செவ்வாய், 22 ஜனவரி, 2013

வாரிசு அரசியல் தவறா?

தற்பொழுது வாரிசு அரசியலை பற்றி பலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். பெரும்பாலானோர் அது தவறு என்றுதான் சொல்கிறார்கள். வாரிசு அரசியல் எப்படி தவறாகும்?

வாரிசு வேலை, வாரிசு நிலம், வாரிசு வீடு என ஒவ்வொரு மனிதனும் தனது வாரிசுகளுக்கு தன்னால் முடிந்தவற்றை சேர்க்கும் பொது அரசியல்வாதி மட்டும் தனது வாரிசை அரசியல் தலைவனாக்குவது எப்படி தவறாகும்?

நாம் வாழும் சமூக அமைப்பு அவ்வாறு உள்ள போது வாரிசு அரசியல் தவறு என்பது  பொருந்தாத வாதம். நான் என் வாரிகளுக்கு சொத்து சேர்ப்பேன், எனது வாரிசுகளுக்கு நான் செய்யும் வேலை அல்லது அதை விட பெரிய வேலை வாங்கித்தருவேன், ஆனால் அரசியல்வாதி மட்டும் அவர்களின் வாரிசுகளை தலைவனாக்க கூடது. இது எப்படி சரியாகும்?

நாம் சார்ந்திருக்கும் சமுகமும், அரசியலும் வாரிசு சொத்தை மையத்தில் வைத்து தான் இயங்குகிறது. இந்த சமூகத்தை மாற்றும் அரசியலை கொணராமல் வாரிசு அரசியல் தவறு என்பது நம் முதுகை பார்க்காமல் அடுத்தவனின் முதுகை கேலி செய்வது போன்றது.

பொதுவுடைமை சமூகத்தை பற்றி  தொழிலாளர் விண்ணப்பம் - பாரதிதாசன்.

4 கருத்துகள்:

  1. அரசியலையும், ஆட்சிக்கு வருவதையும் வியாபாரம்னு வெளிப்படையாவே சொல்லிட்டீங்க போல, நாட்டில் அது தானே நடக்குது? இருந்தாலும், ஆட்சியில் இருப்பது மக்களுக்கு சேவை செய்யவே என்ற ஒரு உயர்ந்த நோக்கம் காமராஜர் போன்றவர்கள் மாநிலத்தை ஆண்ட காலத்தில் இருந்தது. தன்னலமற்ற தலைவன் இருந்து, தனக்குன்னு சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சொத்து சேர்க்காமல், மக்கள் பணத்தை கொள்ளையடிக்காமல் ஆட்சி செய்து, அவருக்குப் பின்னர் அவருடைய மகனுக்கும் அதே தகுதி இருந்து, அவரை விட அதிக தகுதிகள் கொண்ட தலைவர் கட்சியில் இல்லாத பட்சத்தில் தலைவரின் மகனை ஜனநாயக ரீதியாக கட்சியினர் தேர்ந்தெடுத்து அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பரவாயில்லை.

    ஆனால் இதுவா நடக்குது? அப்பன் கொள்ளையோ கொள்ளை அடிப்பான், உலகின் முன்னணி பணக்காரனாயிடுவான், ஆனால் மக்களை மட்டும் தெருவில் நிறுத்துவான். அடுத்து இந்த கல்லூளி மங்கனுக்கு பொறந்த களவாணிப் பாயல்கள் இருப்பானுங்க. இவன் மண்டையைப் போட்டதும் அவனுங்க வந்து கொள்ளையடிப்பானுங்க. இந்த நாதாரிங்க எப்படி எளவு எடுத்தாத் தான் என்ன?

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயதேவ்.

    அரசியலும் ஒரு வியாபாரம் தான். அதில் காமராஜர் ஒரு விதி விலக்கு. அவர் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போதுதானே இந்திராகாந்தி பிரதமரானார். வாரிசு அரசியல் நம் நாட்டில் உள்ள சூழலில் தவிர்க்க முடியாதது.

    பதிலளிநீக்கு
  3. ஜெயதேவ் சொன்னதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். தன் தலைமுறையில் சேர்த்த பணம், புகழை அடுத்தவருக்கு எப்படி கொடுப்பார்கள்?

    பதிலளிநீக்கு
  4. வாரிசு அரசியல் மிகத்தவறு. ஒரு தலைவரின் மகன்/மகள் என்பதாலே ஒருவனுக்கு தலைமை பதவி என்பது வேடிக்கையானது. ஆனால் நாம் இருக்கும் சமூகம் வாரிசு அரசியலை அங்கிகரித்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
    இந்த சூழலை மாற்ற நம்முடைய அரசியலை மாற்ற வேண்டும் என்று கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு