கழிவறை மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த இடம் சுத்தமாக இருக்கும் என்பதற்கு இது உதாரணம். அமெரிக்காவின் நாட்டாமை அரசியலில் பல கருத்து வேற்றுமை நமக்கு இருந்தாலும் ஒரு சில விசயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதில் என்று கழிவறை. ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடுவார்கள் என்றால் அங்கே பல நடமாடும் கழிவறைகள் முளைத்துவிடும். ஒரு முறை இங்குள்ள கிராமத்தில் நடந்த விழாவுக்கு சென்றோம், அது வருடத்தில் ஒருதடவை நடக்கும் திருவிழா. அந்த மூன்று நாட்கள் அதிக மக்கள் குவிவார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு சாலையின் இறுதியில் குறைந்தது இரண்டு நடமாடும் கழிவறைகள் இருந்தது.எனது அலுவலகத்தின் அருகில் சாலையை அகலமாக்கும் பணி தொடங்கியதும் அங்கே வேலை செய்யும் நாலு தொழிலார்களுக்கு ஒரு நடமாடும் கழிவறை வைக்கப்பட்டது. இது எவ்வளவு உதவிகரமாக இருக்கும் உடலுழைப்பு செய்யும் நண்பர்களுக்கு.
அமெரிக்காவிலிருந்து பீசா, பர்கர், போன்ற குப்பை(junk) உணவுகளை மற்றும் பிஞ்சு குழந்தைகள் பள்ளிக்கூடம் என பலதை காப்பி அடிக்கும் நபர்கள் ஏன் இது மாதிரி நல்ல விசயங்களை காப்பியடிப்பது இல்லை? இது மாதிரி நடமாடும் கழிவறை மெரீனா போன்ற மக்கள் கூடும் இடங்களில் வைத்தால் பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்கு நல்ல உதவிகரமாகவும், நம் சுற்று சூழல் சுத்தமாக அமையுமல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக