வியாழன், 8 நவம்பர், 2012

எங்கும் சாதி எதிலும் சாதி. என்று தீருமோ இந்த சாதி பசி?

ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் தன சாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் போடுவது வழக்கமாக இருந்தது. இப்பொழுது அது திருமணம்/காத்து குத்து போன்ற விழா பத்திரிகையில் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் யாரும் சாதி பார்க்கவில்லை என்று அர்த்தமல்ல, வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை அவ்வளவுதான். அந்த அளவுக்கு வந்ததே மகிழ்ச்சிதான்.


சமீபத்தில் ஒரு சினிமா நடிகை, இன்று இந்தியாவின் பிரபலமான இருசக்கர வாகன நிறுவனம்.
Inline image 1

இன்னும் படித்த பலர் இந்த படிக்காத பட்டத்தை சுமந்துகொண்டுதான் திரிகிறார்கள்.

சாதி மறுப்பு திருமணத்தால் ஒரு கிராமமே பற்றி எரிகிறது.
கலப்புத் திருமணத்தால் தர்மபுரியில் பற்றி எரிந்த தலித் கிராமம்

ஒரு தலைவரின் விழாவில் ஏற்பட்ட கலவரத்தால் பலர் சாவு, இன்னும் தென் மாவட்டங்களில் பதற்றம்.


இப்படியே தினமும் ஒரு சாதி சம்பந்தப்பட்ட செய்தி வருகிறது. இதானால் சகலமானவர்களுக்கும் தெரிவது என்னெவென்றால் சாதியின் கோரப் பசி இன்னும் தீரவில்லை ஏட்டளவில் கூட.

இந்த சாதியும் பக்தியும் நம்மை ஆள்கிறது, நாமளும் கைகட்டி, வாய்பொத்தி நிக்கிறோம்.......

1 கருத்து:

  1. சென்ற ஆட்சியில் சமத்துவபுரம் திறக்கப்படும் போது, மக்கள் சாதி சார்ந்த வன்முறைகளை அடக்கி வைத்திருந்தனர்.
    இந்த ஆட்சி பார்பனியம் போற்றும் ஆட்சி. பார்பனியமோ, சாதி என்பதை கண்டு பிடித்து இன்று வரை ஊக்குவித்து வரும் ஒரு கொள்கை கொண்டது.
    அதனால் இத்தகைய சாதி போற்றும் வன்முறைகள் கடுமையான முறையில் எதிர்க்கபடாது என்று நினைத்து செய்திருக்கலாம்
    அடி பட்ட மக்களின் வலியை அனைத்து மக்களும் உணர்ந்தால், விரைவில் சாதி ஒழியும் ..

    பதிலளிநீக்கு