மோசில்லா பயர்பாக்ஸ் குழுமம் ஓபன் வெப் எனப்படும் திறந்த இணையத்துக்கு நிறைய சேவைகளை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பயர்பாக்ஸ் உலாவி. கூகுளின் குரோம் வருவதற்கு முன்னால் இது தான் மிகச்சிறந்த உலாவியாக இருந்தது. குரோமின் ஆதிக்கத்தில் இதன் பயன்பாடு குறைந்திருந்தாலும் இணைய பொறியாளர்களின் தேர்வு இதுதான்.
பயர்பாக்ஸ் நிறுவனம் இன்னும் பல திட்டங்களை செய்தி வருகின்றது. அதில் ஒன்று தான் பொப்கோர்ன் மேகர்(Popcorn Maker). இது ஒளிப்படங்கள் மற்றும் அதன் சார்ந்த திறமையுள்ளவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் ஒரு இயங்கி தான் இந்த பொப்கோர்ன் மெகர். இதனைப் பயன்படுத்தி மொழிமாற்றம் செய்யலாம், குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் போன்றவற்றை உருவாக்கலாம் அதுவும் உலாவியிலே.
இதனைப் பயன்படுத்த தனியாக எதையும் நிறுவத்தேவையில்லை. வெறும் பயர்பாக்ஸ் அல்லது குரோம் மட்டும் போதும். கீழே உள்ள ஒளி படத்தை பாருங்கள் விளக்கமாக சொல்வார்கள்.
மேலதிக விவரங்களுக்கு https://popcorn.webmaker.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக