விவரங்கள் தெரிந்தால் இங்கே பகிரவும்.

நன்றி,
ஜீவா






வாரிசு அரசியல் தவறா?

தற்பொழுது வாரிசு அரசியலை பற்றி பலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். பெரும்பாலானோர் அது தவறு என்றுதான் சொல்கிறார்கள். வாரிசு அரசியல் எப்படி தவறாகும்?

வாரிசு வேலை, வாரிசு நிலம், வாரிசு வீடு என ஒவ்வொரு மனிதனும் தனது வாரிசுகளுக்கு தன்னால் முடிந்தவற்றை சேர்க்கும் பொது அரசியல்வாதி மட்டும் தனது வாரிசை அரசியல் தலைவனாக்குவது எப்படி தவறாகும்?

நாம் வாழும் சமூக அமைப்பு அவ்வாறு உள்ள போது வாரிசு அரசியல் தவறு என்பது  பொருந்தாத வாதம். நான் என் வாரிகளுக்கு சொத்து சேர்ப்பேன், எனது வாரிசுகளுக்கு நான் செய்யும் வேலை அல்லது அதை விட பெரிய வேலை வாங்கித்தருவேன், ஆனால் அரசியல்வாதி மட்டும் அவர்களின் வாரிசுகளை தலைவனாக்க கூடது. இது எப்படி சரியாகும்?

நாம் சார்ந்திருக்கும் சமுகமும், அரசியலும் வாரிசு சொத்தை மையத்தில் வைத்து தான் இயங்குகிறது. இந்த சமூகத்தை மாற்றும் அரசியலை கொணராமல் வாரிசு அரசியல் தவறு என்பது நம் முதுகை பார்க்காமல் அடுத்தவனின் முதுகை கேலி செய்வது போன்றது.

பொதுவுடைமை சமூகத்தை பற்றி  தொழிலாளர் விண்ணப்பம் - பாரதிதாசன்.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

Android-ல் Flash வீடியோவை பார்க்க

Android has Adobe flash support, even we can't watch movies/songs from internet except YouTube  that needs some latest Flash player and some video codec. But there some applications will help to watch internet videos.

Also Adobe Flash player will not be installed in Android as default. We need to install manually. Install from this link adobe flash player http://helpx.adobe.com/flash-player/kb/archived-flash-player-versions.html#main_Archived_versions (select your proper version player based on your android version). இது குழந்தைகளுக்கு மிகவும் உதவும். www.pbskids.org போன்ற தளங்கள் நிறைய விளையாட்டுகளை தருகிறது. அது போன்ற பிளாஷ் விளையாட்டுகளை android-ல் விளையாட இது உதவும்.

We need to install 2 applications from Google PlayStore to watch movies.
1. Hubi is free application. This will give option to watch or download movies from internet URL.
2. Install MX Player which have some video codec to watch FLV video files.

Note: Adobe flash player will only on Android's default browser and will not work in Chrome & Firefox.

Warning: Also make sure you are not watching movies from Mobile network, that will make you pay more for data connection.

இதை தமிழில் எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன், ஆனால் என்னால் தெளிவாக மொழி பெயர்க்க முடியவில்லை. ஏதாவது சந்தேகம் இருந்தால் மறுமொழியில் கேளுங்கள் சொல்கிறேன்.

நன்றி.