வியாழன், 26 ஜனவரி, 2012

தமிழில் எழுத ஒரு எளிய இயக்கி கூகுளிடம் (Google IME) இருந்து...


Google IME எனும் ஒரு திட்டத்தின் மூலம் கூகிள் 22 மொழிகளுக்கு தட்டச்சு மூலம் எழுத ஒரு இயக்கியை கொடுத்துள்ளது. தமிழை எழுத கூகிள் translator அல்லது ஜிமெயில்-இல் உள்ளதை பயன்படுத்தியவர்களுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும். அதாவது ஆங்கில எழுத்துக்களின் ஓசையை வைத்து தமிழ் மற்றும் பிற மொழிகளை எழுதலாம். ஆங்கிலம் தெரியாதவர்கள் இதனை பயன்படுத்த முடியாது.

கணிப்பொறியில் நிறுவுவது (Installing) முதல் பயன்படுத்தும் முறை மிக எளிதாக உள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியில் காணாலாம்.


எவ்வாறு இதனை நிறுவலாம் என்று விளக்கமாக கீழே உள்ள சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.


இது பலருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன், இருந்தாலும் நாமளும் இதனை பகிர்வோம் என்ற நோக்கில்தான் இந்த பதிவு.

Samsung Galaxy Android போன் & tablet-ல் தமிழ்

Samsung Galaxy Android போன் & tablet-ல் தமிழ் எழுத்துருக்களை அமைக்க ஒரு எளிதான Android Application.

Fontomizer SP (Font for Galaxy)

https://market.android.com/details?id=com.hongik.fontomizerSP&hl=en

இதில் மூன்று தமிழ் எழுத்துருக்களை வைத்துள்ளார்கள் (மதுரம், வானவில், ...) இதில் வானவில் மற்றும் இன்னொன்றும் சிஸ்டத்தில் இருக்கும் எல்லா ஆங்கில வார்த்தைகளையும் தமிழில் மாற்றுவதால் பயன்படுத்துவது கடினமாக உள்ளது, மதுரம் பரவாயில்லை, இணைய உலாவியில் (web Browser) தமிழில் பார்க்கலாம் ஆனால் ஒரு சில எழுத்துக்கள் உடைந்து தெரிகிறது.

திங்கள், 23 ஜனவரி, 2012

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்(23 Jan 1897)


இந்திய சுதந்திர போராட்டாத்தில் மிக முக்கியமானவர்களுள் ஒருவரும், இந்தியர்களால் திருப்பி அடிக்க முடியும் என்று கர்ஜித்த வங்காளத்து சிங்கம் எல்லோராலும் "நேதாஜி" என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று.

தன் நாட்டுக்காக இன்னுயிரையும் துச்சமென கருதி போராடிய தியாகிகளை நினைவில் கொள்வோம், அதனை காப்பாற்றுவோம்.

சனி, 21 ஜனவரி, 2012

"சமூக ஆசிரியன்" லெனின் நினைவு தினம்

உலக உழைக்கும் மக்களிடம் இச்சமூகப் பார்வையை கொண்டுசேர்த்த ஆசான் லெனின் அவர்களின் நினைவு தினம் இன்று.

உழைக்கும் வர்க்கத்துக்கே இவ்வுலகம்!!!

தமிழ் சங்கத்தில் தமிழுக்கு பஞ்சம்

வெளிநாடு வாழ் நம் மக்களால் நடாத்தப்பட்டு வரும் தமிழ் சங்கத்தில் தமிழ் மொழிக்கு பஞ்சம், அவர்களால் ஒரு நாள் கூட நல்ல தமிழில் உரையாட முடியல. சமீபத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். ஒரு குழந்தை கூட முழுவதுமாக ஒரு வார்த்தை தமிழில் பேசமுடியவில்லை. தமிழர் திருநாள் "டமிலர் திருநல்" ஆகிறது.  இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.

சங்கம் வைத்து மொழியின் செழுமையை வளர்த்த இனத்தில் பிறந்த நாமா இப்படி? தமிழ் தாய் வாழ்த்துப்பாடலுக்கு எழுந்திருக்காத கால்கள் இந்திய தேசிய கீதத்திற்கு எழுகிறது. ஒரு இனத்தை அழிக்க முதலில் அந்த இனத்தின் மொழியைத்தான் அழிக்க வேண்டும் என்பார்கள்.  நம் தாய் மொழியை காத்து வளர்க்க நாமில்லை என்றால் வேறு யார் வருவார்????   


வெள்ளி, 20 ஜனவரி, 2012

அமெரிக்கா MegaUpload-ஐ நிறுத்திவிட்டது

 அமெரிக்காவில் SOPA(Stop Online Piracy Act) மற்றும் PIPA(Protect IP Act) போன்ற சட்டங்கள் மூலம் இணையத்தில் இருக்கும் தவல்களை தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது, இந்த சட்டங்கள் வருவதற்கு முன்பே Megaupload வலை பக்கத்தை, உரிமம் இல்லாமால் ஒரு சில படங்கள் மற்றும் காணொளிகள் பரப்பியதற்காக அந்த இணையத்தை மூடிவிட்டார்கள். மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்களையும் கைது செய்து இருக்கிறது FBI.

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும். 

SOPA மற்றும்  PIPA வந்து விட்டால் இணையத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் அமெரிக்க அரசு சரி பார்த்த பிறகு தான் நாம் பார்க்க முடியும்.

update:
USA Congressional leaders announced that votes on both the Stop Online Piracy Act and the PROTECT IP Act have been postponed! 

சனி, 14 ஜனவரி, 2012

நோயையும் (virus) கொடுத்து மருந்தையும்(antivirus) கொடுக்கும் மைக்ரோசாப்ட்

சமீபத்தில் இரண்டு கணிப்பொறிகள் வாங்கினேன். உபுண்டு உள்ள கணிப்பொறி வாங்கலாம் என்றால் இப்பொழுது எந்த நிறுவனமும் உபுண்டுடன் விற்பதில்லை. சில நாட்களுக்கு முன்னாள் dell நிறுவனம் விற்று வந்தது, ஆனால் இப்பொழுது யாரும் விற்பதில்லை. ஏனென்றால் பயன்படுத்த முடியாது ஒரு OS க்கு 150$  கொதுப்பத்தற்கு மனசு இல்லை, சரி விண்டோஸ் கணிப்பொறி வாங்கி பிறகு Ubuntu-ஐ போடலாம் என்றால் நிறைய நிறுவனங்கள் hardware support பண்ணுறது இல்லை.

சரி வேற வழியே இல்லாமல் விண்டோஸ் பயன்படுத்தி வந்தேன், அதனை வாங்கும் போதே ஒரு அண்டி வைரஸ் இருக்குமே Norton  அது சரியாக முப்பது நாளில் முடிந்து விடும், அந்த முப்பது நாட்களுக்கு பிறகு தினமும் ஒரு செய்தி வரும் உங்க கணிப்பொறி பாதுகாப்பாக இல்லை உடனடியாக norton வாங்குங்க வருடம் 50$ தான் என்று.. அட  மொக்கைகளா ஏற்கனவே விண்டோஸ்-ற்கு ஒரு 150$ அழுதுருக்கோம் அப்புறம் எதுக்குடா இந்த வருட சந்தாவில் ஒரு software ? அப்புறமும் நாம் கேட்கவில்லை என்றால் அடுத்து ஒரு பத்து நாளில் ஒரு வைரஸ் (torjan... virus) நமது கணிப்பொறிக்கு வந்துரும், நம்மளால எதையும் திறக்கவே முடியாது, கணிப்பொறி படிக்காதவர்கள் இதனை சரி பண்ணவே முடியாது. எப்படியோ அப்படி இப்படி என்று  அலைந்து ஒரு வழியாக அந்த வைரஸ் அழித்து AVG னு ஒரு அண்டி வைரஸ் போட்டதுக்கப்புறம் தான் கணிப்பொறி இயங்க ஆரம்பிச்சது.

இது முதல் கதை, அடுத்து ஓரி மடிக்கணினி வாங்கினேன் இங்கேயும் அதே கதைதான். அதுவும் Norton-னோட முதல் முப்பது நாள் முடிந்து பத்து நாளைக்கும் அதே வைரஸ், அதே பிரச்சினை. அப்பதான் யோசித்தேன் இந்த பக்கி மைக்ரோசாப்ட் தான் இந்த களவாணித்தனத்தை செய்கிறான் என்று.

ஒரு OS-ஐ தயாரிக்க தெரிந்த இந்த அறிவாளிகளுக்கு அதனை பாதுகாப்பனாதாக செய்ய தெரியாதா என்ன? அவர்கள் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் OS-ஐ விட ஆண்டி வைரஸில் தான் நல்ல காசு.

இதான் நம்மூருல சொல்வாங்க, "குழந்தைய கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறது " எல்லோரும் சேர்ந்து microsoft, Oracle, apple and etc... open source என்ற ஒரு வார்த்தையையே அழிக்கப் பார்க்கிறார்கள்.
 நமக்கும் வேற வழி இல்லை , என்ன பண்ணுறது???   நல்லா செய்யுறாங்கய்யா வேலைய....

தமிழ் புது வருட பிறப்பு வாழ்த்துக்கள் 2043

தமிழுக்கென்று ஒரு வருட கணிதம்,
மதம் கலக்காமல் ஒரு வருட கணிதம்,
மதத்தால் பிரிந்து கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றாய் இணைக்கும் ஒரு கயிறு தான் இந்த புது வருடம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புது வருட வாழ்த்துக்கள் 2043.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கலோ பொங்கல்!!!
பால் பானை பொங்க
பட்டி பெருக
நோயும் பிணியும் தெருவோட போக !!!

இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாளாம், அது தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி மகிழ்வோம். நாம் தமிழர் என்று உரக்க கூறி தமிழராய் திரள்வோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!!

வியாழன், 12 ஜனவரி, 2012

தேவிகுளம், பீர்மேட்டை மீட்கும் கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டது கேரளா- கருணாநிதி

இந்த பெருசு என்ன சொல்ல வருது..... கேரளா மேல் படை(?)எடுக்கலாமா? இவரின் தளபதியை, அஞ்சாநெஞ்சனை மற்றும் ???? அவர்களை போர்படை தளபதியாக நியமித்து சண்டைபோடலாம் என்று சொல்ல வருகிறாரோ? அப்படி போட்டால் பெரியாறு அணை உங்கள் குடும்ப சொத்தாகிவிடுமே, அதற்கு அது கேரளாக்காரனுங்கிட்டே இருந்துட்டு போகட்டும்.
நீரும் 5(6) தடவை முதலமைச்சராக இருந்தீங்களே அப்ப என்னா பன்னுநீங்க, இப்ப வந்து வரலாறு history னு அளந்து விடுறீங்க... இல்லாட்டி உங்க பாணியில fast food மாதிரி fast உண்ணா விரதம் இருங்க(!) நாங்கெளெல்லாம் நம்பிடுவோம். :(


பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா?

மாட்டுக்கறி பிரச்சினையில்  ஜெவின் நீதிமன்ற வழக்கு தொடுத்துள்ளார் , அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது...
இந்த செய்தி, பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டது. ஆகவே, கோபாலும், காமராஜும் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் குணநலன்களை கொச்சைப்படுத்திவிட்டனர்.

தன மூலம் என்னா சேதினா, அதாக பட்டது இன்னார் இன்ன சாதியில் இருந்து வந்தாராம், அதனால் மாட்டுக்கறி சாப்பிடமாட்டாரம். நம்மில் பலர் இப்பெல்லாம் யாருப்பா சாதி பார்க்குறது, சாதியெல்லாம் போயி போச்சு என்று சொல்வார்கள். எங்க போச்சு சாதி, நம் நாட்டின் முதல்வரிடமே இருக்கிறது..............?????????

இன்னொரு கேள்வி: இவர்கள் சொல்லும் சமுதாயத்திலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பலர் என்னப்பா சாப்புடுறாங்க??

எங்கும் சாதி, 
எதிலும் சாதி, 
மண்ணிலும் சாதி,
மண்டை ஓட்டிலும் சாதி,
மக்கிப்போச்சு மக்களின் புத்தி.

இந்துதுவாத்தின்((காவி) பாகிஸ்தான் தேசப்பற்று

பாகிஸ்தான் மேல பாகிஸ்தானியரை விட இந்து(காவி) சங்கங்களுக்குதான் மரியாதை அதிகம்.  அதனால் தான் பாகிஸ்தான் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளார்கள். வாழ்க இந்துதுவாத்தின் பாகிஸ்தான் தேசப்பற்று.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்  இந்த நாட்டிலே?

மாட்டுக்கறியும் நக்கீரனின் விளம்பர யுக்தியும்

மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை போட்டு மிக வேகமாக தன கல்லாவை கட்டிவிட்ட செக்ஸ் பத்திரிகை நக்கீரனின் விளம்பர யுக்திக்கு சாதாரண மக்கள் மட்டுமின்றி அ.தி.மு.க தொண்டர்கள்(?) பலியாகிவிட்டனர். ஜெயலலிதா மாட்டுக்கறி /ஆட்டுக்கறி /மரக்கறி எதை சாப்பிட்டால் இந்த மீசைக்காரனுக்கு என்ன பிரச்சினை அல்லது மக்களாகிய நமக்குதான் என்ன பிரச்சினை? அவர்களின் வாய் வயிறு எதை வேண்டுமானுலும் சாப்பிடட்டுமே....

அரசு செயும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய எட்டாவது(நாலாவதா?) தூண்(?), அரசியல்வாதிகள் செய்யும் தவறை மறைக்கத்தான் உதவுகின்றன.

ஜெ.வை பற்றி அவதூறு செய்தி போட்டால் நாம் தாக்கபடுவோம் என்று இந்த மீசைக்காரனுக்கு தெரியாதா என்ன? எல்லாம் ஒரு விளம்பரம்தான்.
இதுல வேற இந்த மீசைக்காரன்... நாங்கெல்லாம் அப்பவே அப்படியாகும்... இப்ப கேக்காவவேனும் என்ற ரேஞ்சுக்கு பில்டப்பு.... போங்கடா போக்கத்தவங்களா...........

வெள்ளி, 6 ஜனவரி, 2012

தமிழில் எழுத ஆசை.......

Java மொழியை இப்படி தமிழில் எழுத ஆசை.......

public class திட்டம் {

    public static void main(String []) {
        int = 10;
        int = 20;

        System.out.println("மொத்தம்:::" + கூட்டல்(,));
        System.out.println("மீதம்:::" + கழித்தல்(,));
        System.out.println("பெருக்கல்:::" + பெருக்கல்(,));
    }

    public static int கூட்டல்(int க், int ச்) {
        return க் + ச்;
    }

    public static int கழித்தல்(int க், int ச்) {
        return க் - ச்;
    }

    public static int பெருக்கல்(int க், int ச்) {
        return க் * ச்;
    }

}

Javascript-ஐ இப்படி தமிழிலே எழுத ஆசை....

function வணக்கம்சொல்லு(பெயர்){
    alert("வணக்கம் "+பெயர்);
}


அனைத்து கணிப்பொறி மொழிகளையும், கணிப்பொறி திட்டங்களையும் தமிழில் எழுதும் வசதி இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே புல்லரிக்குது. அனைத்து கணிப்பொறி மொழிகள் பற்றியும், அது இயங்கும் முறைகளையும் நம் தமிழில் கொண்டுவந்தால் இது சாத்தியம்.



வியாழன், 5 ஜனவரி, 2012

Internet Explorer பயன்படுத்தாதீர்கள் Chrome அல்லது Firefox பயன்படுத்துங்கள்

Microsoft நிறுவனம் வழங்கும் இன்டர்நெட் Explorer ஒரு குப்பைக்கு சமம் (இப்ப புதுசு நல்லாய்ரிக்கும் என்று சொல்கிறார்கள், ஆனால் இல்லை :) ). ஒரு web developer- ஆக இருந்தால் தெரியும் பட்ட கஷ்டம், ஒரு பக்கம் குரோமிலும், firefox-லும் மிக அழகாக இருக்கும், ஆனால் இந்த IE-ல் அதே அழகாய் கொண்டுவர நம்ம தாவு தீர்ந்திடும். ஊரெல்லாம் ஒரு browser engine பயன்படுத்தினால், இவங்க மட்டும் தனியா ஒன்ன பயன்படுத்தி எங்களை படுத்திறாங்க. இருக்குறதவாது ஒழுங்கா இருக்க அதுவும் இல்ல,

உதாரணமாக ஒரு செவ்வகம் வரைந்து அதன் நான்கு முனைகளையும் வட்டமாக மாற்ற chrome, firefox போன்ற உலாவிகளுக்கு வெறும் css மட்டுமே வைத்து மிக எளிதாக பண்ணமுடியும், ஆனா இந்த இழவு பிடிச்சதுள்ள அதே மாதிரி கொண்டுவர ஒரு பெரிய program-ஏ எழுதணும். இது மாதிரி Javascript code-லும் நிறைய இந்த IE-க்காக மட்டுமே தனியா எழுதணும்.

அதனாலே மக்களே தயவுசெய்து Internet Explorer  பயன்படுத்தாதீர்கள். 

அதனை விட சில நல்ல உலாவிகள் இலவசமாக் கிடைக்கிறது, அதுல ஏதாவது என்ன பயன்படுத்துங்க.
௧.Firefox
மிக அருமையான உலாவி. web developer- களுக்கு பிடித்த உலாவி. இதற்கென்று நிறைய Addons(Plugins) உள்ளது அதனை பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பாக இணையத்தில் உலாவலாம்.  இதனை  லினக்ஸ்-லும் நிறுவலாம்.
௨.Chrome
Google நிறுவனம் வெளியிட்டுருக்கும் உலாவி, வந்த சில நாட்களிலே இணைய உலாவியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. Gmail-பயன்படுத்துபவர்களுக்கு இது நிறைய பயன்களை கொண்டுள்ளது. உங்களுடைய bookmark-களையெல்லாம் எந்த கணிப்பொறியிலும் பெரும் வசதி இதில் உள்ளது, இதனை Sync என்று அழைப்பார்கள். HTML தெரிந்தவர்கள் மிக எளிதாக chrome application மற்றும் extension-களை உருவாக்கலாம். இதனை லினக்ஸ்-லும் நிறுவலாம்.
௩.Safari
ஆப்பிள் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் உலாவி. இதுதான் அவர்களின் IPod, IPhone, MAC என எல்லா தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மிக நல்ல என்று சொல்ல முடியாது, ஆனால் நல்ல உலாவி. இதனை லினக்ஸ்-ல் நிறுவ முடியாது.

மீண்டும் ஒரு முறை... அதனால் மக்களே தயவுசெய்து Internet Explorer  பயன்படுத்தாதீர்கள். 

Android- ல் தமிழ் மொழி

Android- ல் தமிழ் மொழி எழுத்துக்களை அதன் இணைய உலாவியில்(browser) பார்க்க முடியாது, எல்லாம் கட்டம் கட்டமாக தெரியும். தமிழ் போன்ற பிற மொழிகளை சேர்க்க பல நாட்களாய் கூகுளிடம் கேட்டிருந்தோம். அதன் சார்பாக 11 issues சேர்க்கப்பட்டிருந்தது. இதனை கண்டுகொள்ளாமல் இருந்த கூகிள் இப்பொழுது அனைத்து issues ம் சேர்த்து ஒன்றாக்கியுள்ளது. இதன் மூலம் தமிழ் android-ல்  விரைவில் வரும் என்று எதிர்பாப்போம்.

தற்பொழுது Mini Opera உலாவியின் மூலம் தமிழில் உள்ள இணைய பக்கங்களை வாசிக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு கிழே உள்ள சுட்டியில் பார்க்கவும்.

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.....


நன்றி கீற்று  

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் 
தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் 
பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி 
நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த 
நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" 
எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய 
ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு 
முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து 
நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி..... 

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி 
அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது 
போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு 
நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 
- 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். 
அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், 
ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் 
போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் 
வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக 
பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் 
சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ 
வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம 
மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் 
திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் 
நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் 
காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான். 

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) 
படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு 
செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி 
கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". 
உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் 
டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் 
டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் 
பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு 
செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து 
சொல்லுங்கள் நான் பப்ளிக் லிட்டிகேஷன் போட முயற்ச்சி செய்கிறேன், 

இதன் ஆடியோ வெர்ஷனையும் கேளுங்கள்......... நன்றியுடன் நாகராஜன் ரவி 27.12.2011 


தமிழ் வருடம் பிறப்பது தை மாதமா? சித்திரை மாதமா?

தமிழ் வருட பிறப்பு மற்றும்  தை பொங்கல் இன்னும் சில தினங்களில் வரவிற்கிறது. சில பல நபர்கள் தமிழ் வருடம் பிறப்பது தை மாதமா? சித்திரை மாதமா? என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்து மதத்தை சார்ந்தவர்கள் தன நம்பிக்கை பொய்ய்க்ககூடாது என்று சித்திரைதான் தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்று கூவுவார்கள். தமிழையும் மதத்தையும் கலக்காதீர்கள், மதத்தால் மொழி வளரவில்லை, மொழியால் தான் மதம் வளர்ந்தது, வளர்கிறது.... நாம்  தாய் தமிழுக்கு எல்லா மதத்திலும் குழந்தைகள் உள்ளனர், அதனால் ஒரு மதம் கொண்டாடும் மாதத்தை அல்லது நாளை வருடத்தின் தொடக்கமாக கொண்டால், அது ஒரு மதத்தின் ஆண்டின் பிறப்பே ஆகும். 

தமிழ் வருட பிறப்பில் இருக்கும் சண்டையை போக்க நாம் மொழியில் மதத்தை கலப்பதை தடுக்க வேண்டும். தமிழ்களின் சிறப்பை சொல்லும் நாளாம் தைத்திருநாளே ஆண்டின் தொடக்கமாக கொண்டால் அது தமிழுக்கும் தமிழருக்கும் சிறப்பே. அனைத்து மதங்களும் தனக்கென்று ஒரு வருடக்குறிப்பை பயன்படுத்தும் பொது ஏன் நம் மொழிக்காக ஒரு வருடக்குறிப்பை பயன்டுத்தகூடாது?

பூ பூக்கும் மாதம் தை, 
அறுவடை செய்யும் மாதம் தை,
கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் மாதம் தை ,
பனி காலம் முடிந்து இளவேனில் பருவம் துவங்கும் மாதம் தை,
இன்னும் பல சிறப்புகள் கொண்ட தை மாதத்தை வருடத்தின் முதல் மாதாமாக கொண்டால் நமக்கும் நம் மொழிக்கும் பெருமை சேர்க்கும்.

கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும் தை மாதத்தின் சிறப்பும், சித்திரையின் வறட்சியும், தை மாதத்தில் வரும் முழு நிலவு (பௌனர்மி) மிகவும் வெளிச்சமாக இருக்கும், அதனை அறுவடை நிலா என்று அழைப்பார்கள். அந்த நிலவொளியில் நெல் கதிர் அறுவடை நடக்கும். தை மாதத்தில் வயல்வெளி எங்கும் கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும், ஆனால் சித்திரையில் பசுமை என்பதே இருக்காது, எல்லாம வறண்டு கிடக்கும். ஆடு மாடுகளுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காதா மாதம். எருமை மாடுகளை தினமும் நீராட வைக்க வேண்டும், ஆனால் சித்திரையில் அது மிகவும் கடினம். சித்திரை என்பது பொதுவாக வறட்சி மாதம். ஆதலால் எந்த வகையில் பார்த்தாலும் சித்திரை வருடத்தின் முதல் மாதமாக இருக்க முடியாது.

மதங்களை புறந்தள்ளி தமிழர்களாய் மொழியால் ஒன்றுகூடுவோம்!!! 
தை முதல் நாளை வருடத்தின் முதல் நாளாய் கொண்டாடி மகிழ்வோம்!!!!