தமிழ் வருட பிறப்பில் இருக்கும் சண்டையை போக்க நாம் மொழியில் மதத்தை கலப்பதை தடுக்க வேண்டும். தமிழ்களின் சிறப்பை சொல்லும் நாளாம் தைத்திருநாளே ஆண்டின் தொடக்கமாக கொண்டால் அது தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பே. அனைத்து மதங்களும் தனக்கென்று ஒரு வருடக்குறிப்பை பயன்படுத்தும் பொது ஏன் நம் மொழிக்காக ஒரு வருடக்குறிப்பை பயன்டுத்தகூடாது?
பூ பூக்கும் மாதம் தை,
அறுவடை செய்யும் மாதம் தை,
கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் மாதம் தை ,
பனி காலம் முடிந்து இளவேனில் பருவம் துவங்கும் மாதம் தை,
இன்னும் பல சிறப்புகள் கொண்ட தை மாதத்தை வருடத்தின் முதல் மாதாமாக கொண்டால் நமக்கும் நம் மொழிக்கும் பெருமை சேர்க்கும்.
கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும் தை மாதத்தின் சிறப்பும், சித்திரையின் வறட்சியும், தை மாதத்தில் வரும் முழு நிலவு (பௌனர்மி) மிகவும் வெளிச்சமாக இருக்கும், அதனை அறுவடை நிலா என்று அழைப்பார்கள். அந்த நிலவொளியில் நெல் கதிர் அறுவடை நடக்கும். தை மாதத்தில் வயல்வெளி எங்கும் கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும், ஆனால் சித்திரையில் பசுமை என்பதே இருக்காது, எல்லாம வறண்டு கிடக்கும். ஆடு மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காதா மாதம். எருமை மாடுகளை தினமும் நீராட வைக்க வேண்டும், ஆனால் சித்திரையில் அது மிகவும் கடினம். சித்திரை என்பது பொதுவாக வறட்சி மாதம். ஆதலால் எந்த வகையில் பார்த்தாலும் சித்திரை வருடத்தின் முதல் மாதமாக இருக்க முடியாது.
மதங்களை புறந்தள்ளி தமிழர்களாய் மொழியால் ஒன்றுகூடுவோம்!!!
தை முதல் நாளை வருடத்தின் முதல் நாளாய் கொண்டாடி மகிழ்வோம்!!!!
naan ungaludaiya karuththukku udanpadugiren nandri
பதிலளிநீக்குsurndran