வியாழன், 28 மார்ச், 2013

குழந்தைகள் அடிப்படை கணிதம் கற்க ஒரு குரோம் நிரலி(Chrome Application)


மூன்று வயது நிறைந்த குழந்தைக்கு அடிப்படை கணிதம் கற்றுக் கொடுக்கு ஒரு எளிய குரோம் நிரலி.



குழந்தைகளுக்கு அடிப்படை கணிதம் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலை, எளிமையான முறையில் திரும்ப திருப்ம செய்ய வைப்பதின் மூலம் அவர்களுக்கு கற்றுத் தரலாம். அதன் அடிப்படையில் இந்த நிரலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயன்டுத்தும் வழிகள்:
  1. முதலில் குழந்தையின் பெயரை இணைக்கவும்.
  2. குழந்தைக்கான பயிற்சித் தாளை உருவாக்கவும். அதனை நகல் எடுத்து குழந்தையை செய்ய வைக்க வேண்டும்.
  3. ஒரு வகைக்கு (கூட்டல்/கழித்தல்/பெருக்கல்/வகுத்தல்)  இவ்வளவு நேரம் என்று குறித்து கொண்டு அந்த நேரத்துக்குள் முடிக்கும் வரை நாள் ஒன்று ஒரு/இரண்டு  பயிற்சி தாள் என கொடுத்து வரவேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக குழந்தைக்கு பயிற்சி கொடுத்து வந்தால் சில நாட்களில் நிச்சயமாக அடிப்படை கணிதத்தில் புலியாக குழந்தை மாறும்.

வாய்ப்பு இருக்கிறவர்கள் பயன்படுத்தி பார்க்கவும், குறைகள் இருந்தால் இந்த தெரிவிக்கலாம்.

நன்றி,


வியாழன், 7 மார்ச், 2013

இனத்தின் அடையாளம் உடையா?

வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வாழும் மனிதர்கள் அவர்களின் திருவிழா நேரத்தில் பாரம்பரிய உடை அணிவர். அலுவகங்களிலும் அவரவர் பாரம்பரிய உடை அணிய ஒரு நாள் இருக்கும். பலர் அணிந்து வருவர், நம்மல மாதிரி அரைவேக்காடு எப்போதும் போலவே வரும், உடனே கல்விகனைகள் நம்மை நோக்கி வரும். அதற்கெல்லாம் பதில் சொல்லணும், அது நம் கடமை.

நம்ம ஊரு பாரம்பரிய உடை எது என்று கேட்டால் சேலை, வெட்டி என்று சொல்வார்கள். எப்படி சேலையும் வேட்டியும் நம் பாரம்பரியமாச்சு? நம் முன்னோர்கள் உடுத்தினார்கள் அதனால் என்பார்கள், அதற்கு முன்பு..? (யாரும் கற்காலத்திற்கு போவாதீர்கள்.. :))

சேலையும் வெட்டியும் மண் படாம நிழலில் வேலை செய்பவர்களுக்குத்தான் பொருந்தும். விவசாயம் போன்ற வேலை செய்பவர்களுக்கு அது கொடுமை. கிராமங்களில் பார்த்திருப்பீர்கள் விவசாய வேலை செய்யும் போது ஆண்கள் எல்லாம் உசாராக வெட்டிய கழட்டி வைத்துவிட்டு வெறும் கால் சட்டை மட்டும் அணிந்து வேலை செய்வார்கள், கொஞ்சம் வயதானவர்கள் கோவணம் கட்டுவார்கள்.

ஆனால் பெண்கள் நிலை தான் பாவம். அந்த பதினாறு முழம் துணிய சுத்திக்கிட்டு அது தண்ணியில நனையாம தூக்கி இடுப்பில சொருகிகிட்டு வேலை செய்வார்கள். அப்புறம் மேலே போட்டிருக்கும் முந்தானையால் அடிக்கும் வெயிலுக்கு தண்ணியா ஊத்தும் எவ்வளோ கடினம். நான் சிறுவனா இருக்கும் பொது கவனித்திருக்கிறேன் வயதான பெண்கள் காட்டு வேலை செய்யும் போது மாரப்பை எடுத்து இடுப்பில் சொருகிக்கிறுவார்கள். இந்த சேலை என்பது அவ்வளவு கடினம் பெண்களுக்கு. இது நமது பாரம்பரியமா? இந்த சேலையில் ஏதோ உள்குத்து இருக்கு. அறிந்தவர்கள்

இதே பெண்கள் ஒரு கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து காட்டிலும் தண்ணியிலும் வேலை செய்வதால், அவர்களுக்கு எவ்வளவு ஏதுவாக இருக்கும்?

பாரம்பரிய உடையை தனது அடையாளமாக சொல்லும் மனிதர்கள் ஏன் தனது மொழியை விட்டுவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. தனது குழந்தைக்கு பிற மொழியில் பெயர் வைத்து விட்டு இந்த உடையில் கொண்டுபோய் பாரம்பரியத்தை வைக்கிறார்கள், இவர்களையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் நிறைய தடவை குழம்பியிருக்கிறேன் மனிதர்களின் பெயரால், ஒருவரின் பெயரை வைத்து அவர் எந்த மொழிக்காரர் என்று கண்டுபிடிக்கலாம் என்றால், அது நிறைய தடவை தப்பாகி போகிறது, முக்கியமாக நம்ம ஊர்காரர்களை.

பாரம்பரிய உடை என்பதை விட, நாம் வாழும் இடத்தில் உள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற உடை, ஆடை அணிவதே நம் உடலுக்கு நல்லது. அதனால் உடையெல்லாம் கிடக்கெட்டும் நமது மொழிதான் நமது அடையாளம் என்பதை உணர்ந்து, நமது தாய் மொழியில் பேசுவோம்.

புதன், 6 மார்ச், 2013

சூரிய மின்சாரத்தில் இயங்கும் வானொலி

சமீபத்தில் சூரிய விளக்குகளை பற்றி கூறியிருந்தேன். இங்கே சொடுக்கவும்.

சென்ற வாரம் சூரிய மின்சாரத்தில் இயங்கும் வானொலி ஒன்று வாங்கினேன். இந்த வானொலியில் FM /AM என இரண்டையும் கேட்கலாம். USB வாயிலாக செல்போனை சார்ஜ் பண்ணலாம். மற்றும் இதில் டார்ஜ் லைட் உள்ளது.

இதற்கு மூன்று வழிகளில் மின்சாரத்தை ஏற்றலாம்.
1. சூரிய ஒளி
2. மின்சாரம்
3. கையினால் சுற்றி (மிதிவண்டி டைனமோ)

இதில் வரும் ஒலி(சத்தம்) கேட்பதற்கு போதுமானதாக உள்ளது. வெயில் அதிகமாக உள்ள நம்ம ஊரில் இது பயன்படும் என்ற நோக்கத்தில் வாங்கியுள்ளேன்.

அதே போல் சூரிய மின்சாரத்தில் இயங்கும் ஒலிபெருக்கி ஒன்றையும் வாங்கியுள்ளேன். இது கொஞ்சம் விலை அதிகம் 130$. ஆனால் மிக நன்றாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு திரும்பிய பிறகு மின்சாரம் இல்லாமலே இசை கேட்கலாம். ஒரு தடவை சார்ஜ் செய்தால் 8மணி நேரம் பாட்டு கேட்கலாம். bluttooth வழியாகவும் aux வழியாகவும் பாட்டுகளை கேட்கலாம். இதிலும் செல்போனை USB வழியாக  சார்ஜ் செய்யலாம்.

Amazon links:
Solar Speaker
Solar Radio

குழந்தைகளுக்கு படைப்பு கொள்கைகளை கற்பிப்பது குற்றம்.

நம் உலகம் குறைந்தது 4.5பில்லியன் வருடம் பழமையானது என்று அறிவியலால் உறுதி செய்யப்பட்ட உண்மை. அப்படி இருக்கும் போது பைபிளில் சொல்லியிருப்பது போல் உலகத்தின் வயது 6000 வருடம் என்று பொய்யை குழந்தைகளுக்கு கற்பிப்பது குற்றமாகும்.

உலகம் 6000 வயதுடையது என்று சொல்வது அமெரிக்காவின் நீளம் 17அடி என்று சொல்வதைப்  போன்று  அறியாமையானது.

இதை சொன்னவர்: physics professor Lawrence Krauss

ஆங்கில சுட்டி:
http://www.richarddawkins.net/news_articles/2013/2/5/lawrence-krauss-teaching-creationism-is-child-abuse#

ரிச்சர்டு டாகின்ஸ்


ரிச்சர்டு டாகின்ஸ்(Richard Dawkins)  ஒரு ஆங்கிலேய அறிவியல் விஞ்ஞானி, பேராசியரியர்  மற்றும் ஒரு சிறந்த நாத்திகவாதி. உலகம் மற்றும் உயிர்கள் தோன்றியது பற்றிய டார்வின் தத்துவத்தின் படி நிறைய எழுதியும் பேசியும் வருகிறார்.

இவ்வுலகத்தை படைத்தது கடவுள் என்ற வாசகத்தை அறிவியலின் துணை கொண்டு பல இடங்களில் குறிப்பாக பல ஆன்மிகவாதிகளிடம் விவாதம் செய்துள்ளார். கடவுள் என்ற மாயத்தோற்றம்( God Delusion ) என்ற நூல் மூலம் கடவுள் எந்த தத்துவத்தை உடைத்துள்ளார். அதனை ஒளிப் படமாகவும் எடுத்துள்ளார்.

இவர் எடுத்துக்கு வைக்கும் முக்கியமான கருத்து: " எதையும் ஆதாரம் கொண்டு நம்பனும்".


ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். அது தொழில் வார்த்தை அல்ல

நம்ம ஊர்களில் ஜெராக்ஸ் கடை என்று அழைப்போம், நூல்களை ஜெராக்ஸ் எடுத்து வருகிறேன் என்று கூறுவோம். அதனால் ஜெராக்ஸ் என்பது copy என்பதன் மற்றொரு  வார்த்தை என்று நினைத்து வந்தேன்.

சில நாட்கள் முன்பு நண்பர்களிடம் கதைக்கும் போதுதான் தெரிய வந்தது Xerox என்பது நகல் எடுக்கும் இயந்திரங்களை தாயரிக்கும் நிறுவனம். அது அந்த தொழிலின் வார்த்தை அல்ல என்று.

நகல் (copy) என்பது  ஜெராக்ஸ் என்று மாறிப்போச்சு. இன்னும் எத்தனையோ.

நீங்க ஐ.டி.ல தான வேலை செய்யுறீங்க?

Inline image 2
அது ஒரு வழக்கமான சென்னை காலை பொழுது, அவன் தான் வாங்கிய புங்க மரக்கன்றுகளை மரங்களே இல்லாத தன்னுடைய தெருவில் நட தன்னுடைய இரண்டு வயது மகனுடன் சென்றான். மொத்தம் ஐந்து மரக்கன்றுகள் தன் வீட்டிற்கு எதிரிலும் பக்கத்திலும் மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார்கள் அப்பனும் மகனும்.

தந்தை கம்பியை கொண்டு குழி தோண்ட அந்த இரண்டு வயது குழந்தை மண்ணை அள்ளி வெளியில் போடும். அப்படியே நன்கு கன்றுகளை நட்ட பிறகு அருகில் இருந்த வீட்டின் பக்கத்தில் கடைசி மரக்கன்றை நட மகனும் அப்பனும் குழி தோண்டினார்கள். அங்கு ஒரு அடி தோண்டியதுமே தண்ணீர் வந்துவிட்டது. அதனை கண்ட குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி அதை அள்ளி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த அப்பன் மணல் அள்ளி அந்த குழியில் போட்டுக் கொண்டிருந்தபோது அந்த பக்கத்து விட்டுக்காரர் வந்து மரத்தை பற்றி விசாரித்துக் கொண்டார்.


அந்த வழியே வந்த இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் அவனை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் ஒரு எகத்தாளமான பார்வையுடன். சார் நீங்க ஐ.டி.ல தானே வேலை செய்யுறீங்க? அவர் கேள்வியின் பொருள் மரம் நடுவது, மண் அள்ளுவது ஐ.டி./ வெள்ளை காலர்  வேலை செய்பவர்கள் வேலை இல்லை. அது ஒரு கீழ்த்தரமான வேலை.

அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் அந்த தந்தை ஒன்றும் அறியாத  தன்  குழந்தை போல் புரியாமல்.

வெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்!

அமெரிக்கா என்ற கழுகின் பார்வையில் இருந்து தன் மக்களை கடந்த 14 ஆண்டுகளாக காத்து வந்த சாவேஸ் என்ற தாய் பறவை இறந்துவிட்டது.

Inline image 1
இனி அந்த கழுகு  தன்  விருப்பம் போல் வேட்டையாடலாம்.

Inline image 2

செவ்வாய், 5 மார்ச், 2013

கள்ளச்சாரயம் அரசும் மக்களும்

எனது பள்ளிப் பருவத்தில் என் கிராமம் மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிறைய குடும்பங்கள் சாராயம் காய்ச்சி விற்று வந்தார்கள். ஊரிலே சாராயம் கிடைத்தாலும் சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. குறிப்பாக பள்ளிச்சிருவர்கள் சாராயம் குடிக்க முடியாது. ஏனெனில் சாராயம் விற்பவர்கள் சொந்தக்காரர்களாக/ தெரிந்தவர்களாக இருப்பார்கள். அந்த விற்பனையை தடுக்க போலீசும் நிறைய செய்யும். திரைப்படங்களில் பார்ப்பது போன்று காவல் துறையினருக்கும் சாராயம் விற்பவர்களுக்கும் இடையே பெரிய ஓட்டப் பந்தயமே நடக்கும். நானே நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.

முட்புதர்களில் சாராய கரைசலை பெரிய மண்பானைகளில் மறைத்து வைத்திருப்பார்கள். அதனை காவல் துறையினர் மோப்பம் பிடித்து வந்து உடைப்பார்கள். மாடு மேய்க்கும் போது கூட்டாஞ்சோறு சமைக்க அந்த கரைசலில் போட்ட மண்டை வெள்ளத்தை (சர்க்கரை)  எடுப்போம். அவ்வளவு எளிதாக எங்களுக்கு சாராயம் கிடைத்தாலும் எங்களால் பள்ளி வயதில் குடிக்க முடியாது. கல்லூரி வந்த பிறகுதான் அதாவது ஊரில் இளைஞன் என்று ஆன பிறகுதான் சாராயத்தை பருக வாய்ப்பு கிடைத்தது. அப்படி குடித்தாலும் மிக ரகசியமாகத் தான் குடிக்க முடியும். குடித்த பிறகும் அந்த ரகசியத்தை காப்பாற்றுவதுதான் பெரிய சாதனையாக இருக்கும். சாராயம் குடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருப்பதினால் அடிக்கடி குடிக்க முடியாது, ஏதாவது திருவிழா அல்லது குடும்ப விழா என்றால் மட்டும் தான் குடிக்க முடியும்.

பிறகு கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு தனியார் மது பானைக் கடைகள் வந்தன. முன்னர் சாராயம் எளிதாக கிடைத்தாலும் குடிக்க முடியாது. பின்னர் காசு இருக்காது (படிக்கும் காலத்தில்) அதனால் விழா என்றால் யாரவது வங்கித்தந்தால் மட்டுமே குடிக்க முடியும் என்ற சூழல் வந்தது.

ஆனால் இப்போ?

மக்களை காக்க வேண்டிய அரசே சாராயத்தை விற்கிறது. முன்னர் சாராயம் குடிப்பதே தவறு என்ற மக்கள் குறிப்பாக பெண்கள் மனம் மாறி எப்பவாது குடிக்கலாம் என்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றம் தானாகவா வந்தது. தனியார் கடைகள் சின்ன/பெரிய நகரத்தில் தான் இருக்கும் , அரசு கடைகளோ கிராமத்திற்கு ஒரு கடை என்றளவில் இருக்கிறது. கிராமங்களில் பாதி இளைஞகர்கள் அரசு நடத்தும் மது பானைக் கடைகளில் தான் வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மது மிக எளிதாக கிடைத்து அது ஒரு போதை பொருள் என்பதே மறந்துவிட்டது. சாராயம் ஒரு உற்சாக பானம் என்றளவில் வந்துள்ளது. மக்களும் அரசும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

தன் மக்களை ஒரு அறிவுச் செறிவுள்ள சமுதாயமாக மாற்ற வேண்டிய அரசு மது போதையில் மக்கி போகச் செய்துள்ளது. மக்களும் அந்த போதையில் ஊறி  அது போதை என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

அப்பெல்லாம் சாராயம் குடிக்க ஆத்தங்கரை, ஊரணி என்று ஊரின் ஒதுக்குப் புறமாக சென்று யாருக்கும் தெரியாமல் குடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் இருப்போம். இப்பெல்லாம் அவரவர் வீட்டிலேயே குடிக்கிறார்கள். கேட்டால் வெளியில் போய் குடித்து விழுவது அசிங்கம் என்று பதில். சென்னயில் இருக்கும் போது கிண்டி வழியாக அலுவலகத்திற்கு செல்லும் போது பார்த்தேன், காலை ஒன்பது மணிக்கே குடிமகன்கள் வந்து குடிப்பதை அதுவும் அவசரமாக. அவர்களுக்கெல்லாம் போதை என்பது ஒரு மருந்து போல் ஆகிவிட்டது.

சமூகத்தில் பெரும்பாலானவர்கள் போதையில் மூழ்கித் திளைக்கும் போது எப்படி ஒரு அறிவுச் செறிவுள்ள, தன் பிரச்சினைக்கு போராடத் தெரிந்த சமூகத்தை காண்பது? போதையே மருந்தாகும் போது அந்த போதையை வைத்தே அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள், அந்த போதையில் வரும் வருமானத்தை வைத்துதான் ஆட்சியும் நடத்துகிறார்கள். இப்படியே சென்றால் நம் சமூகம் என்னாகும் என்று நினைக்கும் போது ஒரு வித பயம் தான் வருகிறது. இத மாற்றுவது எப்படி????