தமிழ்நாட்டில் கூடங்குளம் என்ற கிராமத்தில் வெளிநாட்டு உதவியுடன் (ரஷ்யா) ஒரு அணுமின் நிலையம் கடந்த 30 வருடங்களாக கட்டப்பட்டு இயங்கும் தருவாயில் உள்ளது. அதனை பல சில மக்கள் எதிர்க்கிறார்கள், சில கூட்டங்கள் அதனை ஆதரிக்கிறது?
http://en.wikipedia.org/wiki/Nuclear_power_by_country
எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கேள்வி.... கூடங்குளம் அணுமின் நிலையம் கட்ட துவங்கி இருபது வருடத்திரு மேல் ஆகிறது, துவங்கும் பொழுதே அதனை எதிர்த்து நிறுத்தாமல், அது கட்டி முடிக்கப்பட்டு இயங்கும் தருவாயில் அதனை எதிர்ப்பது ஏன்?
வரலாறு தெரியாமல் சொல்லிவிட்டேன், நிறைய போராட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் வெளியில் தெரியவில்லை. எப்படி தெரியும் தினமும் மலம் அல்லும் பத்திரிகைகள் இருக்கும் பொழுது?
ஆதரிக்கும் கூட்டம் சொல்லுவது :
௧. இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது, உடையவே உடையாது. ஏனெனில் இது ரஷ்யாவின் தொழில்நுட்பம்.
௨. இதனால் தமிழ்நாட்டின் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் போகும்.
எதிர்க்கும் கூட்டம் சொல்வது:
௧. அணு உலைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் தமிழ்நாடே சுடுகாடாகும், ஜப்பானின் ஹிரோசிமா போல.
அணு உலை பாதுகாப்பனாதா?
கிழே உள்ள அட்டவணையையின் படி, வளர்ந்த நாடுகள் எல்லாம் மிகவும் குறைவான அணுசக்தியை பயன்படுத்துகின்றன.
Country | Megawatt capacity | Nuclear share of electricity production |
---|---|---|
Argentina | 935 | 7.0% |
Armenia | 376 | 45.0% |
Belgium | 5,943 | 51.7% |
Brazil | 1,901 | 3.0% |
Bulgaria | 1,906 | 35.9% |
Canada | 12,679 | 14.8% |
China | 10,234 | 1.9% |
Czech Republic | 3,686 | 33.8% |
Finland | 2,721 | 32.9% |
France | 63,236 | 75.2% |
Germany | 20,339 | 26.1% |
Hungary | 1,880 | 43.0% |
India | 4,780 | 2.9% |
Japan | 47,348 | 28.9% |
Korea, South (ROK) | 18,716 | 31.1% |
Mexico | 1,310 | 4.8% |
Netherlands | 485 | 3.7% |
Pakistan | 725 | 2.7% |
Romania | 1,310 | 20.6% |
Russia | 23,084 | 17.8% |
Slovakia | 1,760 | 53.5% |
Slovenia
and Croatia
| 696 | 37.9% + 8.0% |
South Africa | 1,800 | 4.8% |
Spain | 7,448 | 17.5% |
Sweden | 9,399 | 37.4% |
Switzerland | 3,252 | 39.5% |
Taiwan (ROC) | 4,927 | 20.7% |
Ukraine | 13,168 | 48.6% |
United Kingdom | 10,962 | 17.9% |
United States | 101,229 | 20.2% |
World | 378,910 | 14% |
கூடங்குளம் அணுஉலைக்கு தொழில்நுட்பம் தந்த ரஷ்யாவே 17% தான் அணு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் பயன்படுத்துகிறது. உலக நாட்டாமை அமெரிக்கா 20% தான் பயன்படுத்துகிறது. விதி விலக்காக பிரான்ஸ் மட்டுமே 75% பயன்படுத்துகிறது. இந்த உதாரணத்தை நாம் எடுத்துகொள்ள முடியாது.இப்படி அணுசக்தியில் வல்லமை படைத்த நாடுகள் எல்லாம் அணு சக்தியை குறைவாக பயன்படுத்தும் போது, அணு சக்தியில் அடுத்த நாட்டிடம் கையேந்தும் நமக்கு ஏன் இந்த உலை?
அணு உலையினால் வரும் கழிவுகள் மிகவும் ஆபாத்தானவை என்று எல்லாருக்கு தெரியும், அப்புறம் ஏன் அணு உலை உடையாது என்று சொல்கிறார்கள். அணு உலை உடையாது என்றால் ஏன் அமெரிக்கா அதிகமான அணு சக்தியை பயன்படுத்தவில்லை? ஆதலால் எந்த விதத்திலும் அணு உலை ஆபாத்தானது.
தமிழ்நாட்டின் மின்சார தட்டுப்பாடு நீங்கும்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்கள்:
௧. நெய்வேலி நிலக்கரி மின் உற்பத்தி நிலையம்
௨. கல்பாக்கம் அணு மின் நிலையம்
௩. முல்லை பெரியாறு அணை, நீர் மின் நிலையம்
௪. எண்ணூர் Thermal பிளான்ட்
௫. மேட்டூர் நீர் மின் நிலையம்
௬. Narimanam Natural Gas Plants
௭ . Muppandal wind farm
இன்னும் பல சிறிய நீர் மின் நிலையங்கள் இருக்கிறது. இவ்வளவு மின் உற்பத்தி நிலையங்கள் இருந்தும் ஏன் நம் மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியவில்லை? இன்னும் ஒரு உற்பத்தி நிலையம் கொண்டுவந்தால் நம் தேவை பூர்த்தியாகி விடுமா? ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுத்தது போக நமக்கு கிடைக்கிறது. தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறல்லவா? உப்பு திண்டவதான் தண்ணி குடிக்கணும், கரநாடகவுக்கு மின்சாரம் தேவை என்றால் அங்கு அணு மின் நிலையத்தை நிறுவ வேண்டியது தானே? தமிழ்நாட்டில் ஏன்?
/* எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கேள்வி.... கூடங்குளம் அணுமின் நிலையம் கட்ட துவங்கி இருபது வருடத்திரு மேல் ஆகிறது, துவங்கும் பொழுதே அதனை எதிர்த்து நிறுத்தாமல், அது கட்டி முடிக்கப்பட்டு இயங்கும் தருவாயில் அதனை எதிர்ப்பது ஏன்? */
பதிலளிநீக்குஐயா ஒரு ஐயம், உங்களுக்கு எத்துனை ஆண்டாக கூடங்குளத்தைப் பற்றி தெரியும். எதிர்ப்பால் மூன்று முறை அடிக்கல் நடும் விழா நிறுத்தப்பட்டது, அதை பற்றி தெரியுமா?
ஐயா அனானி அவர்களே, நான் அணு உலைக்கு ஆதரவானவன் இல்லை. அவ்வாறு அடிக்கல் நடும் விழா நிறுத்தப்பட்டும், எப்படி கட்டி முடிக்கப்பட்டது? இது என்ன சிறுவர்கள் வீடு கட்டி விளையாடும் விளையாட்டா?
பதிலளிநீக்குமீண்டும் சொல்கிறேன் அணு உலை என்றாவாது ஒரு நாள் மனித குலத்திற்கே உலை வைக்கும்