இன்றைய இணைய உலகில் (Social Networking) சமூக வலை தளங்கள் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. பேஸ்புக், linkedIn, Google+ மற்றும் பல வலை தன்லங்கள் உள்ளன. இதில் பேஸ்புக்கில் ஏறத்தாள இணையம் பயன்படுத்தும் அனைவரும் சேர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலை தளம் இன்று ஆலமரம் போல் வளர்ந்து விட்டது. சமீபத்தில் அந்நிறுவனம் IPO எனப்படும் பணம் புரளும் மார்க்கெட்டில் இறங்கிவிட்டது. அதுவும் மிக அதிக விலையில். எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம் அந்நிறுவனத்திற்கு?
நம்மை போல் பயனர்களின் பக்கங்களில் வரும் விளம்பரம் மூலம் தான் பேஸ்புக்கிற்கு பணம் கொட்டுகிறது. அந்த விளம்பரங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி வராது. உதாரணத்திற்கு நம்மூர் தேர்தல் நடைபெறும் நேரத்தில் எனக்கு "Vote for AIADMK" என்று விளம்பரம் வந்தது. அப்படிஎன்றால் என் முழு விவரங்களும் அந்த விளம்பர நிறுவனத்திற்கு தெரிந்தால் தானே இது மாதிரியான விளம்பரம் தரமுடியும்? சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது நண்பர்களுடன் கருத்துக்களை பகிரவும், பழைய நண்பர்களை கண்டுபிடிக்கவும் தான். அனால் இன்றோ அது முற்றிலும் வணிகமையம் ஆகிவிட்டது.
சமூக வலைத்தளங்கள் தனது பயனர்களின் விவரங்களை விற்று தான் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். தனது சுய விவரங்களை மறைக்கும் எவரும் தனது நண்பர்களை தேட முடியாது, ஏனெனில் சுய விவரங்களை வைத்துதான் நமக்கு இவர்களெல்லாம் தெரிந்துருக்கலாம் என்று பரிந்துரை செய்வார்கள், அல்லது நாம் தேடமுடியும். ஆக சுய விவரங்களை முழுமையாக தராதவர்கள் சமூக வலைத்தளங்களுக்கு தகுதியற்றவர்கள், அப்படி தந்தால் வலைத்தளங்கள் அதனை பிற நிறுவனங்களுக்கு விற்றுவிடும்.
நம்முடைய அஞ்சல்களை பாதுகாக்க, விவரங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க, வலைத்தளங்களில் சேரும் முன்னர் அதனுடைய பாதுகாப்பு பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். நான் பேஸ்புக்-ல் இருந்து வெளியேறிய பிறகு spam அஞ்சல்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
இந்த பதிவின் மூலம் சொல்ல வருவது, பாதுகாப்பாக இணையத்தில் உலாவுங்கள். உங்கள் உரிமையை அடுத்தவரிடம் விற்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக