Billy Elliot என்ற ஆங்கிலபடம் பார்க்கும்போது அதில் வந்த ஒரு உரையாடல்... நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி தன் மகனை நடனப்பள்ளியில் சேர்க்க Durham என்ற ஊரிலிருந்து லண்டன் செல்லும்போது மகன் தன் தந்தையிடம் கேட்பான் இவ்வாறு...
மகன்: லண்டன் எப்படி இருக்கும்?அப்பா: எனக்கு தெரியாது.. நான் அங்கு போனதில்லை
மகன்: ஏன்?
அப்பா: ஏன் போகணும்?
மகன்: லண்டன் நம் நாட்டின் தலைநகரம்.
அப்பா: அங்கு நிலக்கரி சுரங்கம் இல்லையே..
இந்த உரையாடல் வெட்ட வெளிச்சமாக உழைப்பாளர்களின் மன நிலையை கூறுகிறது... பணம் இருப்பவனுக்கு மட்டுமே நாடும் நாட்டு தலைநகரமும்.. அன்றாடங்காச்சி மக்களுக்கு தன் வயிறும் தன் குடும்பத்தின் வயிறு மட்டுமே தெரியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக