அக்டோபர் 8 தேதி சண் பிரான்சிஸ்கோவில் நடந்த விமான சாகாச நிகழ்ச்சி பார்க்க என் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அந்நிகழ்ச்சியில் ஒரு பெரிய விமானம் அதிக சத்தத்துடன் வந்தபொழுது என் மகள் பயந்து அழுதுவிட்டாள். அவளை என் நெஞ்சோடு அனைத்திருக்கையில் அவளின் இதயம் துடிப்பது என் நெஞ்சில் தெரிந்தது. இன்னும் என் பொண்ணு வினமான சத்தம் கேட்டாலே காதை பொத்துகிறாள், அன்றிரவு தூங்கும்போது விமானம் வருது என்று புலம்புகிறாள்.
பொழுதுபோக்கிற்காக பார்க்கும்போது இந்த பயம் என்றால், ஈழத்தில் மனிதர்களை கொள்ள வந்த அந்த விமானங்களை பார்த்த குழந்தைகள் எப்படி இருந்திருக்கும், நினைக்கும் போதே நெஞ்சு பதைக்கிறது.
வேண்டாம் இந்த வன்முறை ஆயுதங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக