வெள்ளி, 9 மார்ச், 2012

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்

19-வது மனித உரிமை கழக கூட்டம் ஜெனிவாவில் நடந்து வருகிறது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என எல்லா தமிழர்களாலும் கவனிக்கப்பட்டது. அதன் திருப்பமாக மார்ச் ஏழாம் தேதி புதன் கிழமை உலக நாட்டாமை அமெரிக்க அரசாங்கம், இதனை முன்மொழிந்து, இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு இந்த மாத இறுதியில் நடக்கும் எனத்தெறிகிறது.

பல ஆயிரம் அப்பாவி தமிழர்களை போர் என்ற யுக்தியை பயன்படுத்தி பல நாடுகளின் உதவியுடன் கொன்ற இலங்கை அரசாங்கம் எந்த வகையிலாவது தண்டிக்கப்படாதா என்று எங்கும் நம் போன்ற தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்திதான் இது. இங்கு அமேரிக்கா போன்ற கழுகு, சிறு கோழிக்குஞ்சுகளை காப்பாற்ற வருவதுதான் சற்று வியப்பாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்குமோ? என்று கவலையாக உள்ளது. இந்த தீர்மானம் இலங்கை அரசை தண்டிக்காமால் தடுக்க உதவுமோ என்ற சந்தேகமும் வருகிறது. யாரவது விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் விளக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக