கவிஞர் ஆக இருப்பதற்கு கற்பனை மட்டும் போதாது அவனுக்கு இச்சமுதாயத்தின் மேல் அன்பு இருக்க வேண்டும் என்று உணர்த்தியவன் பாரதி.
"பாரதி" என்ற சொல்லுக்கு எவ்வளவு வீரம், கோபம். அவன் வருகைக்கு முன்னால் என் அன்னை தமிழில் எழுதிய எழுத்துக்களை படிக்க சாதாரண பாமரனால் முடியாது. பாரதி என் தாய் தமிழை இவ்வளவு எளிதாக தேனிலும் இனிமையாக எழுதி, எழுத்தில் புரட்சி செய்தவன் பாரதி.
அச்சம் என்பது மடமை என்னும் சொல்லுபோது....
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
இந்த வார்த்தைகளை சொல்லும் ஒருவன் மனதில் எவ்வளவு உறுதி வேண்டும்?
அதே வீரம் இந்த வார்த்தைகளிலும்...
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
தன் கனவு நாட்டைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை
பெண் விடுதலையை தமிழ் நாட்டில் முதலில் எழுப்பிய பாரதி....
''பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே''
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
கோபபடச் சொல்லும் அதே பாரதி பகைவனிடமும் அன்பு செய்... என்று கூறுகிறார்.
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!
தன் பாரத நாடு எவ்வாறு இருக்க வேண்டும் எனும் போது....
வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு
ஒரு மனிதனுக்கு எவை எவை வேண்டும்..............
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
பாரதி காலத்தில் எல்லோரும் பரங்கியர்களை நோக்கி போராட
பாரதி தன் சமூகத்தை பார்த்தார்.
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
இந்த வரிகள் தான் எவ்வளவு ஆழமான கருத்துக்கள்.
அனால் பாரதி...
இன்னும் சாதி உள்ளது உன் நாட்டில்.....
பார்ப்பானை பற்றி கூறு போது....
நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு;
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.
இதை விட கேவலமாக அவர்களை வேற யாரும் திட்ட முடியாது....
இச்சமூகத்தை நான்
பார்த்த பார்வை
பாரதி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக