நவராத்திரி என்றால் என்ன? என்று இணையத்தில் தேடினால் வரும் பதில்களே பல கேள்விகளை தருகிறது. அது போகட்டும் அது என்னவாக இருந்தால் நமெக்கென்ன? எதோ சுண்டல் கிடைத்தால் சரிதான் என்று இருந்தாலும் ஒரு சிலர் நம்மை விடுவதாக இல்லை. ஒரு காலத்தில் மேல்த்தட்டு இந்துக்கள் அதாங்க தெய்வ பாஷை தெரிந்த மக்கள் மட்டும் கொண்டாடி வந்ததை இன்று படித்த வசதியான இந்துக்கள் அதுவும் அந்த தெய்வ பாஷை தெரியாமலே கொண்டாடுகிறார்கள். இது அந்த தெய்வத்துக்கே அடுக்குமா? (இது சத்தியமா தெய்வக்குற்றம் தான்....)
நவராத்திரி பற்றி இணையத்தில் தேடினால் இது பழங்காலந்தொட்டு வந்த தமிழர்கள் விழாவாம். எப்படியெல்லாம் காதுல(அங்க மட்டுமா?) பூவ சுத்துறாங்க? இது வரையிலும் எங்கள் கிராமத்திலோ இல்ல அதன் சுற்று வட்டாரத்திலோ யாரும் இந்த கொலுவை வச்சதா நான் பார்க்கவும் இல்ல, கேட்கவும் இல்ல. நிலத்தை உழ பயன்படும் கொலுவை பற்றி வேண்டுமானால் பார்த்திருக்கிறேன். இந்த விழாவுக்கும் நமது கிராமத்திற்கும் சம்பந்தமே கிடையாது. அப்புறம் எங்க இது பழங்காலந்தொட்டு வர்றது????
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல இந்த சாமி தொடர்பான விசயங்கள் மட்டும் அதிக மக்களிடம் மிகவும் எளிதாக சென்றடைகிறது. இதே மாதிரி ஒரு புரட்சி வீரனையோ அல்லது ஒரு சிந்தனையாளரையோ பின்பற்ற சொன்னா நம்மளை கேனைப்பய மாதிரி பாக்குறாய்ங்க. அப்படியே ஒரு சிலர் பின்பற்றினாலும் அது தலைமுறைகளை தாண்டி வருவதில்லை அல்லது அது ஒரு சாதியாகவோ மதமாகவோ மாறுகிறது.
மனிதனுக்கு இந்த சாமி பயம் இருக்கும் வரை, இந்த சாமிதான் நமக்கு சோறு, குழந்தை மற்றும் இன்ன பிற இத்தியாதிகளை தருதுன்னு நினைக்கும் வரை இந்த மாதிரி கொலு, நவராத்திரி என்று இருந்துகொண்டேதான் இருக்கும் பாவம் இந்த பயந்த(பக்தி) மக்கள்.......
Sabash, I wanna translate some of your posts into English, can I? Just lemme know, :)
பதிலளிநீக்குநன்றி செல்வன்.
பதிலளிநீக்குஎன் பதிவு பயன்பட்டால் தாராளமாக பயன்படுத்துங்கள்