ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அமெரிக்காவில் துப்பாக்கி சூடும் சீனாவில் கத்தி குத்தும்.



கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் connecticut-ல் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒரு 20 வயது இளைஞன் மிருகத்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள் (6 மற்றும் 7 வயது) உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அந்த இளைஞன் மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதே வெள்ளிக்கிழமை சீனாவில் உள்ள ஆரம்பபள்ளியில் ஒரு 36 வயது மனித மிருகம் கத்தியால் 22 குழந்தைகளை குத்தியுள்ளான். இதில் யாரும் உயிரிழக்கவில்லை.

இரண்டு கொடூர சம்பவங்களும் ஒரே நாளில், வெவ்வேறு கலாச்சாரம் உள்ள வெவ்வேறு இடத்தில் நடைபெற்றது. ஒரு இடத்தில் அதிக உயிரழப்புகள் மற்றொரு இடத்தில் பலர் காயம். இதற்கு என்ன காரணம்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் மனிதம் தொலைந்தது முதல் காரணம், அவை பொதுவானது. பாரிய உயிரழப்புக்கு காரணம், அந்த மிருகம்  பயன்படுத்திய ஆயுதங்கள் தான் காரணம்.

அமெரிக்க மக்களில் 100 பேருக்கு 88.8 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். துப்பாக்கி மிக எளிதில் ஒரு உயிரை எடுக்கும் ஆயுதம், இதனை மக்களில் பல பேருக்கு கொடுத்தால்  இது போன்ற சம்பவங்களை எப்படி தடுக்க  முடியும்?

அமெரிக்காவில் இது போல் கிறுக்கத்தனமான துப்பாக்கி சூடு சம்பவங்கள் புதிதல்ல. இத்தனை சம்பவங்கள் நடந்தும் அமெரிக்க அரசு ஏன் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்கவில்லை? அமெரிக்க அதிபர்  கண்ணீர் விடு அழுகிறாரே ஒழிய, சட்டத்தை கடுமையாக்க முயற்சிப்பது மாதிரி தெரியவில்லை.

முட்டாப்பயலுக கூட்டத்துக்கு குரங்கு நாட்டாமை.

http://www.cnn.com/2012/12/15/world/asia/china-us-school-attack/index.html?hpt=hp_c2

http://edition.cnn.com/2012/12/14/world/asia/china-knife-attack/index.html

சனி, 15 டிசம்பர், 2012

ரஜினி என்னும் வணிகப்பொருள்

ஒரு நடிகனின் பிறந்தநாளை டிவி நிறுவனங்களில் இருந்து சாமானிய மக்கள் வரை எல்லோரும் கொண்டாடடியாச்சு. வெறும் ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது நாம் மட்டுமே.

கடந்த மூன்று நாட்களாக நடந்தவைகளை பார்க்கும் பொது எனக்கு ரஜினி என்ற மனிதனோ அல்லது நடிகனோ தெரியவில்லை. மாறாக ரஜினி என்ற ஒரு வணிகப்பொருள் தென்பட்டது.

சந்தையில் நல்ல விலைக்கு போகும் என்ற பொருளை மட்டும் தான் வியாபாரிகள் அதனை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்வார்கள். அதே போல் அனைத்துப் பத்திரிக்கைகளும் இன்று ரஜினி பிறந்தநாள், ரஜினி இன்று தந்து ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்கள் ரஜினி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள். என்று ஏராளமான செய்திகள்.

அதே போல் சமூக வலைத்தளங்களிலும் படித்தவர்கள் ஒரு நடிகனின் பிறந்தநாளை தனது பிறந்தநாளை விட மிக விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் நாள் முழுக்க ரஜினி, ரஜினி என்றே பிதற்றினார்கள். அவர்களுக்கு டி.ஆர்.பி ஏறனும்  அதனால இந்த ரஜினி மோகப்போருளை முன்வைத்து நிகழ்ச்சிகளை செய்கிறார்கள்.

ரஜினி பிறந்தநாளுக்காக ஒரு பாடலை போட்டு அதில் காசு பார்க்கிறார்கள். நான் எதோ அவரின் பிறந்தநாள் பரிசு என்று  நினைத்தேன், ஆனால் அதிலும் காசு பார்கிறார்கள். இதே போல் தான் ரஜினி 25 என்ற நூலை போட்டு பணம் சம்பாதித்தார்கள். ரஜினியும் தனது பிறந்தநாள் செய்தியில் எல்லோரும் தந்து அடுத்த படமான "கொச்சடையனை" பார்த்து கொண்டாடுங்கள் என்கிறார்.

ஒரு வியாபாரிக்கு ஒரு பொருளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று நன்றாக தெரியும். அதே போல் நாமளும் நல்ல விளம்பரத்தை பார்த்து சில பொருள்களை வாங்குகிறோம். எல்லோருக்கும் தெரிகிறது ரஜினி என்பது ஒரு சிறந்த மோகப்பொருள், அதன் பெயரில் என்ன செய்தாலும் குறைந்தது 25% மக்கள் பார்ப்பார்கள், வாங்கவும் செய்வார்கள் என்ற நோக்கத்தில் ரஜினி என்ற பொருள் விளம்பரபடுத்தபடுகிறது. அதனால் இங்கு ரஜினி என்ற மனிதனும் தெரியவில்லை நடிகனும் இல்லை ஒரு பொருள் மட்டுமே விற்கப்படுகிறது.

இந்த வியாரிகள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நம்முடைய பொருள் மோகம் தான் காரணம். சினிமா என்பது ஒரு பொழுது போக்கு , அதில் நடிப்பவர்கள் காசுக்காக பல வேடங்களை போட்டு நம்மை மகிழ்விப்பவர்கள் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம், இது தான் அவர்களுக்கு வசதியாய் போகிறது. அதனால் தான் நடிகன்  தலைவன்ஆகிறான்.

நடிகனுக்கு கூடும் கூட்டம், வரும் செய்திகள் மற்றும் பல விடயங்கள் ஏன் ஒரு சமூகப்போராளிக்கு கிடைப்பதில்லை?

ஒவ்வொரு சமூகப்போராளியையும் சாதித் தலைவராய் மாற்றிவிட்டு அவர்களின் சேவைகளை அசிங்கபடுத்தும் இதே சூழலில் நடிகர்களை மட்டும் தூக்கி கொண்டாடுவது ஏன்?

12ந்தேதி ரஜினி பிறந்தநாள் என்றால் 11ந்தேதி என்ன என்று பல பேருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. அந்த நபரை ஒரு மோகப்பொருளாக்க ஆட்கள் இல்லை, விளம்பரம் செய்ய டிவிக்கள்/ பத்திரிக்கைகள் தயாரில்லை.

இந்த மோகம் நிச்சயமாக அடுத்த தலைமுறைக்கு இந்தளவுக்கு வராது என்பதுதான் இப்போதைக்கு ஒரு ஆறுதலான விடயம்.



புதன், 12 டிசம்பர், 2012

மகாகவி பாரதியார் பிறந்தநாள்

இலக்கணத்தில் இலக்கியம் எழுதாமல் இலக்கியத்தில் இலக்கணம் எழுதிய பாமர கவிஞர் மகாகவி பாரதி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழில் உள்ள இலக்கியங்களை படித்து புரிந்து கொள்ள ஒரு தனிப் பள்ளிக்கூடம் போக வேண்டும். அதை மாற்றியவன் பாரதி. சாதிப்பித்துப் பிடித்த சமொக்கத்தில் பிறந்தாலும் "சாதிகள் இல்லையடிப் பாப்பா, குலத்தாழ்ச்சி செய்தல் பாவம்" என்று பாடியவன் பாரதி.

ஒவ்வொரு மனிதனும் இந்த மானுடம் செழிக்க வாழசொன்னவன் பாரதி.

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?


என்று மறவன் பாடுவது போல் அழகாக பார்ப்பானை பற்றி சொன்ன பார்ப்பான் பாரதி பிறந்த நாள் இன்று.

பாரதி மேலும் குறைகள் உண்டு. தமிழில் சமஸ்கிருதத்தை கலந்து எழுதியது, தனது செயல் எல்லாவற்றிற்கும் கடவுள் என்ற இல்லாததை காரணம் காட்டியது.

ஆனால் அவரின் கவிதை வரிகள் இந்தனை புறந்தள்ளி அவரை ஒரு மகாகவி என்று சொல்ல வைப்பது யாராலும் மறுக்கமுடியாது.



 

கடவுள் என்ற மாயத்தோற்றம்




சனி, 24 நவம்பர், 2012

google maps-ல் கட்டிடங்களின் வரைபடங்கள் (floor plans to Google Maps )

Google Maps தற்பொழுது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான, பிரபலாமான மென்பொருள். கூகிள் வரைபடம் கொண்டு இடத்திலிருந்து மற்றொரு இடத்திக்கு மிக எளிதாக சென்று வருகின்றோம். அதில் தற்பொழுது விமானத்தளம், ஷாப்பிங் maal போன்ற கட்டிடங்களின் வரைபடங்களையும் இணைத்துள்ளது கூகிள். கூகிள் பல பிரபலமான கட்டிட உரிமையாளர்களை அவர்களின் கட்டிட வரைபடத்தை இதில் இணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது, பலரும் இதற்கு இசைந்துள்ளனர். இதன் மூலம் நாம் மிக எளிதாக விமானத் தளத்தில் உள்ள வாயிற் கதவுகளை முன்னரே கண்டுகொள்ளலாம்.


firefox மற்றும் chrome -ல் விளம்பரங்களை தடை செய்ய

நாம் இணையத்தில் உலாவும் போது பல இணையங்கள் விளம்பரங்களை போட்டு நம்மை இம்சை செய்யும். அதுவும் சில ஏடா கூடான விளம்பரங்களை போட்டு இம்சிப்பார்கள். அதனை தடுக்க firefox மற்றும் chrome உலாவிகள்(browsers), ஒரு சில add-onsகளை கொண்டுள்ளது. அதனை பயன்படுத்தி இந்த விளம்பரத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்.

Chrome Extension:

firefox add-on:

இந்த add-on போட்ட பிறகு தினத்தந்தி தளம். எந்த சுட்டியை சொடிக்கினாலும் pop-up விளம்பரம் கூட வராது.



இணையத்தில் உலாவும் போது பாதுகாப்பாக உலாவுங்கள். அதற்கு firefox & Chrome உதவும்.

நன்றி,
ஜீவா

வெள்ளி, 16 நவம்பர், 2012

அசைவம் உண்பவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுபவர்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவார்கள்: CBSE 6th class Text Book

இப்படியெல்லாம் ஒருவனால் எழுத முடிகிறது என்றால் அவனுக்கு அசைவப் பிரியர்கள் மீது எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும்? இதையே நாம் மாற்றி சொன்னால் நம்மை அரக்கன் என்று சொல்லி தீவாளி கொண்டாடுவார்கள்.

ஆறாவது படிக்கும் குழந்தைக்கு இப்படி பொய்யான உணமைகளை சொல்லிக்குடுத்து இவர்களுக்கு கிடைப்பது என்ன? உண்மையை பூட்டிவைக்க முடியுமா என்ன? இப்படித்தான் சில மாதங்கள் வரை நான் இந்தி இந்தியாவின் தேசியமொழி என்று நம்பிவந்தேன், பள்ளியிலும் படித்ததாக ஞாபகம், ஆனால் உண்மை வேறு. இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது. அதிலும் இந்தி ஒரு ஆட்சி மொழி, ஆங்கிலத்துடன் இணைந்து.

மற்றொரு உதாரணம் இந்தியாவின் தந்தை காந்தி. அனால் சட்டப்படி இந்தியாவிற்கு தாய், தந்தை என யாருமே இல்லை. அனால் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது என்ன?

இப்படி ஒரு பொய்யை உண்மை போல சொல்லிக் கொடுத்து குழந்தைகளின் மனசை கெடுத்து, ஒரு பொய்யான வரலாறை உருவாக்குவதில் இந்த கருத்தை கொண்ட(எழுதிய) இனத்துக்கு மிகவும் கைவந்த கலை தானே.....

http://www.ndtv.com/article/india/non-vegetarians-lie-cheat-commit-sex-crimes-school-textbook-293082

இந்த முகவரியில் இருக்கும் மறுமொழிகளை பார்த்தால் இன்னும் தெரியும். என்ன சொல்ல??? போங்கடா போக்கத்தவங்ககளா......

PopCorn Maker ஒரு இலவச ஒளிப்பட உருவாக்கி மோசில்லா பயர்பாக்ஸ் குழுமத்திலிருந்து


மோசில்லா பயர்பாக்ஸ் குழுமம் ஓபன் வெப் எனப்படும் திறந்த இணையத்துக்கு நிறைய சேவைகளை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பயர்பாக்ஸ் உலாவி. கூகுளின் குரோம்  வருவதற்கு முன்னால் இது தான் மிகச்சிறந்த உலாவியாக இருந்தது. குரோமின் ஆதிக்கத்தில் இதன் பயன்பாடு குறைந்திருந்தாலும் இணைய பொறியாளர்களின் தேர்வு இதுதான்.

பயர்பாக்ஸ் நிறுவனம் இன்னும் பல திட்டங்களை செய்தி வருகின்றது. அதில் ஒன்று தான் பொப்கோர்ன் மேகர்(Popcorn Maker). இது ஒளிப்படங்கள் மற்றும் அதன் சார்ந்த திறமையுள்ளவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் ஒரு இயங்கி தான் இந்த பொப்கோர்ன் மெகர். இதனைப் பயன்படுத்தி மொழிமாற்றம் செய்யலாம், குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் போன்றவற்றை உருவாக்கலாம் அதுவும் உலாவியிலே.

இதனைப் பயன்படுத்த தனியாக எதையும் நிறுவத்தேவையில்லை. வெறும் பயர்பாக்ஸ் அல்லது குரோம் மட்டும் போதும். கீழே உள்ள ஒளி படத்தை பாருங்கள் விளக்கமாக சொல்வார்கள்.

மேலதிக விவரங்களுக்கு https://popcorn.webmaker.org/

புதன், 14 நவம்பர், 2012

கூகிள் குரோம்-ல் பிளாஷ் பாதுகாப்பு

கூகிள் குரோம்-ல்  பிளாஷை  சான்ட்பாக்ஸ்(sandbox)  எனும் முறையில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் எந்த ஒரு இணையபக்கமும் நம்முடைய  கணிப்பொறியை தாக்க முடியாது.

சான்ட்பாக்ஸ் என்பது ஒரு மூடப்பட்ட பெட்டி போன்றது, அதற்குள் நடக்கும் எதுவும் வெளியில் தெரியாது. குரோமில் பல tabகளை  திறந்து ஒரே நேரத்தில் பல இணையப்பக்கங்களை காணமுடியும். ஒரு tab-ல் வைரஸ் இருந்தால் அது அடுத்த tabக்கு பரவாது. அந்த tab-ல் இருக்கும் எந்த ஒரு ப்ரோக்ராமும் கணிப்பொறியை தொட முடியாது. இதன் மூலம் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பை கூகிள் வழங்குகிறது.



இணையத்தில் பாதுகாப்பாக உலாவ கூகிள் குரோம் அல்லது firefox   பயன்படுத்துங்கள்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

என்ன செய்ய இன்று தீவாளி(DIWALI)யாம்?

தொழிலாளர்களுக்கு
போனசுடன் கிடைக்கும்
விடுமுறை.

குழந்தைகளுக்கு
இனிப்புடன் கிடைக்கும்
புது ஆடை.

வியாபாரிகளுக்கு
கழிவுடன் கிடைக்கும்
இலாபம்.

சாமிகளுக்கு
கிடைக்கும்
சிறப்பு பூசை.

நகர வீதிகளுக்கு
மக்கள் நெருக்கடியில் இருந்து
தற்காலிக விடுதலை.

அரசுக்கு
சாராய விற்பனையில் கொள்ள
இலாபம்.

காவல்துறைக்கு
இரவு முழுதும்
பணி.

நாட்டின்
நாலாவது
தூணுக்கு
தூக்கம்.

வெடி செய்த
தொழிலாளர்களுக்கு தன்
கைகள் வெந்ததிற்கு
ஊதியம்.

வளி மண்டலத்துக்கு
சுகாதார கேடு.

குடிசை வீடுகளுக்கு,
பறவைகளுக்கு,
வாகனங்களுக்கு
அச்சம்.

தீபாவளி என்ற சொல்லுக்கு
தமிழாக்கம்
தீப ஒளி?


திராவிடச் சங்கங்களுக்கு
வேலை நாட்களில்
ஒன்று.

பக்கத்து வீட்டை விட
அதிக பட்டாசு வாங்கியதில்
பெருமை.

அடுத்த வருடம்
அடுத்த வீட்டை விட
அதிகம் வாங்க வேண்டும்
குறிக்கோள்.

இரண்டு நாள்
களித்து,
கழிந்து
கடன்பட்டது/ கரியாய் போனது எவ்வளவு
கணக்கு.

நானும்
தீவாளி கொண்டாடுவேன்
மதச்சார்பின்மை.

நானும்
தீவாளி கொண்டாடிட்டேன்
உயர்குடி இந்து.

தீவாளி யாருக்கு?
பைத்தியம்.

தீவாளி ஏன்
கொண்டாட வேண்டும்?
நாத்திகம்.

உனக்கு
எனது
உளங் கனிந்த தீவாளி வாழ்த்துகள்
திணித்தல்.

ஒரு இனத்தார்
அதிகாரவர்க்கத்தில்
இருந்ததினால்/இருப்பதால்
இன்று
இது அரசு விடுமுறை.


ஏன் தீவாளி(DIWALI)
கொண்டாட வேண்டும்
என்று சொல்லிவிட்டு
வாழ்த்துக்களை பகிரவும்.


என் சமூகத்தில் உள்ள ஏற்ற
தாழ்வுக்கு காரணமானவர்களின்
மகிழ்ச்சியை நான்
எப்படி பங்கிட்டுக்கொள்வது?
என் துக்கத்தை அவர்கள்
புரிந்து கொள்ளாத போது?

மதுரைக் கோவிலில்,
ஸ்ரீரங்க கோவிலில்,
மற்றும் பல.... கோவிலில்
என் தாத்தனால்
நுழைய முடியவில்லை,
இன்று நான், உன்னுடன்
சேர்ந்து தீவாளி
கொண்டாடவேண்டும்.

நானும் தீவாளி கொண்டாடுறேன்,
வா என்னோடு
வந்து
எங்கள் கருப்பசாமிக்கு
கிடா/கோழி வெட்டு
எங்கள் சோனை முத்தையாவுக்கு
மொட்டை போடு
எங்கள் காளியம்மாவுக்கு
தீச்சட்டி எடு
அப்புறம் நான் தீவாளி கொண்டாடுறேன்.

இதெல்லாம்
உன்னால் முடியாதல்லவா?
அப்புறம் ஏண்டா
என்னை தீவாளி கொண்டாடச்சொல்லுற?


வியாழன், 8 நவம்பர், 2012

Google Analytics கொண்டு நம் இணைய தளத்தை எத்தனை வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று நேரலையாக காணலாம்

Google Analytics எனும் இயங்கி இணைய தளப் பொறியாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதன் மூலம் எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள், அவர்கள் இந்த விதமான உலாவியை, OSஐ பயன்படுத்துகிறார்கள் என்று மிகவும் துல்லியமாக அறியாலாம். இந்த விவரங்கள் மூலம் நமது தளத்தை வடிக்கலாம். உதாரணமாக இணைய பக்கத்தை உருவாக்கும் பொறியாளர் firefox அல்லது chrome பயன்படுத்திதான் சரிபார்ப்பார்கள். ஆனால் அதிக பயனர் IEஐ பயன்படுத்தினால் ஒரு சில பக்கங்கள் சரியாக வேலை செய்யாது. Google Analytics ஐ பயன்படுத்தி அதிக பயனர் எந்த உலாவியில் வருகிறார்கள் என்று தெரிந்தால் அந்த உலாவியில் சரியாக் வேலை செய்யுமாறு பக்கத்தை வடிக்கலாம். இதே விளம்பரம் செய்பவர்களுக்கும் பொருந்தும். விளம்பரங்களை இடத்திரு தகுந்தவாறு தரலாம்.

எவ்வாறு எனது பிளாக்கரில் இணைப்பது?

௧. https://www.google.com/analytics பக்கத்துக்கு செல்லுங்கள்
௨. ஏற்கனவே ஜிமெயில் உள்ளவர்கள் அதைக் கொண்டு உள்ளே செல்லலாம்.
௩. வலது பக்கம் இருக்கும் "Admin" என்ற லிங்கை சொடுக்கவும்
௪. "+ New Account" பட்டனை அழுத்தவும்
௫. "+ New Property (Web or Page))" பட்டனை அழுத்தவும்
௬. இந்த பக்கத்தில் உங்களின் இணைய முகவரியை தரவும், பிறகு "Get Tracking ID" என்ற பட்டனை அழுத்தவும்
௮.அடுத்த பக்கத்தில் "This is your tracking code. Copy and paste it into the code of every page you want to track." என்ற வாக்கியத்திற்கு கிழே ஒரு பெட்டியில் HTML code கொடுக்கப்பட்டிருக்கும். அதனை copy செய்து கொள்ளவும்.
௯. உங்களது ப்ளாக்கரை வடிவமைக்கும் பக்கத்திற்கு சென்று HTML-ஆக மற்றும் பக்கத்திற்கு சென்று இந்த copy செய்த code-ஐ<head> என்ற வார்த்தைக்கு கிழே paste செய்து பக்கத்தை சேமியுங்கள்.

அவ்வளவு தான் Google Analytics உங்கள் பக்கத்தை பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பித்துவிடும். இதில் நேரலையாகவும் பார்க்கலாம் கிழே உள்ளது மாதிரி.

நன்றி,
ஜீவா