வெள்ளி, 10 மே, 2013

போக்குவரத்து துறை இணையத்தை பார்த்து ஏமாந்துட்டேன்

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக இணையத்தில் தேடும் பொது தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கான வலை பக்கத்தை(http://transport.tn.nic.in/transport/transportTamMain.do) பார்த்து பூரித்து, அந்த பக்கத்தில் எனக்கும் எனது துணைக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சனிக்கிழமை காலை 11மணிக்கு என்று நேரம் குறித்து, அந்த விண்ணப்பங்களை பதிவு எடுத்து சென்றோம் ரொம்ப நம்பிக்கையாக, நம்ம ஊரில இணையத்தில் விண்ணப்பங்கள் நிரப்பும் அளவுக்கு வந்து விட்டது என்று நினைத்து பெருமையாக நினைத்து சென்றோம்.

ஆனால்..... அங்கு எதுவுமே மாறவில்லை, அவர்கள் கேட்கும் கேள்விகளெல்லாம் நீங்களாக வரக்கூடாது, எதாவது இடைத்தரகர் வழியாகத்  தான் வரணும் என்ற மாதிரியே கேள்விகள் இருந்தன. இந்த இணையத்தை நம்பி நாங்கள் அன்று இந்த வெயிலில் குழந்தைகளுடன் அலைந்தோம்.

அதனால் நண்பர்களே... இந்த துறை இணையத்தை பார்த்து ஏமாறவேண்டாம். அங்கு தெளிவான விளக்கங்கள் இல்லை, போகும் முன் தெரிந்தவர்களிடம் நன்றாக விசாரித்து செல்லுங்கள்.

2 கருத்துகள்:

  1. லைசென்சு யார்னா சும்மா தருவாங்கலா பாஸ்? ஒரு ப்ரேக் இன்ஸ்பெக்ட்டர் வேலைக்கு ல ல அல்ல கோ.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா10 மே, 2013 அன்று 8:28 AM

    http://mayavarathaan.blogspot.in/2011/05/561.html

    பதிலளிநீக்கு