திங்கள், 5 டிசம்பர், 2011

நான் ஏன் இந்து இல்லை?

நான் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் என்னை ஒரு இந்து என்று கூறினார்கள் நானும் நம்பினேன் நான் ஒரு இந்து என்று.... ஆனால் சில காலம் சென்ற பிறகு உணர்ந்தேன் நான் எப்படி இந்துவாக இருக்க முடியும்?

 ஒரு கூட்டம் கோழி, ஆடு கறிகளை சாப்பிடாது, கோவில்களில் பலியும் கொடுக்கமாட்டார்கள். ஆனால் எங்க கோவில்களில் விழா என்றாலே கோழியும் ஆடும்தான் முதல் விருந்தாளி.

எங்கள் சாமியை உலகத்தை படைத்தவன் என்று சொல்லமாட்டோம், எங்களை காக்கிற காவல்காரன் என்று தான் சொல்லுவோம். மாறாக இந்து மதத்தில் சாமிதான் இவ்வுலகத்தை படைத்தான் என்று சொல்லுவார்கள்(அந்த கடவுளுக்கு பக்கத்து நாடான சீனா ஏன் தெரியவில்லை?)

 எங்கக் சாமிக்கு பூசைகள் செய்ய எங்கள் சொந்தகாரரே பூசாரியாக இருப்பார், அவரை தேர்ந்தெடுப்பதே ஒரு விழாவாக நடத்துவோம். பூசாரி இல்லாவிட்டாலும் நாங்களே எங்கள் சாமிக்கு பூசை பண்ணுவோம். அனால் இந்து மதகோவில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே சாமியை தொட முடியும்.

எங்கள் சாமிக்கு எங்கள் மொழியிலே பூசை பண்ணுவோம், ஆனால் அங்கே எங்களுக்கு புரியாத தெரியாத மொழியில் நடக்கும்.

எங்கக் சாமி எங்கள் குடும்பங்களில் ஒரு உறுப்பினராக இருப்பார், ஆனால் இந்து சாமிகள் எனச்சொல்லப்படும் சாமிகள் அவ்வாறில்லை எங்களுக்கு...

இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் பொழுது நான் எப்படி இந்துவாவேன்? நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்லன், நான் ஒரு தமிழன் இந்த ஒரு அடையாளம் பொது எனக்கு.

2 கருத்துகள்: