சனி, 14 ஜனவரி, 2012

நோயையும் (virus) கொடுத்து மருந்தையும்(antivirus) கொடுக்கும் மைக்ரோசாப்ட்

சமீபத்தில் இரண்டு கணிப்பொறிகள் வாங்கினேன். உபுண்டு உள்ள கணிப்பொறி வாங்கலாம் என்றால் இப்பொழுது எந்த நிறுவனமும் உபுண்டுடன் விற்பதில்லை. சில நாட்களுக்கு முன்னாள் dell நிறுவனம் விற்று வந்தது, ஆனால் இப்பொழுது யாரும் விற்பதில்லை. ஏனென்றால் பயன்படுத்த முடியாது ஒரு OS க்கு 150$  கொதுப்பத்தற்கு மனசு இல்லை, சரி விண்டோஸ் கணிப்பொறி வாங்கி பிறகு Ubuntu-ஐ போடலாம் என்றால் நிறைய நிறுவனங்கள் hardware support பண்ணுறது இல்லை.

சரி வேற வழியே இல்லாமல் விண்டோஸ் பயன்படுத்தி வந்தேன், அதனை வாங்கும் போதே ஒரு அண்டி வைரஸ் இருக்குமே Norton  அது சரியாக முப்பது நாளில் முடிந்து விடும், அந்த முப்பது நாட்களுக்கு பிறகு தினமும் ஒரு செய்தி வரும் உங்க கணிப்பொறி பாதுகாப்பாக இல்லை உடனடியாக norton வாங்குங்க வருடம் 50$ தான் என்று.. அட  மொக்கைகளா ஏற்கனவே விண்டோஸ்-ற்கு ஒரு 150$ அழுதுருக்கோம் அப்புறம் எதுக்குடா இந்த வருட சந்தாவில் ஒரு software ? அப்புறமும் நாம் கேட்கவில்லை என்றால் அடுத்து ஒரு பத்து நாளில் ஒரு வைரஸ் (torjan... virus) நமது கணிப்பொறிக்கு வந்துரும், நம்மளால எதையும் திறக்கவே முடியாது, கணிப்பொறி படிக்காதவர்கள் இதனை சரி பண்ணவே முடியாது. எப்படியோ அப்படி இப்படி என்று  அலைந்து ஒரு வழியாக அந்த வைரஸ் அழித்து AVG னு ஒரு அண்டி வைரஸ் போட்டதுக்கப்புறம் தான் கணிப்பொறி இயங்க ஆரம்பிச்சது.

இது முதல் கதை, அடுத்து ஓரி மடிக்கணினி வாங்கினேன் இங்கேயும் அதே கதைதான். அதுவும் Norton-னோட முதல் முப்பது நாள் முடிந்து பத்து நாளைக்கும் அதே வைரஸ், அதே பிரச்சினை. அப்பதான் யோசித்தேன் இந்த பக்கி மைக்ரோசாப்ட் தான் இந்த களவாணித்தனத்தை செய்கிறான் என்று.

ஒரு OS-ஐ தயாரிக்க தெரிந்த இந்த அறிவாளிகளுக்கு அதனை பாதுகாப்பனாதாக செய்ய தெரியாதா என்ன? அவர்கள் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் OS-ஐ விட ஆண்டி வைரஸில் தான் நல்ல காசு.

இதான் நம்மூருல சொல்வாங்க, "குழந்தைய கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறது " எல்லோரும் சேர்ந்து microsoft, Oracle, apple and etc... open source என்ற ஒரு வார்த்தையையே அழிக்கப் பார்க்கிறார்கள்.
 நமக்கும் வேற வழி இல்லை , என்ன பண்ணுறது???   நல்லா செய்யுறாங்கய்யா வேலைய....

3 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது தவறு.

    உபுண்டு இன்ஸ்டால் பண்ணுனா, நிறைய லேப்டாப்புகள் பிரச்சனையின்றி ஓடும். ஹார்ட்வேர் சப்போர்ட் உண்டு. லைவ் சிடி ஒன்று எழுதி, அதைக் கொண்டு இன்ஸ்டால் பண்ணுங்க. அது பெஸ்ட். ஆனால் அப்படி இன்ஸ்டால் பண்ண இன்டெர்னெட் கனெக்க்ஷன் வேணும். உபுண்டு வெர்ஷன் 11.10 சிறந்தது. 11.04 பிரச்சனை உள்ள ஒன்று.

    வின்டோஸுக்கு இலவசமான ஆன்டி-வைரஸ் மைக்ரோசாஃப்டிடமிருந்தே உண்டு. நீங்கள் பயன்படுத்தும் வின்டோஸ் ஒரிஜினல் என்றால் அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் பண்ணலாம். அதனெ பெயர் "Microsoft Security essentials"

    பதிலளிநீக்கு
  2. Dell மட்டுமே hardware support கொடுக்கும் அதுவும் முந்தய version-களுக்கு மட்டும் தான். நீங்கள் புது மாடல் வாங்கினால் தெரியும் display, wireless dirver போன்றவை சப்போர்ட் கிடையாது. நான் வாங்கினது toshiba and acer கணினிகள், அவர்கள் லினக்ஸ் சப்போர்ட் கிடையாது. நான் dell support டீம்-இடம் கேட்டேன், அவர்கள் இப்பொழுது சப்போர்ட் பண்ணுவது கிடையாது. நான் சொல்ல வந்தது ஒரு OS-ஐ தயாரிக்க தெரிந்த ஒரு நிறுவனத்திற்கு ஏன் அதனை பாதுகாப்பு நிறைந்ததாக தயாரிக்க முடியவில்லை?

    பதிலளிநீக்கு
  3. 11/07/2011 03:16:14PM jeeva: "hi, i need a laptop with ubuntu OS"
    11/07/2011 03:16:25PM jeeva: "does dell have this now?"
    11/07/2011 03:17:00PM Agent (Joanne_417652): "Hi Jeeva!I'm glad you chatted in today and I'm happy to assist you."
    11/07/2011 03:17:43PM jeeva: "thanks, Does DELL selling laptops with Ubuntu linux?"
    11/07/2011 03:18:19PM Agent (Joanne_417652): "I'm afraid Jeeva ubuntu os is no longer available, but you can install it once you have the system?"

    பதிலளிநீக்கு