வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வாழும் மனிதர்கள் அவர்களின் திருவிழா நேரத்தில் பாரம்பரிய உடை அணிவர். அலுவகங்களிலும் அவரவர் பாரம்பரிய உடை அணிய ஒரு நாள் இருக்கும். பலர் அணிந்து வருவர், நம்மல மாதிரி அரைவேக்காடு எப்போதும் போலவே வரும், உடனே கல்விகனைகள் நம்மை நோக்கி வரும். அதற்கெல்லாம் பதில் சொல்லணும், அது நம் கடமை.
நம்ம ஊரு பாரம்பரிய உடை எது என்று கேட்டால் சேலை, வெட்டி என்று சொல்வார்கள். எப்படி சேலையும் வேட்டியும் நம் பாரம்பரியமாச்சு? நம் முன்னோர்கள் உடுத்தினார்கள் அதனால் என்பார்கள், அதற்கு முன்பு..? (யாரும் கற்காலத்திற்கு போவாதீர்கள்.. :))
சேலையும் வெட்டியும் மண் படாம நிழலில் வேலை செய்பவர்களுக்குத்தான் பொருந்தும். விவசாயம் போன்ற வேலை செய்பவர்களுக்கு அது கொடுமை. கிராமங்களில் பார்த்திருப்பீர்கள் விவசாய வேலை செய்யும் போது ஆண்கள் எல்லாம் உசாராக வெட்டிய கழட்டி வைத்துவிட்டு வெறும் கால் சட்டை மட்டும் அணிந்து வேலை செய்வார்கள், கொஞ்சம் வயதானவர்கள் கோவணம் கட்டுவார்கள்.
ஆனால் பெண்கள் நிலை தான் பாவம். அந்த பதினாறு முழம் துணிய சுத்திக்கிட்டு அது தண்ணியில நனையாம தூக்கி இடுப்பில சொருகிகிட்டு வேலை செய்வார்கள். அப்புறம் மேலே போட்டிருக்கும் முந்தானையால் அடிக்கும் வெயிலுக்கு தண்ணியா ஊத்தும் எவ்வளோ கடினம். நான் சிறுவனா இருக்கும் பொது கவனித்திருக்கிறேன் வயதான பெண்கள் காட்டு வேலை செய்யும் போது மாரப்பை எடுத்து இடுப்பில் சொருகிக்கிறுவார்கள். இந்த சேலை என்பது அவ்வளவு கடினம் பெண்களுக்கு. இது நமது பாரம்பரியமா? இந்த சேலையில் ஏதோ உள்குத்து இருக்கு. அறிந்தவர்கள்
இதே பெண்கள் ஒரு கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து காட்டிலும் தண்ணியிலும் வேலை செய்வதால், அவர்களுக்கு எவ்வளவு ஏதுவாக இருக்கும்?
பாரம்பரிய உடையை தனது அடையாளமாக சொல்லும் மனிதர்கள் ஏன் தனது மொழியை விட்டுவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. தனது குழந்தைக்கு பிற மொழியில் பெயர் வைத்து விட்டு இந்த உடையில் கொண்டுபோய் பாரம்பரியத்தை வைக்கிறார்கள், இவர்களையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் நிறைய தடவை குழம்பியிருக்கிறேன் மனிதர்களின் பெயரால், ஒருவரின் பெயரை வைத்து அவர் எந்த மொழிக்காரர் என்று கண்டுபிடிக்கலாம் என்றால், அது நிறைய தடவை தப்பாகி போகிறது, முக்கியமாக நம்ம ஊர்காரர்களை.
பாரம்பரிய உடை என்பதை விட, நாம் வாழும் இடத்தில் உள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற உடை, ஆடை அணிவதே நம் உடலுக்கு நல்லது. அதனால் உடையெல்லாம் கிடக்கெட்டும் நமது மொழிதான் நமது அடையாளம் என்பதை உணர்ந்து, நமது தாய் மொழியில் பேசுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக