திங்கள், 18 ஜூலை, 2011

சமச்சீர்கல்வி இந்த ஆண்டே அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சமச்சீர்கல்வி இந்த ஆண்டே அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. வரவேற்கவேண்டிய முகவும் முக்கியமான தீர்ப்பு. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்கிறது. இதில் மக்களின் நலனைவிட ஆளுபவர்களின் ஆணவம்தான் தெறிகிறது. இந்த கருணாநிதி , ஜெயலலிதா சண்டையில் பாதிக்கப்படுவது நாம் தான். உச்ச நீதிமன்றம் போன முறை போல மொக்கையான தீர்ப்பை வழங்காமல் நல்ல தீர்ப்பை வழங்கும் என் எதிர்பார்ப்போம்.

இந்த பற்றி வினவு கட்டுரை:

வியாழன், 14 ஜூலை, 2011

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் (July 15 1903 - October 2 1975)

இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

இன்று தமிழக மக்களுக்கு கல்வி கிடக்க செய்த பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள். அவரை நினைவில்கொண்டு நம் சமூகம் வளர உழைப்போம்

really We MISS you sir. We need a politician like you. But can't find one....

ta.wikipedia.org
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்ம











திங்கள், 11 ஜூலை, 2011

உலகம் உன்னுடையது!


பள்ளம் பறிப்பாய், பாதா ளத்தின்
அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!
பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,
தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈன
உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி! அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்
தாழ்ந்துபோ! குனிந்து தரையைக் கெளவி
ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே,
அழு!இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங் கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே! இதைக்கேள்:
மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!
உன்வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
யுஎன்குலம்ரு என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்: "உடைமை மக்களுக்குப் பொது!"
புவியை நடத்து! பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ள அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

கூகிள் குரோம்-ல் எளிய பல்மொழி எழுதி

https://chrome.google.com/webstore/detail/jafjhocainhibnnfgnohcokdejocdndf?hl=en-US&ct=author

 கூகிள் குரோம்-ஐ ஒரு எழுதியாக பயன்படுத்த ஒரு chrome extension. தமிழ் மற்றும் 14 மொழிகளில் எழுதி, உங்கள் குரோம்-ல் சேமிக்கலாம். நீங்கள் குரோம்-ல் சேமித்ததை அழிக்கும் வரை இருக்கும் (HTML5 local cache has used to store notes).


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்




பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959)

PatKalyanImage.gif

ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

அனைத்து படைப்புகளையும் பார்வையிட வலது பக்கம் உள்ள "நூல்களின் வரிசையை" சொடுக்கவும்.

உங்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதையில் பாதி தெரியும் என்றால், வலது பக்கம் மேலே உள்ள பெட்டியில் டைப் செய்து தேடவும். உங்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படைப்புகளின் தலைப்புகள் கிடைக்கும்.

http://paattukkottai.appspot.com/

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகள்

பாரதிதாசன் படைப்புகள் அனைத்தையும் மிக எளிதாக தேடிக்கிடைக்கும் வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

bharathithasan.jpg

அனைத்து படைப்புகளையும் பார்வையிட வலது பக்கம் உள்ள "நூல்களின் வரிசையை" சொடுக்கவும்.

உங்களுக்கு பாரதிதாசன் கவிதையில் பாதி தெரியும் என்றால், வலது பக்கம் மேலே உள்ள பெட்டியில் டைப் செய்து தேடவும். உங்களுக்கு பாரதிதாசன் படைப்புகளின் தலைப்புகள் கிடைக்கும்.

http://puratchikavingar.appspot.com/

மகாகவி பாரதியாரின் படைப்புகள்


மகாகவி பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் மிக எளிதாக தேடிக்கிடைக்கும் வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பாரதியின் கவிதையில் பாதி தெரியும் என்றால், வலது பக்கம் மேலே உள்ள பெட்டியில் டைப் செய்து தேடவும். உங்களுக்கு பாரதி படைப்புகளின் தலைப்புகள் கிடைக்கும்.

அனைத்து படைப்புகளையும் பார்வையிட வலது பக்கம் உள்ள "நூல்களின் வரிசையை" சொடுக்கவும்.

bharathi.jpg

இங்கே சொடுக்கவும் http://tamilbharathiyaar.appspot.com/

நூல் திரட்டு


இணையத்தில் கிடைக்கும் அனைத்து தமிழ் மின் நூல்களை ஓரிடத்தில் தொகுக்கும் முயற்சி 



காமராஜர் கூகிள் குரோம் தீம்

காமராஜர் கூகிள் குரோம் தீம் 
https://chrome.google.com/webstore/detail/bpkopmebkefegbhdcjinfgplnngohomj?hl=en-US

சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்.

http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/

நன்றி வினவு

கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாள்