கூடங்குளம் அணு உலை பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. உணமையை சொன்னால் அணு உலையினால் வரும் ஆபத்தை நினைக்கும் போது பயமாக உள்ளது. நம் வருங்கால தலைமுறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் யாரும் அணு உலையை ஆதரிக்க மாட்டார்கள்.
இன்றைய அரசின் தவறான அணுகுமுறையினால் மக்களுக்கு தேவையான மின்சாரம் வழங்கமுடியாமல் விவரம் அறியாத, அணு உலை ஆபத்தை உணராத மக்களை அணு உலை வந்தால் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என சிந்திக்க வைக்கிறது.
அணு சக்தியை தவிர்த்து பல முறைகள் மின்சாரம் தயாரிக்க உள்ளது, அதனை நம் நாட்டில் படித்த அறிவாளிகள் செய்யாமல் பணத்துக்காக பொழைக்க, தற்காலிக இன்ப வாழ்க்கைக்காக வாழ்கிறார்கள்.
அணுசக்தியில் வளர்ந்த நாடுகளெல்லாம் மிக குறைந்த அளவில் அல்லது அணு சக்தியை தவிர்க்கும் சூழலில் நமக்கு நாமே உலை வைக்கும் இந்த அணு உலை நமக்கு தேவையில்லை. அணு சக்தியினால் வரும் பேரழிவை நினைக்கும் போது நாம் மின்சாரம் இல்லாமலே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம். மின்சாரத்துடன் நோயாளியாக வாழ்வதை விட மின்சாரம் இல்லாமல் வாழ்வதே மேல்.
எங்கள் வீட்டுக்கு என்னுடைய ஆறாவது வயதில்தான் மின்சாரம் வந்தது. இப்பொழுது மின்சாரம் வந்து இருவது வருடங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஏன் வருங்கால தலைமுறைக்கு நிரந்தர அழிவை தேடித்தரும் சக்திக்கு வலி தேடிக்கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இதற்கு முன் இருந்தது மாதிரியே இருக்கலாம்.
அணு உலை தவிர்ப்போம், நோயற்ற சூழலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக