தண்ணியில வீடு கட்டமுடியுமா?
இரும்பு தண்ணியில மிதக்குமா?
காற்றுள படம் வரைய முடியுமா?
இது மாதிரி நிறைய கேள்விகள, ஒரு செயலை செய்ய முடியாதபோது சொல்வார்கள். ஆனால் அறிவியலின் துணைகொண்டு சிந்தித்தோமானால் இவையெல்லாம் சாத்தியமே.
தண்ணியை மிகக்குறைந்த வெப்பநிலையில் உறையவைத்தால் அது பனிக்கட்டியாக, துகள்களாக மாறும். அதவாது திரவ பொருளாக இருந்த நீர் திடப்போருளாக மாறும். திடப்பொருளில் வீடு கட்டலாம் அல்லாவா? அதே நீர் காற்றிலும் பறக்கும், எப்படியென்றால் குறைந்த வெப்பநிலையில் நீர் பனித்தூசியாக மாறும். அப்போது அது பறக்கும்.
எந்த ஒரு பொருளையும் நீரில் மிதக்க வைக்கலாம். எப்படி? மிதத்தல் தத்துவத்தை பயன்படுத்துவது மூலமாக எந்த பொருளையும் அது இரும்போ அல்லது மரமோ மிதக்கவைக்க முடியும். கப்பலில் பயணிக்கும் மனிதனுக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் அவனால் நீரில் பயனிக்கமுடிகிறது. அதுதான் அறிவியல்.
விமான சாகச நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரியும் எப்படி காற்றில் எழுதமுடியும் என்று.
ஆதாலால் எந்தவொரு நிகழ்வையும் நாம் அறிவியலின் உதவிகொண்டு ஆராய்ந்தமானால் அதற்கு விடை கிடைக்கும். முடியாது என்று நினைத்த செயல்களை கூட மிக எளிதாக செய்யமுடியும்.
விடை தெரியவில்லை எனில் தெரியாது என்றுதான் பதில்கூறவேண்டும் அல்லது இதுவாக இருக்கலாம் என்று சந்தேகங்களை பதியவேண்டுமே ஒழிய கற்பனைகளை பதிலாக கூறக்கூடாது. சந்தேகங்கள் இருந்தால்தான் அடுத்துவரும் தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் இந்த விடை காண முடியாத கேள்விகளுக்கு பதில் தேடமுடியும். அதைவிடுத்து ஒரு பொய்யான பதிலை சொல்லிவிட்டால் அந்த பதில் பல தலைமுறையை பாதிக்கும்.
அப்படி அறிவியலால் இன்னும் விடை காணமுடியாத இடத்தில்தான் கடவுள் என்ற ஒரு கற்பனை பதிலை வைத்து பல காலமாக நம்மையெல்லாம் ஏமாற்றுகிறது ஒரு கூட்டம். அறிவியல்கொண்டு சிந்திப்போம் ஏமாற்ற நினைக்கும் கூட்டத்தை சிதறடிப்போம்.
ஜீவா,
பதிலளிநீக்குவணக்கம்,
//அப்படி அறிவியலால் இன்னும் விடை காணமுடியாத இடத்தில்தான் கடவுள் என்ற ஒரு கற்பனை பதிலை வைத்து பல காலமாக நம்மையெல்லாம் ஏமாற்றுகிறது ஒரு கூட்டம். அறிவியல்கொண்டு சிந்திப்போம் ஏமாற்ற நினைக்கும் கூட்டத்தை சிதறடிப்போம்.//
சுருக்கமா சொன்னாலும் சூப்பராக சொல்லிட்டிங்க. ஆரம்பத்தில் பூமி தட்டை, சூரியன் பூமிய சுத்துகிறது சொல்லிக்கிட்டு இருந்த மதவாதிகள், இப்போ பூமி உருண்டை, சூரியனை சுத்துனு சொல்லி கடவுள் செயல் எல்லாம், எனவே கடவுள் இருக்கார்னு சொல்லும் வேடிக்கையை பார்த்தீர்களா?
முதலில் புனித நூல்களை துணைக்கு அழைத்தவர்கள் , இப்போ அறிவியலை துணைக்கு கூப்பிடுகிறார்கள். அறிவியலையும் கடவுள் கொடுத்த வேதம்னு சொன்னாலும் சொல்வாங்க :-))
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வவ்வால்.
பதிலளிநீக்குஇவர்கள் சொல்லும் உலகத்தை படைத்த கடவுளுக்கு பக்கத்தில் இருக்கும் சீனாவை தெரியாத அறியாமையை என்னெவென்று சொல்வது?