சனி, 15 டிசம்பர், 2012

ரஜினி என்னும் வணிகப்பொருள்

ஒரு நடிகனின் பிறந்தநாளை டிவி நிறுவனங்களில் இருந்து சாமானிய மக்கள் வரை எல்லோரும் கொண்டாடடியாச்சு. வெறும் ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது நாம் மட்டுமே.

கடந்த மூன்று நாட்களாக நடந்தவைகளை பார்க்கும் பொது எனக்கு ரஜினி என்ற மனிதனோ அல்லது நடிகனோ தெரியவில்லை. மாறாக ரஜினி என்ற ஒரு வணிகப்பொருள் தென்பட்டது.

சந்தையில் நல்ல விலைக்கு போகும் என்ற பொருளை மட்டும் தான் வியாபாரிகள் அதனை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்வார்கள். அதே போல் அனைத்துப் பத்திரிக்கைகளும் இன்று ரஜினி பிறந்தநாள், ரஜினி இன்று தந்து ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்கள் ரஜினி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள். என்று ஏராளமான செய்திகள்.

அதே போல் சமூக வலைத்தளங்களிலும் படித்தவர்கள் ஒரு நடிகனின் பிறந்தநாளை தனது பிறந்தநாளை விட மிக விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் நாள் முழுக்க ரஜினி, ரஜினி என்றே பிதற்றினார்கள். அவர்களுக்கு டி.ஆர்.பி ஏறனும்  அதனால இந்த ரஜினி மோகப்போருளை முன்வைத்து நிகழ்ச்சிகளை செய்கிறார்கள்.

ரஜினி பிறந்தநாளுக்காக ஒரு பாடலை போட்டு அதில் காசு பார்க்கிறார்கள். நான் எதோ அவரின் பிறந்தநாள் பரிசு என்று  நினைத்தேன், ஆனால் அதிலும் காசு பார்கிறார்கள். இதே போல் தான் ரஜினி 25 என்ற நூலை போட்டு பணம் சம்பாதித்தார்கள். ரஜினியும் தனது பிறந்தநாள் செய்தியில் எல்லோரும் தந்து அடுத்த படமான "கொச்சடையனை" பார்த்து கொண்டாடுங்கள் என்கிறார்.

ஒரு வியாபாரிக்கு ஒரு பொருளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று நன்றாக தெரியும். அதே போல் நாமளும் நல்ல விளம்பரத்தை பார்த்து சில பொருள்களை வாங்குகிறோம். எல்லோருக்கும் தெரிகிறது ரஜினி என்பது ஒரு சிறந்த மோகப்பொருள், அதன் பெயரில் என்ன செய்தாலும் குறைந்தது 25% மக்கள் பார்ப்பார்கள், வாங்கவும் செய்வார்கள் என்ற நோக்கத்தில் ரஜினி என்ற பொருள் விளம்பரபடுத்தபடுகிறது. அதனால் இங்கு ரஜினி என்ற மனிதனும் தெரியவில்லை நடிகனும் இல்லை ஒரு பொருள் மட்டுமே விற்கப்படுகிறது.

இந்த வியாரிகள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நம்முடைய பொருள் மோகம் தான் காரணம். சினிமா என்பது ஒரு பொழுது போக்கு , அதில் நடிப்பவர்கள் காசுக்காக பல வேடங்களை போட்டு நம்மை மகிழ்விப்பவர்கள் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம், இது தான் அவர்களுக்கு வசதியாய் போகிறது. அதனால் தான் நடிகன்  தலைவன்ஆகிறான்.

நடிகனுக்கு கூடும் கூட்டம், வரும் செய்திகள் மற்றும் பல விடயங்கள் ஏன் ஒரு சமூகப்போராளிக்கு கிடைப்பதில்லை?

ஒவ்வொரு சமூகப்போராளியையும் சாதித் தலைவராய் மாற்றிவிட்டு அவர்களின் சேவைகளை அசிங்கபடுத்தும் இதே சூழலில் நடிகர்களை மட்டும் தூக்கி கொண்டாடுவது ஏன்?

12ந்தேதி ரஜினி பிறந்தநாள் என்றால் 11ந்தேதி என்ன என்று பல பேருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. அந்த நபரை ஒரு மோகப்பொருளாக்க ஆட்கள் இல்லை, விளம்பரம் செய்ய டிவிக்கள்/ பத்திரிக்கைகள் தயாரில்லை.

இந்த மோகம் நிச்சயமாக அடுத்த தலைமுறைக்கு இந்தளவுக்கு வராது என்பதுதான் இப்போதைக்கு ஒரு ஆறுதலான விடயம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக