சங்கம் வைத்து மொழியின் செழுமையை வளர்த்த இனத்தில் பிறந்த நாமா இப்படி? தமிழ் தாய் வாழ்த்துப்பாடலுக்கு எழுந்திருக்காத கால்கள் இந்திய தேசிய கீதத்திற்கு எழுகிறது. ஒரு இனத்தை அழிக்க முதலில் அந்த இனத்தின் மொழியைத்தான் அழிக்க வேண்டும் என்பார்கள். நம் தாய் மொழியை காத்து வளர்க்க நாமில்லை என்றால் வேறு யார் வருவார்????
சனி, 21 ஜனவரி, 2012
தமிழ் சங்கத்தில் தமிழுக்கு பஞ்சம்
வெளிநாடு வாழ் நம் மக்களால் நடாத்தப்பட்டு வரும் தமிழ் சங்கத்தில் தமிழ் மொழிக்கு பஞ்சம், அவர்களால் ஒரு நாள் கூட நல்ல தமிழில் உரையாட முடியல. சமீபத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். ஒரு குழந்தை கூட முழுவதுமாக ஒரு வார்த்தை தமிழில் பேசமுடியவில்லை. தமிழர் திருநாள் "டமிலர் திருநல்" ஆகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக