ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈரானில் நிலநடுக்கம் சில அமெரிக்கர்களின் வெறி

கடந்த வாரம் ஈரானில் பெரிய நிலநடுக்கம் வந்து 180 மேற்பட்ட மக்கள் உயிரழந்து பல ஆயிரம் மக்கள் வீடிழந்து தவிக்கின்றனர். இந்த செய்தியை மன வருத்ததுடன் படிக்கும் போது அந்த செய்திக்கு மறுமொழிகளை படிக்கும் போது அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வலியை விட அதிகமாக ஏற்பட்டது.

என்னதான் எதிரியாய் இருந்தாலும் ஒரு இயற்கை பேரழிவால் இறக்கும் போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்யும் அதுதான் ஒரு நல்ல மனித மனத்தின் இயல்பு, ஆனால் சில அமெரிக்க மக்களின் மனதோ எதோ ஒரு பெரிய மகிழ்ச்சியான சம்பவம் நடந்தது போல் குதுகளிக்கின்றனர், இதுவா மனித மனம்?

http://news.yahoo.com/powerful-earthquake-strikes-northwestern-iran-142516556.html  (சுட்டியில் உள்ள மறுமொழிகளை படிக்கவும்)

இரானில் கிட்டத்தட்ட ஒருவருடம்  வசித்துள்ளேன், மிகவும் அன்புடன் பேசும் மக்கள். ஒரு நாள் நாங்கள் டெக்ரானில் உள்ள மலையில் ஏறிக்கொண்டிருந்தோம் அப்பொழுது தாகத்திற்காக ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டோம் அந்த வீட்டில் இருந்த பெண்கள் மிகவும் அன்புடன் தண்ணீர் தந்தார்கள். நம்மை எல்லாம் பார்த்தவுடன் தெரியும் நாம் வேறு இனத்தவர்கள் என்று, ஆனால் அது மாதிரி ஒரு எண்ணத்தையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நடு இரவில் கூட பயமில்லாமல் தெருவில் நடந்துள்ளோம். அப்படிப்பட்ட அன்பான மக்களை அவர்களின் மதத்தை கொண்டு எதிரியாக பார்ப்பது மிருகத்தனமே???






2 கருத்துகள்:

  1. இரான் மட்டுமல்ல உலகம் முழுதும் வாழும் மக்கள் அனைவரும் அன்பானவர்கள், அப்பாவிகள். இரானின் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் நம்மால் இயன்ற உதவிகள் செய்ய முற்பட வேண்டும் !!! பகையை பகையால் வெல்ல முடியாது அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்றார் புத்தர். அது போல பகை நாடுகள் இக்கட்டான சூழலில் உதவ முன்வர வேண்டும்.. ஆனால் அமெரிக்கர்கள் பல இச்சம்பவத்தால் குதூகலித்தார்கள் என்ற செய்தியை நான் எங்கும் அறியவில்லை.. அப்படி செய்தி வெளியாகி இருந்தால் சுட்டியைத் தாருங்கள். ஒரு சிலர் உங்களுக்குத் தெரிந்து அப்படி பேசி இருந்தால், அது ஒட்டு மொத்த அமெரிக்கர்களின் கருத்தாக கொள்ள முடியாது !!! அது நிச்சயம் தவறான ஒரு எண்ணமே !!!

    பதிலளிநீக்கு
  2. நான் கொடுத்த சுட்டியில் உள்ள மறுமொழிகளை படிக்கவும் தெரியும்...

    http://news.yahoo.com/powerful-earthquake-strikes-northwestern-iran-142516556.html

    பதிலளிநீக்கு