திங்கள், 11 ஜூன், 2012

இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லையாமே?

இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை நான் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தான் நினைத்திருந்தேன். பள்ளிக்கூடத்திலும் படித்ததாக ஞாபகம். அனால் இப்பொழுதுதான் தெரிகிறது இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை, ஆங்கிலமும் இந்தியும் இந்தியாவின் ஆட்சி மொழி என்று..... ஏன் எவ்வளவு பொய்களை சொல்லி எங்களையெல்லாம் ஏமாற்றுகிறார்கள். பல நேரங்களில் வட நாட்டுகாரர்களுடன் வேலை செய்யும் பொது ஏன் தமிழர்கள் இந்தியை படிக்கவில்லை என்று வாக்குவாதாம் வரும்போது அவர்கள் வைக்கும் வாதம் "ஒரு இந்தியன் ஏன் அதன் தேசிய மொழியை கற்கவில்லை என்று? " அட மொக்கைகளா என்று இப்பொழுது தோன்றுகிறது. இனி எவனாவது உனக்கு ஏன்டா இந்தி தெரியாது கேட்கட்டும் வச்சுகிறேன் கச்சரியை... லகுட பாண்டிகளா....
பல மொழிப் பகுதிகளை இணைத்து இந்தியா உருவானதால் எது வளர்ந்ததோ இல்லையோ, ஆங்கிலத்தை தவிர பிற எல்லா மொழிகளும் தேய்ந்தது தான்மிச்சம்.

செவ்வாய், 5 ஜூன், 2012

ஜெர்மன் ஒரே நாளில் சூரிய மின்சாரம் 22கிகாவாட்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளது

ஜெர்மன் அணு உலை ஆபத்தை உணர்ந்து அதனை குறைக்க, பல வழிகளில் மின்சாரம் தயாரிக்க முற்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சூரிய மின்சாரம்.மே 25 தேதியன்றுஒரே நாளில் 22கிகாவாட்கள் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளது .

சூரியன் கொஞ்ச நாளே வரும் அந்த ஊரிலே 22கிகாவாட்கள் தயாரித்துள்ளார்கள் என்றால், சூரியன் சுட்டெரிக்கும் நம் நாட்டில்?????? இதை விடுத்து நம் வயிற்றில் நாமே நெருப்பை கட்டிக்கொள்வது போல் அணு உலை எதற்கு???? நம்ம ஊரில் விஞ்ஞானிகளே இல்லையா அல்லது பஞ்சாங்கம் எழுதத் தெரிந்த நமக்கு, எல்லாத்தையும் சாமியக்கிய நமக்கு, இந்த அறிவியல் விசயங்கள் எல்லாம் புரியாதா?

நடமாடும் கழிவறை

கழிவறை மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த இடம் சுத்தமாக இருக்கும் என்பதற்கு இது உதாரணம். அமெரிக்காவின் நாட்டாமை அரசியலில் பல கருத்து வேற்றுமை நமக்கு இருந்தாலும் ஒரு சில விசயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதில் என்று கழிவறை. ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடுவார்கள் என்றால் அங்கே பல நடமாடும் கழிவறைகள் முளைத்துவிடும். ஒரு முறை இங்குள்ள கிராமத்தில் நடந்த விழாவுக்கு சென்றோம், அது வருடத்தில் ஒருதடவை நடக்கும் திருவிழா. அந்த மூன்று நாட்கள் அதிக மக்கள் குவிவார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு சாலையின் இறுதியில் குறைந்தது இரண்டு நடமாடும் கழிவறைகள் இருந்தது.எனது அலுவலகத்தின் அருகில் சாலையை அகலமாக்கும் பணி தொடங்கியதும் அங்கே வேலை செய்யும் நாலு தொழிலார்களுக்கு ஒரு நடமாடும் கழிவறை வைக்கப்பட்டது. இது எவ்வளவு உதவிகரமாக இருக்கும் உடலுழைப்பு செய்யும் நண்பர்களுக்கு.



அமெரிக்காவிலிருந்து பீசா, பர்கர், போன்ற குப்பை(junk) உணவுகளை மற்றும் பிஞ்சு குழந்தைகள் பள்ளிக்கூடம் என பலதை காப்பி அடிக்கும் நபர்கள் ஏன் இது மாதிரி நல்ல விசயங்களை காப்பியடிப்பது இல்லை? இது மாதிரி நடமாடும் கழிவறை மெரீனா போன்ற மக்கள் கூடும் இடங்களில் வைத்தால் பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்கு நல்ல உதவிகரமாகவும், நம் சுற்று சூழல் சுத்தமாக அமையுமல்லவா?

சனி, 2 ஜூன், 2012

சட்டையும் கடவுளும் ஒன்று?

மனிதன் தன் உடலை மறைக்க சட்டை அணிகிறான். தன் தவறுகளை, பயத்தை மறைக்க கடவுளை பயன்படுத்துகிறான். ஒருவனுக்கு பிடித்த வண்ணச்சட்டை அடுத்தவனுக்கு பிடிக்காது. ஒரு கண்ணுக்கு காவியாக தெரிவது, இன்னொரு கண்ணுக்கு பச்சையாக ஒளிர்கிறது, அதே சட்டை இன்னொன்றுக்கு வெள்ளையாகவும், அடுத்தவனுக்கு சிவப்பு வண்ணமாக மிரட்டுகிறது. 

பூமி ஒன்று, அதனை கடவுள் படைத்தாக சொன்னால் ஒரு கடவுள்தானே இருக்க முடியும்? ஒரு பூமியை பலர் எப்படி உருவாக்கமுடியும்? உலகம் என்ன கணிப்பொறியாளர் உருவாக்கும் மென்பொருளா, ஒருவர் பண்ணியதை அடுத்தவர் காபி பேஸ்ட் பண்ண?

இதில் நீ ஏன் எனக்கு பிடித்த சட்டை போடவில்லை, உன் சட்டை எனக்கு பிடிக்கவில்லை என சண்டை. இவ்வுலத்தில் இது வரை மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், யார் கடவுள் பெரியது என நடந்த சண்டையில் தான் அதிக மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கூகுளில் religion killed more people என தேடுங்கள், இது வரை நாம் கடவுள் எனும் கற்பனையால் செய்யப்பட்ட கொடுமைகளை.............


மனித மிருகமாய் பிறந்த நமக்குள் ஏன் மதமும் சாதியையும் கலந்து, அடுத்தவர்களிடம் இருந்து நம்மை பிரிக்கவேண்டும்?

வெள்ளி, 1 ஜூன், 2012

பாதுகாப்பாக இணையத்தில் உலாவ NoScript firefox add-on

FireFox இணைய உலாவில் பல புரட்சிகள் செய்தது, சென்ற வருடம் வரை அதுதான் உலகத்திலே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. Google Chrome வந்த பிறகு அதன் பயன்பாடு சற்று குறைந்து விட்டது. இருந்தாலும் FireFox என்றுமே ராஜாதான் இணைய உலாவியில்.FireFox -ல் Add-on எனப்படும் பல இயங்கிகள் உலகத்தில் உள்ள பல கணிப்பொறி பொறியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் NoScript. 

பல இணையதளங்கள் விளம்பரம் செய்கின்றோம் என்ற பெயரில் காணக்கூடாத கன்றாவிகளையெல்லாம் போடுவார்கள். நம்ம தமிழ் செய்திதாள்கள், சினிமா பார்க்கும் தளங்கள் என அனைத்து தளங்களும் தங்களால் முடிந்த வரை விளம்பரங்களை போடுவார்கள், இதையெல்லாம் தடுப்பது தான் இந்த NoScript -ன் வேலை. பெரும்பாலும் விளம்பரங்கள் எல்லாம் JavaScript அல்லது பிளாஷ்-ல் இருக்கும். அதனால் குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் Javascript மற்றும் Flash ஐ தடுத்து விட்டால் விளம்பரங்களை தடுக்க முடியும். அதைத்தான் இந்த add-on செய்கிறது.

நிறைய வைரஸ்கள் இணையம் மூலமாகத்தான் பரவும், அதுவும் பிளாஷ் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் வழியாகத்தான் வரும். அதனால் தரமான தளம் என்று தெரிந்தால் மட்டும் ஜாவஸ்க்ரிப்ட் மற்றும் பிளாஷ் ஐ இயங்க அனுமதிக்கலாம், பிற தளங்களுக்கு நமக்கு எது தேவையோ அதனை மட்டும் அனுமதுத்து பாதுகாப்பாக இருக்கலாம்.

பயன்படுத்திபாருங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வீர்கள்.


Inline image 1

பேஸ்புக் பயனர்களின் சுய விவரங்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறதா?

இன்றைய இணைய உலகில் (Social Networking) சமூக வலை தளங்கள் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. பேஸ்புக், linkedIn, Google+ மற்றும் பல வலை தன்லங்கள் உள்ளன. இதில் பேஸ்புக்கில் ஏறத்தாள இணையம் பயன்படுத்தும் அனைவரும் சேர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலை தளம் இன்று ஆலமரம் போல் வளர்ந்து விட்டது. சமீபத்தில் அந்நிறுவனம் IPO  எனப்படும் பணம் புரளும் மார்க்கெட்டில் இறங்கிவிட்டது. அதுவும் மிக அதிக விலையில். எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் அந்நிறுவனத்திற்கு?

நம்மை போல் பயனர்களின் பக்கங்களில் வரும் விளம்பரம் மூலம் தான் பேஸ்புக்கிற்கு பணம் கொட்டுகிறது. அந்த விளம்பரங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி வராது. உதாரணத்திற்கு நம்மூர் தேர்தல் நடைபெறும் நேரத்தில் எனக்கு "Vote for AIADMK" என்று விளம்பரம் வந்தது. அப்படிஎன்றால் என் முழு விவரங்களும் அந்த விளம்பர நிறுவனத்திற்கு தெரிந்தால் தானே இது மாதிரியான விளம்பரம் தரமுடியும்? சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது நண்பர்களுடன் கருத்துக்களை பகிரவும், பழைய நண்பர்களை கண்டுபிடிக்கவும் தான். அனால் இன்றோ அது முற்றிலும் வணிகமையம் ஆகிவிட்டது. 

சமூக வலைத்தளங்கள் தனது பயனர்களின் விவரங்களை விற்று தான் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். தனது சுய விவரங்களை மறைக்கும் எவரும் தனது நண்பர்களை தேட முடியாது, ஏனெனில் சுய விவரங்களை வைத்துதான் நமக்கு இவர்களெல்லாம் தெரிந்துருக்கலாம் என்று பரிந்துரை செய்வார்கள், அல்லது நாம் தேடமுடியும். ஆக சுய விவரங்களை முழுமையாக தராதவர்கள் சமூக வலைத்தளங்களுக்கு தகுதியற்றவர்கள், அப்படி தந்தால் வலைத்தளங்கள் அதனை பிற நிறுவனங்களுக்கு விற்றுவிடும்.

நம்முடைய அஞ்சல்களை பாதுகாக்க, விவரங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க, வலைத்தளங்களில் சேரும் முன்னர் அதனுடைய பாதுகாப்பு பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். நான் பேஸ்புக்-ல்  இருந்து வெளியேறிய பிறகு spam அஞ்சல்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. 

இந்த பதிவின் மூலம் சொல்ல வருவது, பாதுகாப்பாக இணையத்தில் உலாவுங்கள். உங்கள் உரிமையை அடுத்தவரிடம் விற்காதீர்கள்.

Adroid-ல் தமிழ்

Android வந்த காலத்திலிருந்தே தமிழ் போன்ற மற்ற மொழிகளின் எழுத்துக்களை வாசிக்க முடியாத சூழல் இருந்து வந்தது. நாமும் பல முறை(issues) தெரிவித்து வந்தோம். அதற்கு இப்பொழுதுதான் வழி பிறந்துள்ளது.

Android 4.0 (Ice Cream Sandwitch) எனும் புதிய OS-ல் யுனிகோடு எழுத்துருக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எல்லா இதர மொழிகளின் எழுத்துக்களை android-ல் நேரடியாக படிக்கலாம். இதற்கு எந்தவொரு settings தேவையில்லை.

எனது நூறாவது (நன்றி) பதிவு

எல்லாரும் எழுதுகிறார்கள் நாமும் எதையாவாது கிருக்குவோம் என்ற போக்கில் ஒரு ப்ளாக்கரை 2008 ல் ஆரம்பித்தேன். ஆனால் இரண்டு வருடமாக எழுதவில்லை. அப்புறம் அப்படி இப்படின்னு நூறு பதிவுகள் வரை வந்துவிட்டேன். இந்த நூறு பதிவுகளில் என்னுடைய ஆதங்கமே அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் இருக்கும் போது நம்மூர் அரசியலை, நிகழ்வுகளை பற்றி விவாதிக்க நண்பர்கள் இருந்தனர், அதனால் எழுத வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. பிறகு வேலை நிமித்தமாக வெளி நாடுகள் சென்ற போது வெறுமை வந்த போது எழுத(?) துவங்கினேன்.

நிறைய எழுதனும்னு ஆசைதான் ஆனால் கோர்வையாக எழுத தெரியாது.இந்த பதிவில் என் எழுத்துக்களை படித்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.


செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு - கானில்
நாவி லினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

-பாரதிதாசன்.