சமீபத்தில் அப்துல்கலாம் FACEBOOKல் சங்கமித்து இந்திய இளைமைகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்? இவர் ஒரு வாசகம் போட அதை படித்து சிலிர்க்கிறது இளசுகள்.
எல்லோருக்கும் ஒரு கேள்வி இந்த அப்துல்கலாம் தான் பிறந்த நாட்டிற்காக என்ன செய்தார்? இதற்கு பதில் அவர் அணு குண்டு செய்தார், அந்த குண்டு என்ன தீபாவளிக்கு குழைந்தைகள் வெடிக்கும் குண்டா? அல்லது நம் நாட்டில் ஏழைகளின் பசியை போக்கும் உணவா? என்ன செய்தார் இவர் இந்த சமூகத்துக்கு? இவரை ஒரு ஒரு முன் மாதிரியாக கொள்ள?
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பொழுது இவர் அதற்காக ஒரு அறிக்கையாவது விட்டிருப்பாரா?
இவர் பிறந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட போதுஇலங்கையை கண்டித்து ஒரு அறிக்கை விட்டாரா அல்லது மத்திய அரசிடம் பேசினாரா?
சமீபத்தில் இலங்கை அதிபரை இவர் சத்திக்க இலங்கை சென்றார் அதன் காரணம் என்று ஏதாவது சொன்னாரா?
உலகில் தமிழர்கள் அனைவரும் இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க போராடிவரும் சூழ்நிலையில் இந்த சந்திப்புக்கு காரணம்? ஏன் இந்த icon இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க ஒரு வார்த்தை கூட கூறவில்லை?
இந்த கேள்விகளுக்கு வரும் பதில் அவர் என்ன அரசியல்வாதியா என்று வரும். அரசியல்வாதி மட்டும் தான் போது சேவை செய்ய வேண்டுமா? அப்படி பொது சேவை செய்யாத, இச்சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒரு சிறு புல்லை கூட புடுங்காத இவர் எப்படி ஒரு சரியான முன் மாதிரியாக இருக்க முடியும்?
இவர் செய்த (சாதித்த) செயல் இச்சமூகத்தின் பேரழிவுக்கு உதவுமே தவிர வளர்ச்சிக்கு சிறு துரும்பு அளவுக்கு கூட உதவாது என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியிருந்தும் இவர் எப்படி icon இருக்க முடியும்.
இவர் ஊர் ஊராக சென்று ஐ.ஐ.டி மாணவர்களை சந்தித்து உரையாடுவார், அந்த மாணவர்கள் இந்தியர்களின் பெரும் வரித்தொகையில் படித்து விட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் துணிக்கடை, மருந்துகடை போன்ற கடைகளில் சென்று ஆணி புடுங்குவார்கள். இதையாவது இந்த icon தடுக்கலாமே?
ஒரு சில நண்பர்கள் கலாமை விமர்சிப்பதை கூட எதிர்க்கிறார்கள்.ஆனால் இவர் ஒரு விளம்பர பிரியர் என்பதே உண்மை.

அடுத்த பதில் குடியரசு தலைவராக இருக்கும் போதே எளிமையாக இருந்தார். எளிமையாக எங்கு இருந்தார் குடியரசு மாளிகையில் தானே? ஒருவர் இருப்பதற்காக ஒரு ஊரே வசிக்கும் அளவுக்கு இருக்கும் இடம் எளிமையா? டெல்லிக்கும் சென்னைக்கும் பேருந்தில் பயணம் செய்தாரா அல்லது தொடர் வண்டியில் சென்றாரா? எங்கு உள்ளது எளிமை? முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் கல்யாண சிங் தந்து பதவி காலம் முடிந்தவுடன் பேருந்தில் பயணம் செய்தார் , அதனால் அவரை எளிமையான ஆள் என்று கூறலாமா? இங்கே கல்யானசின்கிற்கும் கலாமுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பொழுது இவர் அதற்காக ஒரு அறிக்கையாவது விட்டிருப்பாரா?
இவர் பிறந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட போதுஇலங்கையை கண்டித்து ஒரு அறிக்கை விட்டாரா அல்லது மத்திய அரசிடம் பேசினாரா?
சமீபத்தில் இலங்கை அதிபரை இவர் சத்திக்க இலங்கை சென்றார் அதன் காரணம் என்று ஏதாவது சொன்னாரா?
உலகில் தமிழர்கள் அனைவரும் இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க போராடிவரும் சூழ்நிலையில் இந்த சந்திப்புக்கு காரணம்? ஏன் இந்த icon இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க ஒரு வார்த்தை கூட கூறவில்லை?
இந்த கேள்விகளுக்கு வரும் பதில் அவர் என்ன அரசியல்வாதியா என்று வரும். அரசியல்வாதி மட்டும் தான் போது சேவை செய்ய வேண்டுமா? அப்படி பொது சேவை செய்யாத, இச்சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒரு சிறு புல்லை கூட புடுங்காத இவர் எப்படி ஒரு சரியான முன் மாதிரியாக இருக்க முடியும்?
இவர் செய்த (சாதித்த) செயல் இச்சமூகத்தின் பேரழிவுக்கு உதவுமே தவிர வளர்ச்சிக்கு சிறு துரும்பு அளவுக்கு கூட உதவாது என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியிருந்தும் இவர் எப்படி icon இருக்க முடியும்.
இவர் ஊர் ஊராக சென்று ஐ.ஐ.டி மாணவர்களை சந்தித்து உரையாடுவார், அந்த மாணவர்கள் இந்தியர்களின் பெரும் வரித்தொகையில் படித்து விட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் துணிக்கடை, மருந்துகடை போன்ற கடைகளில் சென்று ஆணி புடுங்குவார்கள். இதையாவது இந்த icon தடுக்கலாமே?
முடியாது, ஏனெனில் இவர் செய்வது எல்லாமே இவரின் விளம்பரத்திற்காக மட்டும் தான். நூறு வருடங்களுக்கு பிறகு வரும் முட்டாள்களுக்கு நாம் எப்படி இருந்தோம் என்று தெரியாவா போகிறது? வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)
ஒரு சில நண்பர்கள் கலாமை விமர்சிப்பதை கூட எதிர்க்கிறார்கள்.ஆனால் இவர் ஒரு விளம்பர பிரியர் என்பதே உண்மை.
//எல்லோருக்கும் ஒரு கேள்வி இந்த அப்துல்கலாம் தான் பிறந்த நாட்டிற்காக என்ன செய்தார்? இதற்கு பதில் அவர் அணு குண்டு செய்தார்// அப்துல் கலாம் அணு விஞ்ஞானி அல்ல, ராக்கெட் விஞ்ஞானி.
பதிலளிநீக்குவிவரம் தெரியாமல் ஏதாவது எழுதாதீர்கள்.
இங்கே படிக்கவும்.
பதிலளிநீக்குhttp://en.wikipedia.org/wiki/Pokhran-II
இரும்படிக்கிற இடத்துல ஈக்கென்ன வேலை?
Mr. Jeevanantham Paramasamy - neengal appadi enna peria pullai pidungi vitteergal abdul kalam pidungathathai ? sonnaal nangalum muyarchippom. Melum veru yaraavathu oru nalla thalaivar ungal manathil irunthal sollungal Abdul kalamai vittuvittu avarai paratti oru arikkai vidalam....
பதிலளிநீக்குஎன்ன குமார் எங்கோயோ எரியுதோ? நான் ஒரு புல்லையும் புடுங்கவில்லை, நான் புல் கூட கிடையாது. நான் சொல்ல வந்தது கலாம் ஒரு சமூகத்தின் முந்திரி(முன் மாதிரி) கிடையாது என்பது தான். என்னை பாதித்த பலர் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களை பாதிப்பார்கள் என்று சொல்ல முடியாது. உங்கள் icon-ஐ நீங்களே தேடுங்கள். கோபப்படக்கூடாது... நிதானமாக சிந்தியுங்கள்....
பதிலளிநீக்குஉங்களுக்கு ஏற்பட்ட எரிச்சலின் காரணமாக தான் இப்படி ஒரு கட்டுரை எழுதி இருக்குறீர்கள் அல்லவா.... ? புரிகிறது எனக்கு ஆனால் நீங்கள் ஒருவரை பற்றி தவறாக எழுதும் பொது அதற்கான தெளிவான விளக்கங்களோடு சேர்ந்து எழுதினால் யாரும் உங்களை கேள்வி கேற்க மாட்டார்கள் மேலும் அப்படி ஒரு தலைவரை பற்றி பேசும் அளவுக்கு நீங்கள் தகுதி உள்ளவர் தானா என்று உங்களை நீங்களே கேளுங்கள் விடை கிடைக்கும் நன்றி.
பதிலளிநீக்குகுமார், நீங்கள் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா, சினிமா விமர்சனம் பண்ண சினிமா எடுக்குறவனா இருக்கணும் சொல்றீங்க, அப்துல்கலாம் அவர்களை விமர்சிக்க எனக்கு எல்லா தகுதியும் இருக்கு, ஏனெனில் அவர் வாங்கும் சம்பளம் நான் கட்டும் வரி.
பதிலளிநீக்குஅப்புறம் தலைவர்னு சொல்லற அளவுக்கு அவருக்கு தகுதியில்லை பாஸ்.
உங்களுக்கு விஜயகாந்த் போன்ற மாபெரும் மனிதர்கள் தான் தலைவர்களை போல தெரிவார்கள் விஞ்ஞானிகளோ குடியரசு தலைவர்களோ இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது உங்களின் வளை பக்கத்தை படித்து என் நேரத்தை வீணடித்தது என் தவறுதான்.. மன்னியுங்கள் நீங்கள் உங்கள் நியாயமான (வேடிக்கையான) விமர்சனங்களை தொடருங்கள் வாழ்த்துகள் விஜயகாந்த் வாழ்க!
பதிலளிநீக்குகுமார்,
பதிலளிநீக்குஎன்னை விஜயகாந்த் தொண்டன் என்று சொல்வதற்கு பதிலா நாலு நல்ல கெட்ட வார்த்தைகளில் திட்டியிருக்கலாம். இந்த பதிவில் http://mathurakaakkaa.blogspot.com/2012/02/blog-post.html நான் சொல்ல வந்தது ஜெயலலிதாவின் திமிரையே தவிர விஜயகாந்தை புகழ அல்ல.