ஞாயிறு, 11 டிசம்பர், 2011

என்று தணியும் இந்த சினிமா மோகம்?

டிசம்பர் 12 தமிழக கூத்தாடி உச்ச நட்சத்திரம் பிறந்தநாள் 
டிசம்பர் 11 தன் வயிறை விட தன் சமூகத்தை நேசித்த மகாகவி பாரதி பிறந்தநாள். இந்த பாரதியின் பிறந்தநாளை மறந்த கொண்டாடத இந்த சமூகம் ஒரு கூத்தாடியின் பிறந்தநாளை கொண்டடுவதை என்னெவென்று சொல்வது...

இந்த சமூகநிலையை அன்றே பாரதி பாட்டில் சொன்னார்.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

விஜய் தொல்லைக்காட்சியில் பிரபலமான நீயா நானாவில் இந்த கூத்தாடிக்கு மக்களை பிடித்ததற்கு காரணம் என்ன என்று ஒரு கூட்டமே உட்கார்ந்து இவர் இப்படி பேசினார் அப்படி பேசினார் சினிமாவில் என்று புகழ்ந்து பிதற்றுகிறார்கள்..... என்னடா கூட்டம் இது.... தான் யாரை கொண்டாட வேண்டும் என்று கூட தெரியாத மிருகக்கூட்டமா நான் வாழும் கூட்டம்?

இத நினைக்கும் நெஞ்சு கூசுகிறது... நாட்டில் எவ்வளவு பிரச்சினை போகிறது... 
  • கூடங்குளம் அணு உலை என்ற பேராபத்தை தமிழகம் சந்திக்க போராடுகிறது ,
  • முல்லை பெரியாறு அணையை கேரளா அரசு இடிக்க திட்டமிடுகிறது 
  • சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விவசாயிகளையும் சிறு வணிகர்களையும் அழிக்க மத்திய அரசு முயல்கிறது...
  • தமிழக அரசு அத்தியாவசிய பொருள்களின் விலையை ஏற்றி நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது.
இதுபோல் பல பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் பொது ஒரு கூத்தாடியின் பிறந்தநாளும் அந்த கூத்தாடியும் முக்கியமா? அல்லது அந்த கூத்தாடிதான் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்துள்ளானா? மாக்களே சிந்தியுங்கள்.. சினிமா என்பது நாம் உழைத்த களைப்பு போக உழைத்த பணத்தில் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு பண்டம் என்பதை ஏன் மக்கள் என்று உணர்வார்கள்? என்று தணியும் இந்த சினிமா மோகம்?

கடைசியாக பாரதியின் வரிகளுடன்...

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை 
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, 
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் 
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் 
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் 
துஞ்சி மடிகின் றாரே - இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக