வெள்ளி, 30 டிசம்பர், 2011

"தானே" புயல்

"தானே" புயல் கரைகடந்து சில மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதாக செய்தி, அம்மாவட்ட மக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என் நம்புவோம், இந்த அரசும் அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்வார்கள் என நம்புவோம்.

நம் தமிழ்நாடு ஒரு பக்கம் வெள்ளத்தில் ஒரு தண்ணீர் கேட்டு போராட்டம், ஒரு பக்கம் வெள்ளம் என்ன ஒரு இயற்கை அமைப்பு?

ஒரு காலத்தில் லேமூரியாகண்டம், அப்புறம் பூம்புகார் இன்னும் பல இடங்களை நாம் கடல் தண்ணீருக்கு கொடுத்துவிட்டு, தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களிடம் கேட்டு நிக்கிறோம்... இதுதான் தமிழனின் sirappo

இனிய ஆங்கில புதுவருட 2012 வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட 2012 வாழ்த்துக்கள்.
peaceful-morning.jpg
இந்த வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையட்டும், சமத்துவம் பொங்கட்டும்...

வாழ்த்துகளுடன்,
ஜீவானந்தம் ப 

(லோக்பால்)அன்னா ஹசாரே பாகம் 3 - ஓடவில்லை

கிரண்பேடி, எதோ ஒரு வால் மற்றும் கண்ணுக்கு தெரியாதா ஒருசிலரால் இயக்கப்பட்டு, இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கோமாளி திரு.அன்னா ஹசாரே நடித்து வெளிவந்த "லோக்பால் பாகம் 3"  வெளிவந்த இரண்டாம் நாளிலே மக்களிடம் போதிய ஆதரவு இல்லாதா காரணித்தினால் பெட்டிக்குள் சென்றுவிட்டது. இதனால் இந்த படத்தை தயாரித்த முதலாளிகள்  எல்லாம் தலையில் துண்டைபோட்டு அழுகிறார்கள். இந்த படத்தை வெளியிட்டு சம்பாதிக்க நினைத்தை டி.வி உரிமையாளர்கள் எல்லாம் படத்தின் கதாநாயகன்  கோமாளி திரு.அன்னா ஹசாரே-டம் நஷ்டஈடு கேட்டு உண்ணாவிரதம்(திருப்பதிக்கு) இருக்க திட்டமிட்டுள்ளார்கள்....
இதுல வேற இவரு வீர வசனம் பேசுறாரு... உயிரே போனாலும் லோக்பாலுக்காக போராடுவேன் என்று..  மாதத்துக்கு ஒருமுறை நீர் மங்குனி என்று நிருபித்துக்கொண்டே இரும்...  மங்குனி. போய் உங்க காந்தி மாதிரி ஆட்டுபாலை குடிப்பா, அதவிட்டுட்டு லோக்பால், மாட்டுபாலு வராதே...தேவையில்லாம உடம்புதான் புண்ணாகும்.
20110407194340_anna-hazare-060411.jpgஇன்னுமா இந்த ஊரு நம்மளை நம்புது.. அவ்வ்வ்வ்வ்....

லோக்பால் மக்களவையில் வெற்றி மாநிலங்கவையில் தோல்வி?

இந்த செய்தி கோமாளி அன்னா ஹசாரே அதாரவாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கும். இது தான் இந்திய ஜனநாயகம். அப்புறம் இப்படி வேற ஒரு செய்தி காங்கிரஸ் அரசு கொண்டுவந்த லோக்பால் கிழிந்த காகிதம் என்று... கோமாளி கொண்டுவந்த லோக்பாலும் ஒரு காகித பூ.
அப்புறம் இந்த கச்சு சம்பாதிக்க துடிக்கும் அரசியல் கம்பெனிகளெல்லாம்(கட்சியெல்லாம்) ஒருவர் மேல் ஒருவர் குறை சொல்லி தான் லோக்பாலை ஆதரிக்கிறேன் என்று மக்களை(கொமால்யின் அதரவு கூட்டத்தை)  ஏமாற்றுகிறார்கள், இந்த கூட்டமும் ஆமாய்யா காங்கிரஸ் அரசு நல்ல அரசுதான் இந்த எதிர்கட்சிகள்தான் இதனை எதிர்த்து லோக்பால் வரமால் செய்கிறது என்று ஒரு கூட்டமும், வந்த லோபால் ஒரு காலிக்கூடை அதான் ப.ஜ.க மற்றும் இதர எதிர்கட்சிகள் இதனை எதிர்க்கிறது என்று ஒரு கூட்டமும் பேசுகிறது. எப்படியோ இந்த ஓட்டு பொருக்கி கம்பெனிகள் இலாபம் அடைகிறது. என்று திருந்துமோ இந்த கூட்டம்??????????????????

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

ஜோசியம் பார்த்து புரட்சி செய்யும் அன்னா ஹாசரே

ஊழலை ஒழிக்க கிளம்பியிருக்கும் இந்த காமெடி பீசு அதனைக்கூட நாள் நட்சத்திரம் பார்த்து செய்வதை என்னெவென்று சொல்வது? இந்த நாட்டில் தாண்டா சாதகம் பார்த்து புரட்சியும் நடக்குது... ஆட்சியும் நடக்குது.. ஏன் விண்கலமே செல்கிறது..

அன்னா ஹசாரே  உணவு மறுப்பு போராட்டத்தை செவ்வாய் கிழமைகளில்தான் ஆரம்பிக்கிறார். அதுவும் அம்மாவாசை முடிந்து மூன்றாம்நாள்.. என்ன கொடுமைடா இது? 

5 April 2011 - செவ்வாய் , மூன்றாம் வளர்பிறை 
16 August 2011 - செவ்வாய் 
27 December 2011 - செவ்வாய், மூன்றாம் பிறை 

போராட்டம்  என்ன நாள் நட்சத்திரம் பார்த்துதான் வருமா? 
இதுல வேற இவரு பெரிய சமூக சேகவராம், சமூக சேகவருக்கு எதுக்குய்யா விளம்பரம் (இந்தியாவின் பெரிய ஆங்கில செய்தி நிறுவனம் நேரலை செய்தது)? 
ஊழலின் ஊற்று கண் தனியார் நிறுவனங்கள்தான், ஆனால் இங்கே இவரு இருக்கும் போராட்டத்துக்கு ரிலையன்ஸ் ஸ்பான்சர் செய்கிறது..

இப்போது இருக்கும் சட்டத்தை வைத்து மத்திய அமைச்சரை சிறையில் அடைக்கமுடியுமென்றால், ஒரு மாநில முதல்வரை பதவியிலிருந்தும்,நீதிமன்றத்தில் விசாரிக்கவும் முடியுமென்றால்.. ஏன் எல்லோரையும் விசாரிக்க முடியாது? எதுக்கு புது சட்டம்?  ஊழலை ஒழிக்க சிறந்த வழி மக்களிடம் விழிப்புணர்வுதான்.

திட்டம் போட்டு திருடர கூட்டம் 
திருடிக்கொண்டேதான் இருக்கும் - அதை 
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
 தடுத்துக்கொண்டே தான் இருக்கும் 
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது 

அதனால் மக்களாகிய நாம் உறுதியேற்க வேண்டும், லஞ்சம் கொடுக்கவும், வாங்கவும் மாட்டோம் என்று.

குறிப்பு: உண்ணாவிரதம் என்று சொல்லினால் அவர்கள் எதோ கோவிலுக்கு விரதம் இருப்புது போல் நினைக்கிறார்கள். உணவு மறுப்பு போராட்டம் என்பதே சரியான வார்த்தை 

சனி, 24 டிசம்பர், 2011

லண்டன் எப்படி இருக்கும்?

Billy Elliot என்ற ஆங்கிலபடம் பார்க்கும்போது அதில் வந்த ஒரு உரையாடல்... நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி தன் மகனை நடனப்பள்ளியில் சேர்க்க Durham என்ற ஊரிலிருந்து லண்டன் செல்லும்போது மகன் தன் தந்தையிடம் கேட்பான் இவ்வாறு...
மகன்: லண்டன் எப்படி இருக்கும்?
அப்பா: எனக்கு தெரியாது.. நான் அங்கு போனதில்லை 
மகன்: ஏன்?
அப்பா: ஏன் போகணும்?
மகன்: லண்டன் நம் நாட்டின் தலைநகரம்.
அப்பா: அங்கு நிலக்கரி சுரங்கம் இல்லையே..

இந்த உரையாடல் வெட்ட வெளிச்சமாக உழைப்பாளர்களின் மன நிலையை கூறுகிறது... பணம் இருப்பவனுக்கு மட்டுமே நாடும் நாட்டு தலைநகரமும்.. அன்றாடங்காச்சி மக்களுக்கு தன் வயிறும் தன் குடும்பத்தின் வயிறு மட்டுமே தெரியும்...

டிசம்பர் 24 எங்கள் சூரியன் பெரியார் மறைந்த தினம்

சமூகத்தில் சாதி ஒழிய தான் சாகும் வரை போராடிய "தந்தை" பெரியார் அவர்களின் நினைவுநாள். சாதி பாகுபாடு இருக்கும் வரை இந்த சமூகம் உருப்படாது, இச்சமூகம் உயர சாதியையும், அந்த சாதி அமைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் மதத்தையும் மனிதன் மனத்தில் இருந்து விரட்ட தன் வாழ்நாள் முழுதும் போராடிய எங்கள் "சூரியன்" பெரியார் மறைந்த தினம் இன்று......

சாதியை ஒழிப்போம்!!! மக்கள் அனைவரும் சமம் என்று வாழ்வோம்!!!

வெள்ளி, 23 டிசம்பர், 2011

நாடு கெட்டுப் போகுது -பட்டுக்கோட்டை

       பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
      கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
      கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )
      சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
      மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
      வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
      வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே
      வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
      வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
      வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
      சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
      மூடர்களின் தலைகளிலே...
      [விக்ரமாதித்தன், 1962].

பட்டுக்கோட்டையின் முத்து வரிகள்.... 

கேரளாவில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம் கிடையாதாம்?

கேராளவில் முல்லை பெரியாறு அணையை உடைக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர் அதன் வடிவாக அவர்கள் இந்த வருட கிருஸ்துமஸ் விழாவை கொண்டாட போவதில்லையாம்.....

http://dailypioneer.com/nation/30026-no-christmas-celebrations-for-keralas-dam-hit-.html


இன்னொரு செய்தி நிறுவனம் இதற்கு எதிர்மறையான செய்தி வெளியிட்டுள்ளது ..

http://www.asianetindia.com/news/tpuram-city-gears-celebrate-christmas_308405.ஹ்த்ம்ல்

இதுலாம் ரொம்ப ஓவர்......

புதன், 21 டிசம்பர், 2011

பகவத் கீதை ரசியாவில் தடை

பகவத் கீதை ரசியாவில் தடை செய்ய வழக்கு நடக்கிறது , கீதை காப்பாற்ற இந்திய காவி சங்கம் ரசியாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாம்.... இங்கே ஒரு சந்தேகம்லே ... கடவுள் எழுதிய நூலை மனிதன் எப்படி தடை செய்ய முடியும்...?அப்படி செய்தால் அந்த நீல வண்ணகடவுள் வேற ஏதாவது வண்ணத்தில் வந்து தன புத்தகத்தை தடை செய்த கயவர்களை(அரக்கர்களை)அழிக்க வேண்டியதுதானே?... அனால் இங்கே கடவுளை காப்பாற்ற மனிதன் போகிறானே.... மக்களே புரிந்துகொள்ளுங்கள் கடவுள் என்பது மனிதர்களால் படைக்கப்பட்டவை... 


திங்கள், 19 டிசம்பர், 2011

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுகொடுக்க ஒரு கூகிள் குரோம் அப்ளிகேசன்

https://chrome.google.com/webstore/detail/dndlleboojnkaoekafikdlbhidccljdc
OCyXNFPpwMLhvb9maxHuABlOA8Fl_oBeazgY2Cd35s5UddPkNngKeMQeYxl8SFIwvSTelgI3eA=s50-h50-e365
குழந்தைகளுக்கு தமிழ் கற்றுகொடுக்க ஒரு கூகிள் குரோம் அப்ளிகேசன். எந்த எளிய படத்துடன் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் எழுதும் முறையுடன் விளக்கப்பட்டுள்ளது. PDF -ல் அச்செடுத்து எழுதி பழகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை குரோமில் வெளியிட்டு நான்கு மாதங்களில் 480 பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். அனைத்து பயனாளர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள், ஏதும் குறைகள் அல்லது மேலும் இதனை மெருகூட்ட உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.

இயேசுவின் பிறப்பும் அதன் சந்தேகங்களும்

இயேசு எப்பொழுது எங்கு பிறந்தார் போன்ற சந்தேகங்களை எளிமையாக இங்கே விளக்கியிருக்கிறார்கள்.

எவ்வாறு இந்து மதத்தில் பல பொய் கதைகளை அதுவும் கற்பனைக்கூட எட்டாத கதைகளை சொல்லி ஏமாற்றுகிறார்களோ (கிருஷ்ணன் பிறந்த கதை , முருகன் பிறந்த கதை , பிளையார் பிறந்த கதை.....) அதே போல கிறித்துவ மதத்திலும் உண்டு என்பதை மேலே உள்ள சுட்டி நிருபிக்கிறது.

சிறு வயதில் கிருத்துவ பள்ளிகூடத்தில் படிக்கும் பொழுது எங்களை (குழந்தைகளை) காலையில் இயேசுவின் புகழ் பாடும் பாடலை பாடச்சொல்லியும், இயேசு என்றால் யாரு என்றே தெரியாத எங்களை அவரின் பிறந்தநாளை கொண்டாடச்சொல்வதும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்று வளர்ந்து கல்லூரியில் படிக்கும் போதுதான் புரிந்தது... 

கிராமங்களில் கிர்த்துவ மதத்தை பரப்புவதற்காக ஏழை மக்களுக்கு உதவி செய்வது போல் வந்து பிறகு அவர்கள் ஆலயத்திற்கு வரவழைத்து, ஏசுவைப்பற்றி சினிமா காட்டி மக்களை மாற்றுவார்கள்... என்னிடமே உன் பெயர் ஜீவானந்தம் என்பது கிருத்துவ பெயர் .. நீ கிருத்துவனாக மாறவேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள்...  இவாறு பணத்துக்காக ஏதும் அறியாத மக்களை மதம் மாற்றி ஏற்கனவே சாதியால் பிளவுபட்ட மக்களை மதம் என்றொரு மற்றொரு பிளவு கோட்டை வரைந்தது அவர்களை எப்பொழுதும் பிரிக்கிறார்கள்.....

எனக்கு தெரிந்து ஒரு மனிதனை கொன்றததுக்காக அதிக மனிதர்களை கொன்ற மதம் கிருத்துவ மதமாதான் இருக்கும் (யூதர்களை கொள்ளாதா ஐரோப்பிய நாடுகளே இல்லை ரஷ்யா உள்பட)...



ஜெ-சசி பிரிவு:::சந்தேகங்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் அ.தி.மு.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இது தான் அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தி. நாம் மறந்து விடக்கூடாது இதேபோல் 1996 லும் நடந்தது பின் மீண்டும் இருவரும் சேர்ந்தனர். 

சந்தேகம்:

  1.  இன்னும் கொஞ்ச நாட்களில் சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளது ஜெவின் சோசிய பற்று அனைவரும் அறிந்ததே.. இவர்களின் பிரிவு இந்தப்பெயர்ச்சி ஒரு பரிகாரமாகவே இருக்கும் இன்னும் சில காலங்களில் தோழிகள் மீண்டும் சேர்ந்து ஆட்டுவார்கள்...
  2. அல்லது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெ உள்பட அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். அதற்காக இவர்கள்(சசி) என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று ஜெ நீதிமன்றத்தில் சொல்லி தப்பித்து, பிறகு தனது பதவியை பயன்படுத்தி தன தோழியை வெளியே கொண்டு வந்துவிடுவார் ஜெ.

சனி, 17 டிசம்பர், 2011

சன் டிவியின் விளம்பரம் மோகம் - தமிழரின் உரிமை பற்றி கவலை இல்லை

சுட்டி டிவியில் கொலைவெறி பாடலை வைத்து இருபது நிமிடத்திற்கு ஒரு முறை அந்த டிவிக்கு விளம்பரம் செய்கிறார்கள். இதன் மூலம் அந்த படத்திற்கும் இந்த டிவிக்கும் இலவசமாக விளம்பரம் செய்யும் இந்த பணக்கார முட்டாள்கள் ஏன் முல்லை பெரியார் அணையை பற்றிய விவரங்களை மக்களுக்கு காட்டினால் என்ன?

தமிழன் பணத்தில் டிவியை நடத்தும் இந்த பணக்கார தமிழர்கள், தமிழனுக்கு உரிய உரிமையை நிலை நாட்ட அதனை பற்றிய ஆவணங்களை ஒரு நாளைக்கு பத்து முறை காட்டினால் அந்த செய்தி அனைத்து மக்களுக்கும் பொய் சேருமல்லவா? இவர்களா செய்வார்கள் பணத்தை தின்னும் முட்டாள்கள்..... இவிங்களுக்கு தமிழனும் சண் டிவி பார்க்கணும் கேரளகாரனும் சூர்யா டிவி பார்க்கணும்.... என்ன செய்ய.. நாம் தான் இவர்களை புறக்கணிக்கனும் .


செவ்வாய், 13 டிசம்பர், 2011

என்னத்த சொல்ல

வரதட்சனை வாங்ககூடாது என்று பல தலைமுறையாய் கதறிக்கொண்டு வருகிறோம், படித்த மேதாவிகள் உலவும் இணையத்தில் எதோ ஒரு மாங்கா மடையன் வங்கி கடன் வட்டி calculator மாதிரி வரதட்சனை calculator  கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அதனை இணையத்தில்விட்டுள்ளான் லகுட பாண்டி.. என்னே ஒரு வில்லத்தனம் மாங்கா...

http://www.dowrycalculator.com/

இதுகள மாதிரி உள்ளதெல்லாம் எப்படி/எப்ப திருந்தும்... பொழுதுபோக்கிற்காக இதனை செய்திருந்தாலும் இது கண்டிக்கத்தக்க வடிகட்டிய முட்டாள்தனம்....

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

என்று தணியும் இந்த சினிமா மோகம்?

டிசம்பர் 12 தமிழக கூத்தாடி உச்ச நட்சத்திரம் பிறந்தநாள் 
டிசம்பர் 11 தன் வயிறை விட தன் சமூகத்தை நேசித்த மகாகவி பாரதி பிறந்தநாள். இந்த பாரதியின் பிறந்தநாளை மறந்த கொண்டாடத இந்த சமூகம் ஒரு கூத்தாடியின் பிறந்தநாளை கொண்டடுவதை என்னெவென்று சொல்வது...

இந்த சமூகநிலையை அன்றே பாரதி பாட்டில் சொன்னார்.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

விஜய் தொல்லைக்காட்சியில் பிரபலமான நீயா நானாவில் இந்த கூத்தாடிக்கு மக்களை பிடித்ததற்கு காரணம் என்ன என்று ஒரு கூட்டமே உட்கார்ந்து இவர் இப்படி பேசினார் அப்படி பேசினார் சினிமாவில் என்று புகழ்ந்து பிதற்றுகிறார்கள்..... என்னடா கூட்டம் இது.... தான் யாரை கொண்டாட வேண்டும் என்று கூட தெரியாத மிருகக்கூட்டமா நான் வாழும் கூட்டம்?

இத நினைக்கும் நெஞ்சு கூசுகிறது... நாட்டில் எவ்வளவு பிரச்சினை போகிறது... 
  • கூடங்குளம் அணு உலை என்ற பேராபத்தை தமிழகம் சந்திக்க போராடுகிறது ,
  • முல்லை பெரியாறு அணையை கேரளா அரசு இடிக்க திட்டமிடுகிறது 
  • சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விவசாயிகளையும் சிறு வணிகர்களையும் அழிக்க மத்திய அரசு முயல்கிறது...
  • தமிழக அரசு அத்தியாவசிய பொருள்களின் விலையை ஏற்றி நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது.
இதுபோல் பல பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் பொது ஒரு கூத்தாடியின் பிறந்தநாளும் அந்த கூத்தாடியும் முக்கியமா? அல்லது அந்த கூத்தாடிதான் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்துள்ளானா? மாக்களே சிந்தியுங்கள்.. சினிமா என்பது நாம் உழைத்த களைப்பு போக உழைத்த பணத்தில் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு பண்டம் என்பதை ஏன் மக்கள் என்று உணர்வார்கள்? என்று தணியும் இந்த சினிமா மோகம்?

கடைசியாக பாரதியின் வரிகளுடன்...

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை 
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, 
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் 
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம் 
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் 
துஞ்சி மடிகின் றாரே - இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.




வெள்ளி, 9 டிசம்பர், 2011

கயவன் இராஜாஜி பிறந்த தினம் இன்று 9-12

குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்து நம் கல்வியில் கல்லை போட நினைத்த கயவன் இராஜாஜி பிறந்த தினம் இன்று. இந்த கயவனின் எண்ணம் நிறைவேறி இருந்தால் நாமெல்லாம் பள்ளிகூடத்திற்கே சென்றிற்கமுடியாது. இதுபோல் கயவர்களை நினைவில் வைத்து எதிர்காலத்தில் இந்த கயவர்களை உருவாகவிடக்கூடாது.

பெரியாறு அணை உடைந்தால் பெரியார் நாடு உருவாகும்!

நன்றி கீற்று

அதிஅசுரன் வியாழன், 08 டிசம்பர் 2011 09:20 

'முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; எனவே அதை உடைப்போம்' என மலையாள கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரசு, பாரதீய ஜனதா தேசிய திலகங்களும் உச்சக்கட்ட அடாவடியைத் தொடங்கியுள்ளனர்.  தன் நாட்டுக்கு 50 சதவீத அத்தியாவசிய உணவுப் பொருட்களை விளைவித்து அனுப்பும் தமிழனுக்கு நீர் தர மறுக்கின்றனர் மலையாளிகள். முன் எப்போதும் நடந்திராத சம்பவமாக, தமிழ்நாட்டு காய்கறி  லாரிகளையும் மலையாளிகள் தாக்கி, திருப்பி அனுப்பியுள்ளனர். விவசாயம் செய்ய தண்ணி தராத கேரளாக்காரனுக்கு, அவனிடமே அடி, உதையை வாங்கிக்கொண்டு, அவனுக்கே நம் நாட்டில் இருந்து உணவுப்பொருட்களை அனுப்பி, அதன்மூலம் வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தமிழர்கள். எதிர்வினையாக தமிழ்நாட்டில் ம.தி.மு.க, பெரியார் தி.க, தமிழ்த்தேசிய இயக்கங்கள், தலித் அமைப்புகள் என  அனைவரும் கேரள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அனைத்துத் தரப்பிலும் நடக்கும் போராட்டங்கள் முதன்மை எதிரியை அடையாளம் காட்டாமலேயே நடந்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலுக்கு காரணம் மலையாளிகள் மட்டுமா? 

முல்லைப் பெரியாறு  அணை  

தமிழ்நாட்டில் உள்ள இராஜபாளையம் அருகில் உள்ள சிவகிரி மலைப் பகுதியில் தான் பெரியாறு நதி உற்பத்தி ஆகிறது. இது தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நதி. இங்கிருந்து 56 கி.மீ பயணம் செய்து கேரள எல்லையை அடைகிறது. பெரியாற்றோடு கேரளாவில் பாயும் முல்லையாறும் இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.  1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் நாள் திருவாங்கூர்  சமஸ்தானத்துக்கும் சென்னை இராஜதானிக்கும் இடையே ஏற்பட்ட 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேஜர் ஜான் பென்னி குக் அவர்களின் கடுமையான முயற்சியில் இந்த அணை கட்டப்பட்டது. 1970 வரை இந்த ஒப்பந்தம் எந்த இடையூறும் இல்லாமல் நடைமுறையில் இருந்துள்ளது. 1979 இல் அணை பலவீனமாக உள்ளதாக மலையாள மனோரமா ஏடு கிளப்பிய வதந்தி இன்றுவரை அணையாமல், இரு தேசிய இனங்களுக்கு  இடையிலான போராக உருவாகியுள்ளது.  

தேவிகுளம் - பீர்மேடு  

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் தோன்றும்போதெல்லாம் தவறாமல் பேசப்படும் ஒரு செய்தி - மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளாவோடு இணைக்கப்பட்டுவிட்டது; அந்தப் பகுதியில்தான் அணை உள்ளது; அது தான் சிக்கலின் மையம் என்று தமிழ்த்தேசிய இயக்கங்களால் குற்றம்சாட்டப்படுகிறது.  இது சரியான பார்வை அல்ல. முதன்மையான - உண்மையான எதிரியை அடையாளம் காண இயலாத - அடையாளம் காட்ட விரும்பாத தன்மை என்றே சொல்ல வேண்டியுள்ளது.  
மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்டது 1956 ஆண்டு. ஒப்பந்தம் போடப்பட்டது 1886 ஆம் ஆண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தோடு ஏன் ஒப்பந்தம் போட்டார்கள்? அப்போது அணை இருந்த பீர்மேடு பகுதி அந்த சமஸ்தானத்துக்கு உட்பட்டே இருந்துள்ளது. அதனால்தான் ஆங்கிலேயர்களால் அந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்திடம் தமிழர்கள் பகுதி போனது எப்படி? எப்போது? தேவிகுளத்தையும் பீர்மேட்டையும் மலையாளிகளிடம் 1886க்கு முன்பே இணைத்தது யார்? இவற்றுக்குப் பதில் காணவேண்டியது அவசியம். அப்போது பெரியாரோ, காமராஜரோ அரசியலில் இல்லை.  
தேவிகுளம், பீர்மேடு பறிபோனது அது தான் சிக்கல்களுக்கு காரணம் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் அந்த பறிகொடுப்புகூட இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டதால் வந்த வினைதானே? இந்திய விடுதலை இல்லை என்றால் மொழிவாரி மாகாணப் பிரிவினையே நடந்திருக்காது. 
தனித்தமிழ்நாடு நோக்கி பெரியாரும் ஆதித்தனாரும் இணைந்து போராடிக்கொண்டிருந்த காலம் அது. இந்த மொழிவாரிப் பிரிவினையையும் பெரியார் கடுமையாக எதிர்த்துள்ளார். 
"பிரிவினைக்குப் பெயர் மொழிவாரி நாட்டுப்பிரிவினை. இதில் பிரிந்துபோகவேண்டுமென்று வாதாடுகிறவர்கள் மொழியை ஆதாரமாகக் கொண்டுதானே பிரிவினை கேட்கவேண்டும்?  அதை விட்டுவிட்டு, வேறு மொழி 100க்கு 69, 70, 80 வீதம் பேசுகிற மக்கள் உள்ள நிலையைத் தங்கள் நாட்டுடன் சேர்க்கவேண்டுமென்று கேட்பது எப்படி யோக்கியமாகும்? அல்லது இந்தப் பிரிவினைக்கு, மொழிவாரி மாகாணப் பிரிவினை  என்றாவது எப்படிச் சொல்ல முடியும்?" என்றார்.      - விடுதலை - 07.11.1953 

சர்வதேச நதிநீர் சட்டங்கள்  

இன்று சாதாரணமாக கிராமங்களில் சிறுசிறு ஏரிகளில், குளங்களில் பாசனவசதி பெற்று விவசாயம் செய்பவர்களிடையேகூட  கடைமடைக்காரனுக்குத்தான் முன்னுரிமை என்ற வழக்கம் உள்ளது.  அதையேதான் சர்வதேச நதிநீர்ச் சட்டமும் சொல்கிறது. ஒரு நதியின் கடைமடை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அல்லது பயனாளர்களுக்குத்தான் அந்த நதியில் முன்னுரிமை. அவர்கள் அனுமதியின்றி நதியின் மேல்பகுதியில் இருப்பவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. "நதியின் கீழ்நிலையில் உள்ளவர்கள் அனுமதி இல்லாமல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கட்டக்கூடாது. நதியில் கீழ்நிலையைப் பாதிக்கின்ற வகையில் நீரை செயற்கையாக தடுத்து உபயோகிக்கக் கூடாது"  என்கிறது சர்வதேச நதிநீர்ச் சட்டம். இதன் அடிப்படையில் தான் பலநாடுகளில் நதிநீர்ப் பிரச்சனைகள் 
 தீர்க்கப்பட்டுள்ளன.  

உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே ஓடும் பல நதிகள் உள்ளன. ஐரோப்பாவில் ரைன் நதியைப் பயன்படுத்துவது தொடர்பாக  ஜெர்மன், ஃப்ரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே சிக்கல்கள் எழுந்தன. ஆப்ரிக்காவில் நைல் நதி பங்கீடு தொடர்பாக சூடானுக்கும்  எகிப்துக்கும் சிக்கல். டான்யூப் நதிப் பங்கீட்டில் ஆஸ்த்திரியா, துருக்கிக்கு இடையே சிக்கல். வட அமெரிக்க 
 மாகாணங்களுக்குகிடையே  கொலராடோ நதிநீர்ச் சிக்கல். தென் அமெரிக்காவில் அமேசான் நதிநீர்ச் சிக்கல். ஆஸ்திரேலியாவில் முர்ரே நதிப் பங்கீடு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா இடையே சிக்கல்.  ஆமுர் நதிப் பங்கீட்டில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் சிக்கல் என உலகெங்கிலும் நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்கள் இருந்தன.  
அந்த வரிசையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமாகும். 19.09.1960இல் அன்றைய இந்தியப் பிரதமர் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தம் சட்லஜ், ராவி, பியாஸ் ஆகிய கிழக்குப் பகுதி நதிகளையும் ஜீலம், சிந்து, செனாப் ஆகிய மேற்குப் பகுதி நதிகளையும் 
 சமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்காகவும் அவற்றில் நீர்மின்சக்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இயற்றப்பட்டதாகும்.  இரு நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல் ஆதலால் அப்போதே ஐக்கிய நாடுகள் அவையும் தலையிட்டு ஐ.நா. அவை உருவாக்கிய நடுவர் முன்னிலையில்,  உலக வங்கியின் மேற்பார்வையில், உலக வங்கியும் ஒரு சாட்சியாக இந்த ஒப்பந்தம் இயற்றப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பலமுறை போர்கள் நடைபெற்ற காலத்திலும் இந்த ஒப்பந்தங்கள் மீறப்படவில்லை. இந்த நதிகளின் பங்கீட்டில் எந்த சிக்கலும் வரவில்லை. அப்படியே உருவாகி இருந்தாலும் அவற்றைத் தீர்க்கும் அனைத்து வழிமுறைகளையும் ஐ.நா மன்றமும், உலக வங்கியும் செய்திருக்கின்றன.  ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் அல்லது நாடுகளுக்கும் இடையே ஒரு நதியைப் பகிர்ந்து கொள்வதில் உருவாகும் கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் தீர்த்துவைப்பதற்கு சர்வதேச நதிநீர்ச் சட்டங்கள் பயன்படுகின்றன. அதில் முக்கியமான விதிகள் 1956ஆம் ஆண்டு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற நதிநீர்ப் பங்கீடு குறித்த சர்வதேச அளவிலான மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டவை ஆகும். இவை போன்ற சர்வதேச நதிநீர்ச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.நா. மன்றம் பல நடுவண் அமைப்புகளை உருவாக்கியுள்ளது.  அவற்றில் ICJ (International Court of Justice), PCA (Permenent Court of Arbitration)  ஆகியவை முக்கியமானவையாகும்.  

கேரளா ஒரு தனி நாடாகவோ அல்லது இந்தியாவுடன் இணைந்த பகுதியாகவோ இருந்து, தமிழ்நாடு ஒரு தனி குடிஅரசாக, தனி நாடாக இருந்தால் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற அனைத்து ஆற்றுநீர் உரிமைகளும் சர்வதேச நதிநீர்ச் சட்டங்களின்படி முழுமையாக நமக்குக் கிடைத்துவிடும். தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் முல்லைப் பெரியாற்றிலோ, காவிரியிலோ அண்டை நாடு தடை செய்தால், சிக்கல் உருவாக்கினால் ஐக்கிய நாடுகள் மன்றமும்,சர்வதேச நடுவர் மன்றங்களும் தலையிட்டு சிக்கலைத் தீர்த்து வைக்கும். அதற்கு எடுத்துக்காட்டுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். ஆனால் ஒன்றுபட்ட இந்தியாவில் - பார்ப்பன - பனியா கும்பல்களின் ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் நாட்டில் பார்ப்பன நலன்களே முன்னிறுத்தப்படும்.      

பார்ப்பன இந்தியா  

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 1919க்கு முன்பு நதிநீர்ப் பங்கீடு, நீர்ப்பாசனம் தொடர்பான விவகாரங்கள் இங்கிலாந்து அரசவையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. 1919க்குப் பிறகு இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கத் தொடங்கியபோதே பார்ப்பனர்கள் கையில் அதிகாரம் சென்றதால் அனைத்துத் துறைகளையும் 
 போலவே நதிநீரிலும் பார்ப்பன நலன்கள் முன்னிறுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போகும்வரை காவிரி, முல்லைப் பெரியாறு ஆறுகளில் சம்மந்தப்பட்ட மாகாணங்களுக்கிடையே மோதல்போக்கு இல்லாமல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தோழர் பெரியார் சொன்னதுபோல, ஆங்கிலேயர்களிடமிருந்து பார்ப்பன - பனியாக்களுக்கு நடந்த மேட் ஓவர்தானே இந்திய விடுதலை. அப்படிப்பட்ட பார்ப்பன - பனியா இந்தியாவில்தான் தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் போலவே ஆற்றுநீர் உரிமைகளும் பறிபோய்விட்டன.
  
எனவேதான் பெரியார், "தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழர் நாட்டையும், தமிழ் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தன்னுடைய மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்"  என்றார்.  

உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளைச் செய்துமுடித்த பின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. கேரள அரசின் மேல்முறையீட்டுக்குப் பிறகு 2007 ஆகஸ்டில் மீண்டும் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் அனைத்து தீர்ப்புகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கேரள அரசு குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டது. இந்திய அரசின் வனப்பாதுகாப்புச் சட்டங்களையும் மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக முதற்கட்டச் சோதனைகளையும் நடத்தி முடித்திருக்கிறது.  
இந்திய அரசின் சட்டங்களையோ, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையோ மதிக்காத, செயல்படுத்தாத கேரள அரசினைக் கண்டித்து தமிழ்நாட்டு உரிமையைப் பெற்றுத் தர வேண்டிய மத்திய பார்ப்பன அரசு, எங்கோ, எந்த நாட்டிலோ பிரச்சனை என்பது போல கண்டுகொள்ளாமல் இருப்பதும், பிரச்சனை எல்லைமீறிப் போனபிறகு 'கமிஷனைப் போடு அல்லது கல்லைப் போடு' என்பது போல ஒரு விசாரணைக் கமிஷன் அமைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது என்று சிக்கலைத் தீர்க்கும் எண்ணமில்லாமல் செயல்படுகிறது.  

டேம் 999 என்ற ஒரு பொய்ப்பிரச்சாரப் படத்துக்கு மத்திய அரசு சென்சார் சான்றிதழ் அளிக்கிறது.  அது கருத்துரிமை என்றால், அரசியல் சாராத கலை தொடர்பான விசயம் என்றால் நாங்களும் படம் எடுக்கிறோம். இந்திரா காந்தி கொலை பற்றி பஞ்சாப்காரனின் பார்வையில் - இராஜீவ் கொலை பற்றி ஈழத்தமிழ்ப் பெண்களின் பார்வையில் நாங்களும் படம் எடுக்கிறோம், அனுமதிக்குமா மத்திய அரசு? அவ்வளவு வேண்டாம் சங்கரராமன் கொலை பற்றி தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பார்வையில் படம் எடுக்கிறோம்; சென்சார் போர்டு அனுமதிக்குமா? இரு தேசிய இன மக்களுக்குள் மோதலை உருவாக்கக்கூடிய திரைப்படம் என நன்கு தெரிந்தும் படத்தை அனுமதிக்கிறார்கள்.  இதுபோல இரு தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கிவிட்டு, அதில் குளிர் காய்ந்துகொண்டு தனது சுரண்டலை - இந்திய தேசியச் சுரண்டலை தங்கு தடையின்றி நடத்துகிறது பார்ப்பன - பனியா அரசு. மத்திய அரசில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட - நீர்வளத்துறை உள்ளிட்ட முக்கியமான 30 துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன உயர்சாதியினர் எண்ணிக்கை குறித்து  மண்டல்குழு அறிக்கை வெளியிட்ட பட்டியல் இதோ.  

பிரிவு மொத்த எண்ணிக்கை தாழ்த்தப்பட்டோர்% பிற்படுத்தப்பட்டோர் %  பார்ப்பன உயர்ஜாதி% 
Class I 1,74,043 5.68 4.69 89.63 
Class II 9,12,786 18.18 10.63 71.19 
Class III & IV 4,84,646 24.40 24.40 51.20 
All Classes 15,71,475 18.71 12.55 68.74 
இந்தியா முழுவதும் வேதாந்தா, ஜிண்டால், போஸ்கோ, டாடா, மிட்டல், ரிலையன்ஸ் போன்ற பார்ப்பன - பனியா - பன்னாட்டுக் குழுமங்களால்தான்  கனிமவளக் கொள்ளை, கல்விக்கொள்ளை, கடல்வளக் கொள்ளை, பெட்ரோலியக் கொள்ளை, அலைக்கற்றைக் கொள்ளை என அனைத்து வகையான  சுரண்டல்களும் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட பட்டியலில் உள்ள பார்ப்பன அதிகார வர்க்கத்தின் துணையோடுதான் சுரண்டல்கள் திட்டமிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு, சில்லறை வர்த்தகத்திலும் நேரடி அந்நிய முதலீடு, கூடங்குளம் அணுஉலை அமைப்பு என மக்கள்விரோத முடிவுகளையும் இந்த அதிகார வர்க்கம்தான் செயல்படுத்துகிறது.   

இந்த பனியா - பன்னாட்டு வணிகக்கும்பல்களின் நலன்களுக்காக மேற்கண்ட பார்ப்பன அதிகார வர்க்கம் போடும் திட்டங்கள்தான் நமக்கு பட்ஜெட்டாகவும், ஐந்தாண்டு திட்டங்களாகவும், தொழில் அபிவிருத்தி திட்டங்களாகவும்  அரசியல்வாதிகளால் சொல்லப்படுகிறது. அவர்களுக்கு கொள்ளை இலாபம் தரும் திட்டங்களைச் செயல்படுத்தவதற்காக இந்த பனியா - பன்னாட்டுக்கும்பல்  இந்திய 
 அரசியல்வாதிகளுக்கு பிச்சை போடும் காசைப் பங்கு போடுவதில் வரும் சண்டையும், இந்தக் கூட்டுக்கொள்ளையை மக்கள் கவனிக்காமல் இருக்க மத்திய அரசால் நடத்தப்படும் நாடகங்களும்தான் தான் நமக்கான அரசியல்.  

முதன்மை எதிரி  

தொடர்ந்து பல வருடங்களாக சிக்கல்களை வளரவிட்டு தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கி விட்டு, தனது சுரண்டல்களை அயராது நடத்திக்கொண்டிருக்கும் இந்தியத் தேசியமும் அதனால் பயன்பெறும் பார்ப்பன - பனியாக்கும்பல்களுமே நமது முதன்மை எதிரி. அடாவடியாக நடந்துகொள்ளும் மலையாளிகளுக்கு எதிராக அவர்களது வணிக நிறுவனங்களைத் தாக்குகிறோம்; கேரள எண் உள்ள வாகனங்களைத்  தாக்குகிறோம்; கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகைப் போராட்டம் அறிவிக்கிறோம். எல்லாம் சரிதான். எத்தனை நாளுக்குத்தான் அம்பை மட்டும் எதிர்த்துக்கொண்டிருப்போம்? எப்போதுதான் எய்தவனை நோக்கித் திரும்புவோம்? சர்வதேசச் சட்டங்கள் நமக்கு ஆதரவாக உள்ளன. ஆனால் நாம் தனி நாடாக இருந்தால்தான் அவை பயனளிக்கும். இந்த உண்மைகளை எப்போது உரிமை மறுக்கப்பட்டவர்களிடம்  சொல்லப் போகிறோம்?  

இளைஞர்கள் ஆலுக்காஸ் நகைக்கடை தாக்குதல், காய்கறி லாரிகளை மறித்தல், கேரளா செல்லும் பேருந்துகளை மறித்தல், நாயர் டீக்கடை, பேக்கரிகளை உடைத்தல் என ஒவ்வொரு வருடமும் நடத்திக் கொண்டிருக்கத்தான் போகிறோம். நமது தலைவர்களும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், உச்சநீதிமன்ற வழக்கு, பிறகு நடுவர் மன்றம், அந்தத் தீர்ப்புகளை அமுல்படுத்த சாகும்வரை உண்ணாவிரதம் எனத் தொடர்ந்து  இயங்கத்தான் போகிறார்கள்.  நவம்பர் மாதமானால் முல்லைப் பெரியாறு, ஜூன், ஜூலையானால் காவிரி உரிமைப் போராட்டம் என சீசன் வியாபாரம் போன்ற சீசன் போராட்டங்களையும், பயனற்ற சடங்குத்தனமான போராட்டங்களையும் காணச் சகிக்காமல் மனம் புழுங்கி, வெந்து  முத்துக்குமார்களும் செங்கொடிகளும் தீயில் வெந்து மடிந்துகொண்டுதான் இருப்பார்கள். ஒருமுடிவு வேண்டாமா?  

தமிழ்நாட்டு விடுதலையில் அக்கறையுள்ள தோழர்கள், தலைவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசியத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுங்கள். பெரியாரைப் போல,பெரியார் காலத்தைப் போல இந்திய தேசியக் கொடி எரிப்பு, இந்திய யூனியன் வரைபட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு போன்ற போராட்டங்களை அறிவியுங்கள். தனித்தமிழ்நாட்டுக்கான பரப்பரைகளை முல்லைப் பெரியாறு அணையிலிருந்தே தொடங்குங்கள். உச்ச நீதிமன்றம் நம்மைக் காப்பாற்றும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நம்மைக் காப்பாற்றுவார், பாரதிய ஜனதா காப்பாற்றிவிடும், நடுவர் மன்றம் உரிமைகளைப் பெற்றுத்தரும்,தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் சாதித்துவிடலாம்  என்று தமிழர்களை நம்ப வைக்காதீர்கள். இந்திய தேசியம் அலறுவதில் தான் தமிழர் உரிமை மலரத் தொடங்கும். இந்திய தேசியத்தையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களையும் தாக்கத் தொடங்குங்கள்.  1980களில் பேராசிரியர் செ.ஆ. வீரபாண்டியனால் தொகுக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வெளியிட்ட 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' நூலில் பெரியாறு அணை, காவிரி சிக்கல்கள் விரிவாகப் பேசப்பட்டு அதன் எதிரிகள் பார்ப்பனர்களும் இந்திய தேசியமும் என்பது உறுதிப்பட்டது. அதற்குப் பிறகு தி.க.வாலும், பெரியார் தி.க.வாலும், தமிழ்த்தேசிய இயக்கங்களாலும் நடந்த ஆற்றுநீர் உரிமை தொடர்பான  பரப்புரைகளும், போராட்டங்களும் பார்ப்பனர்களை எதிர்த்தோ, இந்திய தேசியத்தை எதிர்த்தோ திட்டமிடப்படவில்லை. அடையாளம்கூட  காட்டப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ அவர்கள் "அணை உடைந்தால் நாடு உடையும்" என சரியான திசைநோக்கித் திரும்பியிருக்கிறார்.  ஒரு அரசியல் அமைப்பை நடத்தும் வை.கோ.வுக்கே இந்தத் துணிச்சல் இருக்குமானால், தேர்தல் 
 அரசியலில் பங்கேற்காத மாற்று அரசியலில் ஆர்வமுள்ள இயக்கங்கள், தோழர்கள், இளைஞர்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?  

- அதிஅசுரன் ( atthama...@gmail.com

நன்றி கீற்று 

தினமல(ம்)ரின் பார்ப்பான புத்தி

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: சிறீரங்கத்தில் அர்ச்சகப்
    பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்துத் தூக்கும், மனித உரிமைக்கு எதிரான
    நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில்
    குதிக்கும்.
     
    டவுட் தனபாலு: இப்படித்தான், கல் சிலையைக் கும்பிடுறவன்
    காட்டுமிராண்டின்னீங்க... ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க... கிருஷ்ண
    ஜெயந்தியை கிண்டல் பண்ணீங்க... அண்ணாதுரை நூற்றாண்டு விழா
    கொண்டாடுறீங்க... பல்லக்கு தூக்குற தைக் கண்டிக்கிறீங்க... தலைவர்களை
    சாரட் வண்டியில வச்சு ஓட்டுறீங்க... வாழ்க உங்க பகுத்தறிவு...!
     
    - தினமலர், 7.12.௨௦௧௧

இந்த பொழப்புக்கு எங்கேயாவது போய் உண்டக் கஞ்சி சாப்பிடு தினமலமே.....

வியாழன், 8 டிசம்பர், 2011

பாரதியாரின் 130-வது பிறந்தநாள் (திசம்பர் 11 1882)


கவிஞர் ஆக இருப்பதற்கு கற்பனை மட்டும் போதாது அவனுக்கு இச்சமுதாயத்தின் மேல் அன்பு இருக்க வேண்டும் என்று  உணர்த்தியவன் பாரதி.


Barathiyar.jpg

"பாரதி" என்ற சொல்லுக்கு எவ்வளவு வீரம், கோபம். அவன் வருகைக்கு முன்னால் என் அன்னை தமிழில் எழுதிய எழுத்துக்களை படிக்க சாதாரண பாமரனால் முடியாது. பாரதி என் தாய் தமிழை இவ்வளவு  எளிதாக தேனிலும் இனிமையாக எழுதி, எழுத்தில் புரட்சி செய்தவன் பாரதி.

அச்சம் என்பது மடமை என்னும் சொல்லுபோது....
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்

இந்த வார்த்தைகளை சொல்லும் ஒருவன் மனதில் எவ்வளவு உறுதி வேண்டும்?

அதே வீரம் இந்த வார்த்தைகளிலும்...
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

தன் கனவு நாட்டைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை


பெண் விடுதலையை தமிழ் நாட்டில் முதலில் எழுப்பிய பாரதி....
''பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந் திறப்பது மதியாலே''
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.


கோபபடச் சொல்லும் அதே பாரதி பகைவனிடமும் அன்பு செய்... என்று கூறுகிறார்.
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!

தன் பாரத நாடு எவ்வாறு இருக்க வேண்டும் எனும் போது....
வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு

ஒரு மனிதனுக்கு எவை எவை வேண்டும்..............
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

பாரதி காலத்தில் எல்லோரும் பரங்கியர்களை நோக்கி போராட 
பாரதி தன் சமூகத்தை பார்த்தார்.
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

இந்த வரிகள் தான் எவ்வளவு ஆழமான கருத்துக்கள். 

அனால் பாரதி...
இன்னும் சாதி உள்ளது உன் நாட்டில்.....

பார்ப்பானை பற்றி கூறு போது....
நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு;
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.
இதை விட கேவலமாக அவர்களை வேற யாரும் திட்ட முடியாது....

இச்சமூகத்தை நான் 
பார்த்த பார்வை 
பாரதி....






உறவா பணமா?

வாயை கட்டி வயத்த கட்டி வளர்த்த ஆத்தா அப்பன் வயதான காலத்தில் தனிமையில் இருக்க, வளர்க்கப்பட்ட ஆடுகள் பணத்திற்காக இன்னொரு தேசத்தில் வரிகட்டி வாழ்கின்றன. கால் கிலோ ஆட்டு கறி எடுத்து அதை நமக்கே முழுதும் வைத்துவிட்டு வெறும் குழம்பை குடித்த ஆத்தாவுக்கு என்ன செய்யபோகிறோம்?

சொந்த சகோதரன் திருமணத்திற்கு கூட செல்லமுடியாமல் பணம் சம்பாதித்து யாருக்கு கொடுத்து என்ன செய்யபோகிறோம்?

விவசாய வேலைகள் பார்க்கும் பொழுது இந்த சேத்துக்குள்ள பொழைக்கிறது எங்களோட போகட்டும் என்று எங்கள் கால்களில் சேறு ஒட்டாமல் வளர்த்த பெற்றோர்களுக்கு அவர்கள் வயதானகாலத்தில் என்ன செய்ய போகிறோம்?

நல்ல நாளுக்கு பிள்ளைகளுக்கு மட்டும் புது துணி கொடுத்து, தான் பழையதை கட்டிய ஆத்தாவுக்கு என்ன செய்யபோகிறோம்?

ஒரு பீடியை மூணு முறை அமர்த்தி குடித்து அந்த இருபது பைசாவை சேமித்து பள்ளி கட்டணம் கட்டிய அப்பனுக்கு என்ன செய்யபோகிறோம்?

இங்கே இருக்கும் வசதி தான் பிறந்த ஊரில் இல்லை அதனால் தான் வெளிநாட்டில் இருக்கேன் என்பவர்களிடம் கேட்கிறேன்? இதை  உங்கள் பெற்றோர்கள் நினைத்திருந்தால் நீங்கள் இங்கே வந்திருப்பீர்களா?

பணம் காய்க்கும் மரமாகத்தான் வளர்த்தார்களோ பெற்றோர்கள், பாசத்தையும் காட்டவில்லையோ? தன சுகத்தை தவிர்த்து பிள்ளைகளின் சுகத்திற்காக வாழ்ந்த அந்த வாழும் தெய்வங்களுக்கு என்ன செய்யபோகிறோம்?

ஒரு மனிதனின் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் அவன் இறக்கும் பொழுதும், இறந்த பின்னும் தெரியும். தன் விழி திறந்து குழைந்தையை வளர்த்த தாயின் விழி மூடும்போது அந்த குழைந்தைகள் இருக்க வேண்டாமா அல்லது பணமே போதுமா?

மனது வலிக்கிறது..................

அபாயம்::சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு

சின்னஞ்சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க இந்தியாவின் மத்திய அரசு முகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகளுக்கு சாவு மணி அடிக்க அரசு துடிக்கிறது. இந்த மசோதாவினால் இந்தியாவில் யாரும் இந்தியர்கள் கடை நடத்தமுடியாது, எல்லோரும் வெளிநாட்டுமுதாளிகளுக்கு வேலை செய்து பிழைக்க வேண்டும். ஏற்கனவே ரிலையன்ஸ் 50 விழுக்காடு சிறு வியாபாரிகளை அழித்துவிட்டது. மிச்சம் உள்ள அனைவரையும் அழிக்க மத்திய அரசு துடிக்கிறது.

நம் உழைப்பு வெளிநாட்டு முதாலாளிகளை தின்னு கொழுக்க செய்யும், வெளிநாட்டு பணத்தின் மதிப்பு உயரும் நம் உழைப்பும் நம் பணத்தின் மதிப்பும் குறையும். நாம் விளைவித்தை பொருள்களை நம்மிடமே விற்று அவன் உயருவான், நாம் உழைத்து உழைத்து ஓடாய் தேய்வதுதான் மிச்சம். நம்மிடம் இருக்கும் ஒரே உரிமை ஒட்டு அதனை மட்டும் மறக்காமல் போட்டு இந்த  பீய் தின்னி அரசியலை காப்போம்... வெட்கமாய் இருக்கிறது.....

திங்கள், 5 டிசம்பர், 2011

நான் ஏன் இந்து இல்லை?

நான் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் என்னை ஒரு இந்து என்று கூறினார்கள் நானும் நம்பினேன் நான் ஒரு இந்து என்று.... ஆனால் சில காலம் சென்ற பிறகு உணர்ந்தேன் நான் எப்படி இந்துவாக இருக்க முடியும்?

 ஒரு கூட்டம் கோழி, ஆடு கறிகளை சாப்பிடாது, கோவில்களில் பலியும் கொடுக்கமாட்டார்கள். ஆனால் எங்க கோவில்களில் விழா என்றாலே கோழியும் ஆடும்தான் முதல் விருந்தாளி.

எங்கள் சாமியை உலகத்தை படைத்தவன் என்று சொல்லமாட்டோம், எங்களை காக்கிற காவல்காரன் என்று தான் சொல்லுவோம். மாறாக இந்து மதத்தில் சாமிதான் இவ்வுலகத்தை படைத்தான் என்று சொல்லுவார்கள்(அந்த கடவுளுக்கு பக்கத்து நாடான சீனா ஏன் தெரியவில்லை?)

 எங்கக் சாமிக்கு பூசைகள் செய்ய எங்கள் சொந்தகாரரே பூசாரியாக இருப்பார், அவரை தேர்ந்தெடுப்பதே ஒரு விழாவாக நடத்துவோம். பூசாரி இல்லாவிட்டாலும் நாங்களே எங்கள் சாமிக்கு பூசை பண்ணுவோம். அனால் இந்து மதகோவில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே சாமியை தொட முடியும்.

எங்கள் சாமிக்கு எங்கள் மொழியிலே பூசை பண்ணுவோம், ஆனால் அங்கே எங்களுக்கு புரியாத தெரியாத மொழியில் நடக்கும்.

எங்கக் சாமி எங்கள் குடும்பங்களில் ஒரு உறுப்பினராக இருப்பார், ஆனால் இந்து சாமிகள் எனச்சொல்லப்படும் சாமிகள் அவ்வாறில்லை எங்களுக்கு...

இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் பொழுது நான் எப்படி இந்துவாவேன்? நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்லன், நான் ஒரு தமிழன் இந்த ஒரு அடையாளம் பொது எனக்கு.

உலகத்தை படைத்த கடவுளுக்கு ஏன் நாடுகளின் எல்லை?

சிறுவயதில் இருந்தே பல கதைகள், சினிமாக்கள் கடவுள்களை பற்றியும் அவர்கள் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் எங்களுக்கு உரைத்தார்கள். கொஞ்சம் விவரம் தெரிய ஆரப்பித்த பிறகுதான் புரிந்தது அது எல்லாம் கற்பனை கதைகள் அதாவது பொய் கதைகள் சொல்லி குழந்தைகளை ஏமாற்றுகிறார்கள் இன்னும் தொடர்கிறது அந்த பொய் கதைகள்......

உலகத்தை படைத்து, காத்து, அழிக்கும் அந்த மூன்று கடவுள்களுக்கு உலகம் என்றால் இந்தியா மட்டும்தானா? ஏன் பாகிஸ்தானை, சீனாவை தெரியவில்லை? இதே கதை தான் மற்ற மதங்களிலும் உலகத்தை படைத்த அல்லாவிற்கும், எயசுவிற்கும் இந்தியா தெரியவில்லை, அப்புறம் என்னடா கடவுள்... 

மனிதனுக்கு மட்டுமே நாடுகளின் எல்லை உள்ளது, அதாலால் கடவுள் எதோ ஒரு களவாணி பையலால் அவன் பிழைக்க உருவாக்கப்பட்ட ஒன்று... 
இதனால் கடவுள் உறுதியாக இல்லை.. 

டிசெம்பர் 6


சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக விடுதலை பெற போராடிய மற்றும் இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல அது ஒரு சட்டப்புத்தகம் என்று முழங்கிய "பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கார்" அவர்களின் நினைவு நாள்.











**************************************************************************
இன்று தான் அதவானி என்ற குரங்கும் அதன் சொந்த பந்தங்களுடன் ஊர்வலமாக சென்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த நாள். இல்லாத  இந்து மற்றும் முசுலிம் மக்களின் மனதில் மத வெறியை ஊற்றிய நாள். இந்த நாளுக்கு பிறகே இந்தியாவில் குண்டுவெடிப்புகள் அதிகமானது.... மதத்தை வைத்து அரசியல் பண்ணுவதை விடை உலகில் கீழ்த்தரமான தொழில் எதுவும் இல்லை. மதத்தையும் அதன் அடிப்படை அமைப்பையும் வேரறுப்போம்.....

மக படுக்கிறது தெருவில அத கூட்டுறதுக்கு 78 விளக்கமாறு கேட்குதாம்

இது மாதிரிதான் இருக்குது இந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க கட்சியின் ஆட்சி. தேவை இல்லாத பொருள்களை எல்லாம் இலவசமா கொடுத்துட்டு, அத்தியாவசியமான பால், போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை ஏற்றி மக்களை தமிழக மக்களை ஒரு மாட்டு கூட்டம்போல் மதித்துள்ளார் இந்த ஜெ. இந்த நிலையில் இந்த முதல்வர் கிழித்த கிழிப்புக்கு ௪வாரம் கொடநாட்டில் ஒய்வாம்... இதலாம் எங்க பொய் சொல்லுறது... தெயரியாமதான் கேட்குறேன் இந்த ஜெ எதுக்கு அரசியலுக்கு வந்துச்சு? எதோ ஒரு பெரிய கம்பெனி முதலாளிபோல் இருக்குது இந்த ஜெ. 

நாம் என்று யோசிக்க போறோம் இந்த அழுக்குமூட்டை அரசியல்வாதிகளை களை எடுக்க போறோம்...

குறிப்பு: தயவுசெய்து இந்த ஜெ-வை அம்மா என்று அழைத்து அம்மா என்ற வார்த்தைக்குரிய உயரிய மதிப்பை கெடுக்கதிர்கள்.

முல்லை பெரியாறு அணையை பற்றிய முழுவிவரம் கூறும் காணொளி

முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் மற்றும் பாசன நீர் வழங்கி வருகிறது, இந்த அணை நீரை நம்பி ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் உள்ளனர். ஒரு சில அரசியல் மற்றும் கேரளா அரசின் சுய லபத்தினால் இந்த அணையை மூட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பெரியாறு அணை மூடப்படுமானால் மேற்கூறிய ஐந்து மாவட்டங்களும் பாலைவனமாக மாறும். ஓர் இந்தியா என்று நம் காதுகளில் பூச்சுற்றும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது..

கீழே உள்ள காணொளி இந்தனை பற்றி மிகவும் விளக்கமாக கூறுகிறது.




ஞாயிறு, 27 நவம்பர், 2011

மாவீரர் நாள்

தமிழீழம் அடைய தன்னிகரில்லா உயிரை வீரப்போரில் தியாகம் செய்த வீரத்தமிழர்களின் நினைவு நாள். தமிழர்களின் அடையாளமாக திகழும் தேசியத்தலைவர் பிராபகரன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மாவீரர் நாள் வாழ்த்துக்கள் !!!

நம்பிக்கையுடன் இருப்போம் தமிழர்களின் தனி நாடு அடைவோம்!!!

வெள்ளி, 18 நவம்பர், 2011

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு நாள்

Voc1.jpgஆங்கிலேய கப்பல் கம்பெனிக்கு போட்டியாக கப்பல் கம்பெனி நடத்தியவர். பாரதியாருடன் இணைந்து திலகர் காங்கிரஸ் பிரிவில் சேர்ந்து தீவிர சுசந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடித்தியவர். நாட்டுக்காக தன குடும்ப சொத்தை இழந்து தன கடைசி நாளில் வறுமையில் வாடியவர். இன்று அவரை ஒரு சாதியுடன் இணைத்து அவரின் தியாகத்தை கேவலபடுத்தும் சமுதாயம். அவரையும் அவரின் போரட்டாத்தையும் மறந்து வ.உ.சி யார் என்று கேட்கும் நிலைக்குன் வந்துவிட்டோம். ஒரு சமூகம் தழைக்க வேண்டுமானில் அவர்களின் வரலாறு மிக முக்கியம்.



புதன், 16 நவம்பர், 2011

அமெரிக்காவில் வருகிறது இணையத்தை உளவுபார்க்கும் சட்டம்(SOPA)

இன்று அமெரிக்க செனட் சபையில் ஒரு புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதன்படி அனைத்து இணையமும் அரங்க்காத்தினால் கண்காணிக்கப்படும், விதிகளை மீறும் இணையங்கள் அந்நாட்டில் தடைசெய்யப்படும். இந்த விதிக்கு google, yahoo, facebook , twitter and etc... என எல்லா பெரிய இணையங்களும் அடங்கும், இதுமாதிரி விதி ஏற்கனவே ஈரான், சிரியா போன்ற நாடுகளில் உள்ளது. 

அரேபிய நாடுகளில் நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு இந்த இணையங்கள் உதவியாக இருந்ததை பார்த்து அமெரிக்க பயந்துவிட்டதோ? இந்த விதியின் மூலம் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு எழுத்துகளையும் அரசால் கண்காணிக்க முடியும்..... வாழ்க இணைய சுதந்திரம்...............

யாகூ மற்றும் ஹட்மாயில் இரண்டும் மொக்கை என்று மீண்டும் நிருபித்துவிட்டது.

கடந்த பல வருடங்களாக இந்த இரண்டு சனியங்களையும் பயன்படுத்துவதே இல்லை,இருந்தாலும் எதோ ஒரு கில்லாடி இந்த ரெண்டு மொக்கைகளையும் உடைத்துவிட்டார்கள். இந்த ரெண்டு மெயில்களும் லுக் அண்ட் பீல் தான் கேவலாமாக உள்ளது என்றால், பாதுகாப்பும் மொத்தமாக மொக்கையாக உள்ளது................. 

கூடங்குளம் போராட்டம்: வைகோ, திருமா, ஜி.கே. மணி,மேதா பட்கர் மீது வழக்கு

கூடங்குளம் அணுமின் பிரச்சினையில் ஜெயலலிதா நடந்துகொண்டவிதம் தொடக்கத்திலிருந்தே பணத்தில் அவரின் குறியாக இருந்தது. பிரதமர் மங்கி சங்கி கடிதம் அனுப்பியுள்ளேன் என்று சொல்ல இந்த ஜெயா பிரதமரின் கடிதம் கிடைக்கவில்லை என்று சொன்னது. பிறகு ஜெயாவின் பக்கத்தில் இருக்கும் சீமான் திடீரென்று போராட்டாத்திற்கு ஆதரவு தந்தார். 
இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு சில காமெடி பீஸ்களை போராட்டத்திற்கு தூடியதாக கைது செய்திருக்கிறார்கள்...... இதனால் அனைவருக்கும் தெரிவுக்கும் செய்தி என்னெவென்றால் ஜெயாவுக்கு எதோ ஒன்று கிடைத்துவிட்டது...... கூடங்குளம் அணு மின்நிலையம் யாருக்கு சாதகமோ பாதகமோ இந்த ஜெயாவுக்கு லாபம்தான்........நடக்கட்டும் நடக்கட்டும்.....


வெள்ளி, 11 நவம்பர், 2011

இந்து என்றால் சொல் சம்மதமா

ம.க.இ.க படலை கேட்டபொழுது என்னை பதித்த பாடல் வரிகள்.

"சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா?
சொல்லிது உன்னால் முடியுமா?
நீ! உண்டு ஒதுங்கும் விலங்கினமா? - இல்ல 
கண்டும் காணாத கல்லினமா?"

கோவன் குரலில் கேட்கும்போது தனி சுகம்.......

நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்

உழைக்கும் வர்க்கம் தனக்கென்று ஒரு அரசாங்கத்தை உருவாக்கிகாட்டிய நாள்.

இவ்வுலகம் உழைக்கும் மக்களுக்கே!!!!

வியாழன், 20 அக்டோபர், 2011

கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய நாள் 17.10.1799

Kattabomman_Copyright_Free.jpgவெள்ளையனை எதிர்த்து போராடிய கட்டபொம்மனை தூக்கிலேற்றிய நாள். வீரம் செறிந்த தமிழ்மண்ணிற்கு ஒரு உதாரணமாக சிறுவயதில் இருந்தே ஊட்டி வளர்க்கப்பட்ட கட்டபொம்மன் ஊரின் நடுவில் ஒரு புளியமரத்தில், கயவர்களால் காட்டிகொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட நாள்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

சண் பிரான்சிஸ்கோ பிச்சைகாரர்கள்



அப்புறம் இங்கு கஞ்சா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் இல்லை. நிறைய பேர் கஞ்சா குடிப்பார்கள்.

வாரத்தில் இரண்டு தடவையாவது வருவார் 

புதுசு 

பைத்தியம் மாதிரி ஆனால் இல்லை.

வரும்......

கூட்டமாக இருந்தாலும் தனிமை

இந்தியாவிலுருந்து அமெரிக்க வந்தபிறகு இந்த உணர்வு எனக்கு வருகிறது. நம்ம ஊரில் எங்கு இருந்தாலும் நாம் தனிமையாக உணரமாட்டோம், ஆனால் வெளியூரில் எத்தனை பேருடன் இருந்தாலும் நாம் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு வருகிறது. எல்லோருக்கும் அவருடைய பிறந்து வளர்ந்த ஊர் தான் சொர்க்கம்.

வேண்டாம் இந்த வன்முறை ஆயுதங்கள் - San Francisco Flight show

அக்டோபர் 8 தேதி சண் பிரான்சிஸ்கோவில் நடந்த விமான சாகாச நிகழ்ச்சி பார்க்க என் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அந்நிகழ்ச்சியில் ஒரு பெரிய விமானம் அதிக சத்தத்துடன் வந்தபொழுது என் மகள் பயந்து அழுதுவிட்டாள். அவளை என் நெஞ்சோடு அனைத்திருக்கையில் அவளின் இதயம் துடிப்பது என் நெஞ்சில் தெரிந்தது. இன்னும் என் பொண்ணு வினமான சத்தம் கேட்டாலே காதை பொத்துகிறாள், அன்றிரவு தூங்கும்போது விமானம் வருது என்று புலம்புகிறாள்.

பொழுதுபோக்கிற்காக பார்க்கும்போது இந்த பயம் என்றால், ஈழத்தில் மனிதர்களை கொள்ள வந்த அந்த விமானங்களை பார்த்த குழந்தைகள் எப்படி இருந்திருக்கும், நினைக்கும் போதே நெஞ்சு பதைக்கிறது.

வேண்டாம் இந்த வன்முறை ஆயுதங்கள்.

சே குவேரா சுட்டுக்கொல்லப்பட்ட நாள்

1967 அக்டோபர் 9 சே குவேரா சுட்டுக்கொல்லப்பட்ட நாள். 
அவர் எதிரிகள் எதனை அழிக்க நினைத்தனரோ அதைவிட சே வாழ்கிறார். இன்றைய இளைஞ்கர்களின் நாயகனாக...............

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்

இப்படி படத்த காட்டியே அரசியலுக்கு வந்துட்ட, ஆனாலும் அந்த படம் காட்டுற புத்தி போகமாட்டேங்குது...... 
அதான் சொல்லுவாங்க, "ஏதோவோ குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் அது அங்கதான் போகும்...."
அந்த அதுவா இது....................?

ஏ பாத்துக்கோ நானும் ரவுடிதான் - ரூ.6 கோடியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு புதிய குண்டுதுளைக்காத கார்!

இந்த காமெடி பீசுக்கு இது தேவையா? இத ஒரு ஆளாவே மதிக்கல, இதுக்கு ஒய்யாரமா ஒக்கார ரூ.6 கோடியில் கார் கேக்குது.
இப்ப தெரியுது ஏன் கார் விலை ஏறுதுன்னு........

ரூ.1,500க்கு உலகின் குறைந்த விலை 'டேப்லெட் கம்ப்யூட்டர்' இந்தியாவில் அறிமுகம் - போங்கடா பொசகெட்ட பயலுகளா!!!!!!!!!!

இது இப்போ ரொம்ப அவசியமாக்கும்? இப்படியே மக்களுக்கு எல்லாவித போதை பொருளைகொடுத்துட்டு நீங்க கோடி கோடியாய் அடிங்க, அப்பதான எவனும் கேள்விகேக்கமாட்டன். 

பெட்ரோல், சமையல் வாயு விலைய குறைக்க வக்கில்லை, மக்களுக்கு மருத்துவத்தை கொடுக்கு முடியல, கம்ப்யூட்டர் டேப்லெட் தரங்கிலாம், இது எப்படி இருக்குனா, மகளுக்கு குடிக்கவே காஞ்சி இல்லையாம், கொண்டைக்கு குறிஞ்சி பூ கேக்குதாம்...

போங்கடா பொசகெட்ட பயலுகளா!!!!!!!!!!

புதன், 5 அக்டோபர், 2011

தந்தை பெரியார்: தீபாவளி பண்டிகை என்றால் என்ன? எதற்காக கொண்டாடப்படுகிறது?

Thanthai_Periyar.jpg
இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? "அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் "நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்" என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றிசுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களேயல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான "பழய வழக்கம்" "பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்" என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பன ரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். "எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?" என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? "நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்" என்றால் அதற்கு "நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்" என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ "காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது" என்றால் உடனே "கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா" என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய "காளைமாடு எப்படி கன்றுப் போடும்" என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் "ஆரியர் வேறு தமிழர் வேறு" என்பாரும் "புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை" என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு "நாங்கள் தான் பிரதிநிதிகள்" என்பாரும் மற்றும் "திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு" மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற "படித்த" கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.

அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின் கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம்.அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? "எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு"க்கும் பூமி "தேவி"க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி "தேவி" என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! "பொறுமையில் பூமிதேவிபோல்" என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த "அம்மையாரை" உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது? புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது? சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். 

 ஈ.வெ.ரா. - "குடி அரசு" கட்டுரை 01.11.1936

சனி, 1 அக்டோபர், 2011

சண் பிரான்சிஸ்கோ sales Man.


நான் தினமும் பார்க்கும் ஒரு நபரில் இந்த பயனும் ஒருவன். காலையில் 9.30 க்கு வந்து மாலை 5 மணிவரை (அதற்கு பிறகு எனக்கு தெரியாது, 5 மணிக்கு வீட்டிற்கு வந்துருவேன்) ரோட்டில் நின்றுகொண்டே வரும் போவோரை கடைக்கு அழைக்கணும். 


காமராசர் நினைவுநாள்


Kamarajar.jpgதன் நாட்டு மக்கள் கற்க கிராமந்தோறும் பள்ளிகள் திறந்து ஒரு படித்த தமிழ் சமூகத்தை உருவாக்கியவர். அரசியல்வாதி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்ந்துகாட்டியவர். காமராசர் தமிழ் சமுதாயத்துக்கு கிடைத்த ஒரு முத்து. அவர் நினைவுநாளில் இந்த சமூகத்துக்கு அவர் செய்த சேவைகளை நினைவு கொள்வோம்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

டயர் செருப்பு

நான் சிறுவயதில் கிராமத்தில் இருக்கும் போது காலில் முள் குத்தாத இடமே இல்லை எனலாம். மாடு மேய்க்கும்போது . சீமைகருவேலம் விறகு வெட்டும் போது என செய்யும் வேலைகளில் எல்லாவற்றிலும் முள் இருக்கும். எங்கள் வீடு, மாட்டு கோட்டம் ஏன் கிராமமே கருவேலம் மரங்களின் நடுவில்தான் இருக்கும்.

இரப்பர் செருப்பு அந்த முள்ளுக்கு ஏதோ பஞ்சு போல தோணும்போல, பயபுள்ள காலை பதம்பார்க்காம விடாது. ஒருதடவ விறகு வெட்டும்போது கையில் முள்குத்தி ரத்தம் சும்மா பீறீட்டு அடிச்சது. நாங்க படும் பாட்டைபார்த்த எங்க அப்பா, ஒருதடவை உசிலம்பட்டிக்கு மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கும்போது ஒரு செருப்பை பார்த்து வாங்கிவந்தாரு, அது லாரி டயருல செஞ்சது. கொய்யால செம வெயிட்டு அது, என் வயசுல அத போட்டுக்கு நடக்கமுடியும் ஆனா ஓடமுடியாது. அத போட்டுக்கு மாடுமேய்க்க போனா மாடு நம்மல மேய்ச்சுரும், அதும் சுட்டி கண்ணுக்குட்டிக இருக்கே அது நம்மல ஓடவிட்டே தவிக்கவிடும், அதுவும் இந்த செருப்ப போட்டா அதுக கூட ஒண்ணுமே பண்ணமுடியாது. அதுனால மாடுமேய்க்க இந்த டயர் செருப்பை போடமாட்டேன். 

ஆனா விறகு வெட்ட இத போட்டம்னா நான்தான் அங்க ராசா, பயபுள்ள எந்த முள்ளும் நம்மள தொட முடியாதுல. சர்வ சாதாரணமா ஆளுயர முள்ளுமேல நடக்கலாம். முள்ள விறகு வெட்ட முதலில் சுத்தி இருக்குற சின்ன முல்லுகளை எல்லாம் ஒதுக்கி வழி ஏற்படுத்தி, பிறகு பெரிய விறகுகளை வெட்டனும், அதுலாம் டயர் செருப்பு இல்லாதபோது, இந்த செருப்பு வந்த பிறகு இந்த சின்னப் பயலுகளை காலாலே மிதித்துட்டு, நேரா போய் விறகு வெட்டி எடுத்து வருவோம்.

இதேமாதிரி பள்ளி கூடத்துல கருப்பு கலர்ல ஒரு செருப்பு தந்தாங்க, அது ஒரு நாள் கூட தாங்கல, மாட்டு மேய்க்ககூட உதவல, ஆனா இந்த 20 ரூபா டயர்  செருப்பு வருசகணக்கா இருந்தது என் வீட்டில்.
இந்த டயர் செருப்பு என் வாழ்வை(காலை) காப்பாற்ற வந்த ஒரு....... தெரியல எதோ ஒன்னு....

நேற்று என் குழந்தைகளுக்கு செருப்பு போடும் போது, என் அப்பா அந்த டயர் செருப்பை வாங்கி எங்களுக்கு கொடுத்தபோது வந்த மகிழ்ச்சியான சம்பவம் ஞாபகம்வந்தது.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு திர்ப்பு வழங்கியுள்ளது.

சமச்சீர் கல்வி வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு இன்று காலை 10 மணிக்கு

சமச்சீர் கல்வி வழக்கு உச்சநீதிமன்றம்  தீர்ப்பு இன்று காலை 10 மணிக்கு  

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

புதன், 3 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி வழக்கைப் பற்றிய செய்திகளை காணோம்

 சமச்சீர் கல்வி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 26 (௨௬)-முதல் நடக்கிறது. அதற்கு முந்தைய விசாரணையில் ஆகஸ்டு 2(௨)-குள் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை தருமாறு உத்தரவும் போட்டிருந்தது. கடந்த 5 நாட்களாக இதனைப் பற்றிய ஒரு செய்தியையும் காணவில்லை. எந்தவொரு தினசரியும் சமச்சீர்கல்வி பற்றி செய்தி வெளியிடவில்லை. மாணவர்களுக்கு நூல்கள் கொடுத்ததாகவும் தெரியவில்லை.

அ.தி.மு.க. அரசு பத்திரிக்கைகளை வாங்கிவிட்டதோ.... ஒரு அரசு நினைத்தால் எப்படி ஒரு செய்தியை மூடிமறைக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

வாழ்க ஜனநாயகம்........

திங்கள், 18 ஜூலை, 2011

சமச்சீர்கல்வி இந்த ஆண்டே அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சமச்சீர்கல்வி இந்த ஆண்டே அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. வரவேற்கவேண்டிய முகவும் முக்கியமான தீர்ப்பு. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்கிறது. இதில் மக்களின் நலனைவிட ஆளுபவர்களின் ஆணவம்தான் தெறிகிறது. இந்த கருணாநிதி , ஜெயலலிதா சண்டையில் பாதிக்கப்படுவது நாம் தான். உச்ச நீதிமன்றம் போன முறை போல மொக்கையான தீர்ப்பை வழங்காமல் நல்ல தீர்ப்பை வழங்கும் என் எதிர்பார்ப்போம்.

இந்த பற்றி வினவு கட்டுரை:

வியாழன், 14 ஜூலை, 2011

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் (July 15 1903 - October 2 1975)

இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

இன்று தமிழக மக்களுக்கு கல்வி கிடக்க செய்த பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள். அவரை நினைவில்கொண்டு நம் சமூகம் வளர உழைப்போம்

really We MISS you sir. We need a politician like you. But can't find one....

ta.wikipedia.org
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்ம