ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி தருவது அந்த அரசின் கடமையா? அல்லது அந்த நாட்டில் இருக்கும் பணக்காரர்கள் போடும் பிச்சையா (கொடையா)? ஒரு சில செய்திகள் படித்தேன் பிரபல சினிமா நட்சத்திரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக உண்டியல் ஏந்தினார், இன்னொரு விண்மீன்(?) ஒரு இயக்கமே ஆரம்பித்து பணம் வசூலித்து ஏழை மாணவர்களுக்கு படிப்பு கொடுக்குதாம். இப்படி பணக்காரர்கள் தாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ள செய்யும் இந்த செயல்களால் அவர்கள் கல்வி தந்தை , வள்ளல் என அழைக்கபடுவார்கள். கல்வி என்பது மக்களின் உரிமையாக இல்லாமல் இவர்களின் கொடையாக இருப்பது ஏன்? இவர்கள் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்து விட்டு சில ஆயிரங்கள் செலவழித்து நல்ல பெயர் வாங்கி, செலவு செய்ததை தாங்கள் நடிக்கும் சினிமா மூலம் வசூல் செய்துவிடுவார்கள். கடைசியில் செலவு செய்து ஓட்டாண்டியாகிறது சாமானிய மக்கள் தான்.இந்த சினிமா நட்சத்திரம், விண்மீன், போன்ற வானத்தில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து, கல்வியை மக்களின் உரிமையாக கிடைக்க போராடினால் என்ன? அதைவிட்டுட்டு உண்டியல் குலுக்கியாவது ஏழைகளுக்கு கல்வி அளிப்பேன் என்று சொல்வது அறிவீனம்.
அரசு, அரசாங்கம், அரசு அதிகாரிகள், அரசியல்வா(ந்)திகள் என பல அடுக்குகள் கொண்ட அதிகார வர்க்கம் நம் அரசாங்கத்தில் உள்ளது, அதன் கடமையே மக்களுக்கு சேவை செய்வதுதானே? நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி, வீட்டு வரி, ரோட்டு வரி என நாம் சுவைக்கும் எல்லாத்துக்கும் வரி கட்டுவது, அந்த வரிப்பணம் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில்தானே? (அந்த நம்பிக்கை இங்கே பொய்த்து பல காலங்கள் ஆகிறது. ) கல்வியும் அடிப்படை தேவைகளில் ஒன்று, அதனை அனைத்து மக்களுக்கும் வழங்குவது அரசாங்கத்தின் கடமையே ஒழியே, மக்களை ஏமாற்றி, ஏழைகளின் உழைப்பில், மக்களின் கண் திறந்திருக்கும்போதே அவர்களின் பணத்தை உருவி(சினமா) பணக்காரர்களாகிய அயோக்கியர்கள் போடும் பிச்சை(கொடை?) இல்லை.
சிந்திப்போம்...
புதன், 15 பிப்ரவரி, 2012
ரஷ்யாவில் பொம்மைகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்
ரஷ்யாவில் Barnaul (சைபீரியன்) நகரத்தில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சின்ன சின்ன பொம்மைகளின் கையில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை வைத்து போராட்டம் செய்துள்ளார்கள். இதனை தடுக்க வந்த போலீஸ் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர். நீதிமன்றம் சென்ற இந்த வழக்கில் பொம்மைகள் ரஷ்ய நாட்டின் குடிமகன்கள் அல்ல, அதனால் அவைகள் போராட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற தீர்ப்பு (?) வழங்கியுள்ளது.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :)
மேலதிக விவரங்களுக்கு:
http://www.guardian.co.uk/world/2012/feb/15/toys-protest-not-citizens-russia
http://www.guardian.co.uk/world/2012/jan/26/doll-protesters-problem-russian-police

தண்ணியில வீடு கட்டமுடியுமா? இரும்பு தண்ணியில மிதக்குமா?
தண்ணியில வீடு கட்டமுடியுமா?
இரும்பு தண்ணியில மிதக்குமா?
காற்றுள படம் வரைய முடியுமா?
இது மாதிரி நிறைய கேள்விகள, ஒரு செயலை செய்ய முடியாதபோது சொல்வார்கள். ஆனால் அறிவியலின் துணைகொண்டு சிந்தித்தோமானால் இவையெல்லாம் சாத்தியமே.
தண்ணியை மிகக்குறைந்த வெப்பநிலையில் உறையவைத்தால் அது பனிக்கட்டியாக, துகள்களாக மாறும். அதவாது திரவ பொருளாக இருந்த நீர் திடப்போருளாக மாறும். திடப்பொருளில் வீடு கட்டலாம் அல்லாவா? அதே நீர் காற்றிலும் பறக்கும், எப்படியென்றால் குறைந்த வெப்பநிலையில் நீர் பனித்தூசியாக மாறும். அப்போது அது பறக்கும்.
எந்த ஒரு பொருளையும் நீரில் மிதக்க வைக்கலாம். எப்படி? மிதத்தல் தத்துவத்தை பயன்படுத்துவது மூலமாக எந்த பொருளையும் அது இரும்போ அல்லது மரமோ மிதக்கவைக்க முடியும். கப்பலில் பயணிக்கும் மனிதனுக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் அவனால் நீரில் பயனிக்கமுடிகிறது. அதுதான் அறிவியல்.
விமான சாகச நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரியும் எப்படி காற்றில் எழுதமுடியும் என்று.
ஆதாலால் எந்தவொரு நிகழ்வையும் நாம் அறிவியலின் உதவிகொண்டு ஆராய்ந்தமானால் அதற்கு விடை கிடைக்கும். முடியாது என்று நினைத்த செயல்களை கூட மிக எளிதாக செய்யமுடியும்.
விடை தெரியவில்லை எனில் தெரியாது என்றுதான் பதில்கூறவேண்டும் அல்லது இதுவாக இருக்கலாம் என்று சந்தேகங்களை பதியவேண்டுமே ஒழிய கற்பனைகளை பதிலாக கூறக்கூடாது. சந்தேகங்கள் இருந்தால்தான் அடுத்துவரும் தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் இந்த விடை காண முடியாத கேள்விகளுக்கு பதில் தேடமுடியும். அதைவிடுத்து ஒரு பொய்யான பதிலை சொல்லிவிட்டால் அந்த பதில் பல தலைமுறையை பாதிக்கும்.
அப்படி அறிவியலால் இன்னும் விடை காணமுடியாத இடத்தில்தான் கடவுள் என்ற ஒரு கற்பனை பதிலை வைத்து பல காலமாக நம்மையெல்லாம் ஏமாற்றுகிறது ஒரு கூட்டம். அறிவியல்கொண்டு சிந்திப்போம் ஏமாற்ற நினைக்கும் கூட்டத்தை சிதறடிப்போம்.
சனி, 11 பிப்ரவரி, 2012
அணு உலை வேண்டாம்: நம் வருங்கால தலைமுறையை நாமே மண்ணுக்குள் புதைக்க வேண்டாம்.
கூடங்குளம் அணு உலை பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. உணமையை சொன்னால் அணு உலையினால் வரும் ஆபத்தை நினைக்கும் போது பயமாக உள்ளது. நம் வருங்கால தலைமுறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் யாரும் அணு உலையை ஆதரிக்க மாட்டார்கள்.
இன்றைய அரசின் தவறான அணுகுமுறையினால் மக்களுக்கு தேவையான மின்சாரம் வழங்கமுடியாமல் விவரம் அறியாத, அணு உலை ஆபத்தை உணராத மக்களை அணு உலை வந்தால் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என சிந்திக்க வைக்கிறது.
அணு சக்தியை தவிர்த்து பல முறைகள் மின்சாரம் தயாரிக்க உள்ளது, அதனை நம் நாட்டில் படித்த அறிவாளிகள் செய்யாமல் பணத்துக்காக பொழைக்க, தற்காலிக இன்ப வாழ்க்கைக்காக வாழ்கிறார்கள்.
அணுசக்தியில் வளர்ந்த நாடுகளெல்லாம் மிக குறைந்த அளவில் அல்லது அணு சக்தியை தவிர்க்கும் சூழலில் நமக்கு நாமே உலை வைக்கும் இந்த அணு உலை நமக்கு தேவையில்லை. அணு சக்தியினால் வரும் பேரழிவை நினைக்கும் போது நாம் மின்சாரம் இல்லாமலே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம். மின்சாரத்துடன் நோயாளியாக வாழ்வதை விட மின்சாரம் இல்லாமல் வாழ்வதே மேல்.
எங்கள் வீட்டுக்கு என்னுடைய ஆறாவது வயதில்தான் மின்சாரம் வந்தது. இப்பொழுது மின்சாரம் வந்து இருவது வருடங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஏன் வருங்கால தலைமுறைக்கு நிரந்தர அழிவை தேடித்தரும் சக்திக்கு வலி தேடிக்கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இதற்கு முன் இருந்தது மாதிரியே இருக்கலாம்.
அணு உலை தவிர்ப்போம், நோயற்ற சூழலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்குவோம்.
வியாழன், 9 பிப்ரவரி, 2012
இன்றைய மாணவர்களின் மனநிலை
இன்று பத்திரிகையில் வந்த செய்திகளில் மிகவும் வருந்ததக்க இரண்டு செய்திகள் பார்த்தேன்.
நம் இளைய தலைமுறை எங்கே சென்றுகொண்டிக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள் இவை. பள்ளி கல்லுரி படிக்கும் மாணவர்களுக்கு எங்கிருந்து இப்படி செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது? சினிமாவாக இருக்கலாம் அல்லது அவர்கள் வாழும் சூழ்நிலையாக இருக்கலாம். இவ்வாறு இளம்தலைமுறை நெறி கெட்டு போனால் நம் சமூகம் என்னவாகும்?
எனக்கு தெரிந்தே ஒரு சில வருடங்களுக்கு முன்னால், பனிரெண்டாவது படிக்கும் மாணவனும் மாணவியும் காதல் வயப்பட்டு ஒரு குழந்தைக்கு தாய் தந்தை ஆனார்கள். அதனால் அவர்களின் படிப்பு கெட்டு, இந்த சிறு வயதிலே இவ்வளவு பெரிய பாரத்தை சுமக்கிறார்கள். மற்றொரு சம்பவம் பத்தாவது படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் காதல் வந்து சில தவறுகள் நடந்து அவர்கள் வாழ் பாழாகிபோனது. பள்ளி படிக்கும் மாணவர்கள் சாராயம் குடிப்பது, புகை பிடிப்பது என அனைத்து கெட்ட பழக்கங்களையும் பழகுகிறார்கள்.
இது மாதிரி நிகழ்வுகளை பார்த்த பிறகாவது சினமா எடுப்பவர்கள் கொஞ்சம் சமூக அக்கறையுடனும் எடுக்க வேண்டும். பெற்றோர்களும் மற்றும் சுற்றத்தாரும் தனது பொறுப்புணர்ந்து குழந்தைகள் பார்வையில் படும் படியாக கெட்டசெயல்களை தவிப்போம், நம் இளைய தலைமுறை வலிமையான ஒன்றாக வளர உதவுவோம்.
- ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்தான்.
- ஐந்து கல்லுரி மாணவர்கள் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை குளிர்பானத்தில் போதை கலந்து கொடுத்து கற்பழிப்பு.
நம் இளைய தலைமுறை எங்கே சென்றுகொண்டிக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள் இவை. பள்ளி கல்லுரி படிக்கும் மாணவர்களுக்கு எங்கிருந்து இப்படி செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது? சினிமாவாக இருக்கலாம் அல்லது அவர்கள் வாழும் சூழ்நிலையாக இருக்கலாம். இவ்வாறு இளம்தலைமுறை நெறி கெட்டு போனால் நம் சமூகம் என்னவாகும்?
எனக்கு தெரிந்தே ஒரு சில வருடங்களுக்கு முன்னால், பனிரெண்டாவது படிக்கும் மாணவனும் மாணவியும் காதல் வயப்பட்டு ஒரு குழந்தைக்கு தாய் தந்தை ஆனார்கள். அதனால் அவர்களின் படிப்பு கெட்டு, இந்த சிறு வயதிலே இவ்வளவு பெரிய பாரத்தை சுமக்கிறார்கள். மற்றொரு சம்பவம் பத்தாவது படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் காதல் வந்து சில தவறுகள் நடந்து அவர்கள் வாழ் பாழாகிபோனது. பள்ளி படிக்கும் மாணவர்கள் சாராயம் குடிப்பது, புகை பிடிப்பது என அனைத்து கெட்ட பழக்கங்களையும் பழகுகிறார்கள்.
இது மாதிரி நிகழ்வுகளை பார்த்த பிறகாவது சினமா எடுப்பவர்கள் கொஞ்சம் சமூக அக்கறையுடனும் எடுக்க வேண்டும். பெற்றோர்களும் மற்றும் சுற்றத்தாரும் தனது பொறுப்புணர்ந்து குழந்தைகள் பார்வையில் படும் படியாக கெட்டசெயல்களை தவிப்போம், நம் இளைய தலைமுறை வலிமையான ஒன்றாக வளர உதவுவோம்.
கூகிள் இணையத்தில் ஆதிக்கம்
comscore என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூகிள் அதிக ஆதிக்கம் செய்கிறதாக கூறுகிறது, மேலும் யாஹூ நிறுவனம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
செவ்வாய், 7 பிப்ரவரி, 2012
அப்துல்கலாம் என்ற ஒரு முன் மாதிரி(?)
சமீபத்தில் அப்துல்கலாம் FACEBOOKல் சங்கமித்து இந்திய இளைமைகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்? இவர் ஒரு வாசகம் போட அதை படித்து சிலிர்க்கிறது இளசுகள்.
எல்லோருக்கும் ஒரு கேள்வி இந்த அப்துல்கலாம் தான் பிறந்த நாட்டிற்காக என்ன செய்தார்? இதற்கு பதில் அவர் அணு குண்டு செய்தார், அந்த குண்டு என்ன தீபாவளிக்கு குழைந்தைகள் வெடிக்கும் குண்டா? அல்லது நம் நாட்டில் ஏழைகளின் பசியை போக்கும் உணவா? என்ன செய்தார் இவர் இந்த சமூகத்துக்கு? இவரை ஒரு ஒரு முன் மாதிரியாக கொள்ள?
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பொழுது இவர் அதற்காக ஒரு அறிக்கையாவது விட்டிருப்பாரா?
இவர் பிறந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட போதுஇலங்கையை கண்டித்து ஒரு அறிக்கை விட்டாரா அல்லது மத்திய அரசிடம் பேசினாரா?
சமீபத்தில் இலங்கை அதிபரை இவர் சத்திக்க இலங்கை சென்றார் அதன் காரணம் என்று ஏதாவது சொன்னாரா?
உலகில் தமிழர்கள் அனைவரும் இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க போராடிவரும் சூழ்நிலையில் இந்த சந்திப்புக்கு காரணம்? ஏன் இந்த icon இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க ஒரு வார்த்தை கூட கூறவில்லை?
இந்த கேள்விகளுக்கு வரும் பதில் அவர் என்ன அரசியல்வாதியா என்று வரும். அரசியல்வாதி மட்டும் தான் போது சேவை செய்ய வேண்டுமா? அப்படி பொது சேவை செய்யாத, இச்சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒரு சிறு புல்லை கூட புடுங்காத இவர் எப்படி ஒரு சரியான முன் மாதிரியாக இருக்க முடியும்?
இவர் செய்த (சாதித்த) செயல் இச்சமூகத்தின் பேரழிவுக்கு உதவுமே தவிர வளர்ச்சிக்கு சிறு துரும்பு அளவுக்கு கூட உதவாது என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியிருந்தும் இவர் எப்படி icon இருக்க முடியும்.
இவர் ஊர் ஊராக சென்று ஐ.ஐ.டி மாணவர்களை சந்தித்து உரையாடுவார், அந்த மாணவர்கள் இந்தியர்களின் பெரும் வரித்தொகையில் படித்து விட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் துணிக்கடை, மருந்துகடை போன்ற கடைகளில் சென்று ஆணி புடுங்குவார்கள். இதையாவது இந்த icon தடுக்கலாமே?
ஒரு சில நண்பர்கள் கலாமை விமர்சிப்பதை கூட எதிர்க்கிறார்கள்.ஆனால் இவர் ஒரு விளம்பர பிரியர் என்பதே உண்மை.

அடுத்த பதில் குடியரசு தலைவராக இருக்கும் போதே எளிமையாக இருந்தார். எளிமையாக எங்கு இருந்தார் குடியரசு மாளிகையில் தானே? ஒருவர் இருப்பதற்காக ஒரு ஊரே வசிக்கும் அளவுக்கு இருக்கும் இடம் எளிமையா? டெல்லிக்கும் சென்னைக்கும் பேருந்தில் பயணம் செய்தாரா அல்லது தொடர் வண்டியில் சென்றாரா? எங்கு உள்ளது எளிமை? முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் கல்யாண சிங் தந்து பதவி காலம் முடிந்தவுடன் பேருந்தில் பயணம் செய்தார் , அதனால் அவரை எளிமையான ஆள் என்று கூறலாமா? இங்கே கல்யானசின்கிற்கும் கலாமுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பொழுது இவர் அதற்காக ஒரு அறிக்கையாவது விட்டிருப்பாரா?
இவர் பிறந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட போதுஇலங்கையை கண்டித்து ஒரு அறிக்கை விட்டாரா அல்லது மத்திய அரசிடம் பேசினாரா?
சமீபத்தில் இலங்கை அதிபரை இவர் சத்திக்க இலங்கை சென்றார் அதன் காரணம் என்று ஏதாவது சொன்னாரா?
உலகில் தமிழர்கள் அனைவரும் இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க போராடிவரும் சூழ்நிலையில் இந்த சந்திப்புக்கு காரணம்? ஏன் இந்த icon இலங்கை அதிபரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்க ஒரு வார்த்தை கூட கூறவில்லை?
இந்த கேள்விகளுக்கு வரும் பதில் அவர் என்ன அரசியல்வாதியா என்று வரும். அரசியல்வாதி மட்டும் தான் போது சேவை செய்ய வேண்டுமா? அப்படி பொது சேவை செய்யாத, இச்சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒரு சிறு புல்லை கூட புடுங்காத இவர் எப்படி ஒரு சரியான முன் மாதிரியாக இருக்க முடியும்?
இவர் செய்த (சாதித்த) செயல் இச்சமூகத்தின் பேரழிவுக்கு உதவுமே தவிர வளர்ச்சிக்கு சிறு துரும்பு அளவுக்கு கூட உதவாது என்று எல்லோருக்கும் தெரியும் அப்படியிருந்தும் இவர் எப்படி icon இருக்க முடியும்.
இவர் ஊர் ஊராக சென்று ஐ.ஐ.டி மாணவர்களை சந்தித்து உரையாடுவார், அந்த மாணவர்கள் இந்தியர்களின் பெரும் வரித்தொகையில் படித்து விட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் துணிக்கடை, மருந்துகடை போன்ற கடைகளில் சென்று ஆணி புடுங்குவார்கள். இதையாவது இந்த icon தடுக்கலாமே?
முடியாது, ஏனெனில் இவர் செய்வது எல்லாமே இவரின் விளம்பரத்திற்காக மட்டும் தான். நூறு வருடங்களுக்கு பிறகு வரும் முட்டாள்களுக்கு நாம் எப்படி இருந்தோம் என்று தெரியாவா போகிறது? வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)
ஒரு சில நண்பர்கள் கலாமை விமர்சிப்பதை கூட எதிர்க்கிறார்கள்.ஆனால் இவர் ஒரு விளம்பர பிரியர் என்பதே உண்மை.
அணுமின் உலைகளும் சில உண்மைகளும்
தமிழ்நாட்டில் கூடங்குளம் என்ற கிராமத்தில் வெளிநாட்டு உதவியுடன் (ரஷ்யா) ஒரு அணுமின் நிலையம் கடந்த 30 வருடங்களாக கட்டப்பட்டு இயங்கும் தருவாயில் உள்ளது. அதனை பல சில மக்கள் எதிர்க்கிறார்கள், சில கூட்டங்கள் அதனை ஆதரிக்கிறது?
http://en.wikipedia.org/wiki/Nuclear_power_by_country
எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கேள்வி.... கூடங்குளம் அணுமின் நிலையம் கட்ட துவங்கி இருபது வருடத்திரு மேல் ஆகிறது, துவங்கும் பொழுதே அதனை எதிர்த்து நிறுத்தாமல், அது கட்டி முடிக்கப்பட்டு இயங்கும் தருவாயில் அதனை எதிர்ப்பது ஏன்?
வரலாறு தெரியாமல் சொல்லிவிட்டேன், நிறைய போராட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் வெளியில் தெரியவில்லை. எப்படி தெரியும் தினமும் மலம் அல்லும் பத்திரிகைகள் இருக்கும் பொழுது?
ஆதரிக்கும் கூட்டம் சொல்லுவது :
௧. இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது, உடையவே உடையாது. ஏனெனில் இது ரஷ்யாவின் தொழில்நுட்பம்.
௨. இதனால் தமிழ்நாட்டின் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் போகும்.
எதிர்க்கும் கூட்டம் சொல்வது:
௧. அணு உலைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் தமிழ்நாடே சுடுகாடாகும், ஜப்பானின் ஹிரோசிமா போல.
அணு உலை பாதுகாப்பனாதா?
கிழே உள்ள அட்டவணையையின் படி, வளர்ந்த நாடுகள் எல்லாம் மிகவும் குறைவான அணுசக்தியை பயன்படுத்துகின்றன.
Country | Megawatt capacity | Nuclear share of electricity production |
---|---|---|
Argentina | 935 | 7.0% |
Armenia | 376 | 45.0% |
Belgium | 5,943 | 51.7% |
Brazil | 1,901 | 3.0% |
Bulgaria | 1,906 | 35.9% |
Canada | 12,679 | 14.8% |
China | 10,234 | 1.9% |
Czech Republic | 3,686 | 33.8% |
Finland | 2,721 | 32.9% |
France | 63,236 | 75.2% |
Germany | 20,339 | 26.1% |
Hungary | 1,880 | 43.0% |
India | 4,780 | 2.9% |
Japan | 47,348 | 28.9% |
Korea, South (ROK) | 18,716 | 31.1% |
Mexico | 1,310 | 4.8% |
Netherlands | 485 | 3.7% |
Pakistan | 725 | 2.7% |
Romania | 1,310 | 20.6% |
Russia | 23,084 | 17.8% |
Slovakia | 1,760 | 53.5% |
Slovenia
and Croatia
| 696 | 37.9% + 8.0% |
South Africa | 1,800 | 4.8% |
Spain | 7,448 | 17.5% |
Sweden | 9,399 | 37.4% |
Switzerland | 3,252 | 39.5% |
Taiwan (ROC) | 4,927 | 20.7% |
Ukraine | 13,168 | 48.6% |
United Kingdom | 10,962 | 17.9% |
United States | 101,229 | 20.2% |
World | 378,910 | 14% |
கூடங்குளம் அணுஉலைக்கு தொழில்நுட்பம் தந்த ரஷ்யாவே 17% தான் அணு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் பயன்படுத்துகிறது. உலக நாட்டாமை அமெரிக்கா 20% தான் பயன்படுத்துகிறது. விதி விலக்காக பிரான்ஸ் மட்டுமே 75% பயன்படுத்துகிறது. இந்த உதாரணத்தை நாம் எடுத்துகொள்ள முடியாது.இப்படி அணுசக்தியில் வல்லமை படைத்த நாடுகள் எல்லாம் அணு சக்தியை குறைவாக பயன்படுத்தும் போது, அணு சக்தியில் அடுத்த நாட்டிடம் கையேந்தும் நமக்கு ஏன் இந்த உலை?
அணு உலையினால் வரும் கழிவுகள் மிகவும் ஆபாத்தானவை என்று எல்லாருக்கு தெரியும், அப்புறம் ஏன் அணு உலை உடையாது என்று சொல்கிறார்கள். அணு உலை உடையாது என்றால் ஏன் அமெரிக்கா அதிகமான அணு சக்தியை பயன்படுத்தவில்லை? ஆதலால் எந்த விதத்திலும் அணு உலை ஆபாத்தானது.
தமிழ்நாட்டின் மின்சார தட்டுப்பாடு நீங்கும்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்கள்:
௧. நெய்வேலி நிலக்கரி மின் உற்பத்தி நிலையம்
௨. கல்பாக்கம் அணு மின் நிலையம்
௩. முல்லை பெரியாறு அணை, நீர் மின் நிலையம்
௪. எண்ணூர் Thermal பிளான்ட்
௫. மேட்டூர் நீர் மின் நிலையம்
௬. Narimanam Natural Gas Plants
௭ . Muppandal wind farm
இன்னும் பல சிறிய நீர் மின் நிலையங்கள் இருக்கிறது. இவ்வளவு மின் உற்பத்தி நிலையங்கள் இருந்தும் ஏன் நம் மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியவில்லை? இன்னும் ஒரு உற்பத்தி நிலையம் கொண்டுவந்தால் நம் தேவை பூர்த்தியாகி விடுமா? ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுத்தது போக நமக்கு கிடைக்கிறது. தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறல்லவா? உப்பு திண்டவதான் தண்ணி குடிக்கணும், கரநாடகவுக்கு மின்சாரம் தேவை என்றால் அங்கு அணு மின் நிலையத்தை நிறுவ வேண்டியது தானே? தமிழ்நாட்டில் ஏன்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)